தொண்டை நோய்த்தொற்று - Throat Infection in Tamil

Dr. Nabi Darya Vali (AIIMS)MBBS

May 22, 2019

July 31, 2020

தொண்டை நோய்த்தொற்று
தொண்டை நோய்த்தொற்று

தொண்டை நோய்த்தொற்று என்றால் என்ன?

உடலின் ஒரு பகுதியான தொண்டை எசோபாகசிற்கு உணவையும் (உணவுக்குழாய்) மற்றும் டிராச்சியாவிற்கு காற்றையும் (காற்றுக்குழல்) கொண்டு செல்கின்றது. மருத்துவ சொல்லாக்கத்தில், தொண்டைப்பகுதி பைரினெக்ஸ் என அழைக்கப்படுகின்றது. தொண்டை நோய்த்தொற்று என்ற நிலையில் தொண்டையில் வலி, கரகரப்பான தன்மை மற்றும் எரிச்சல் ஆகியவைகள் உணரக்கூடும். தொண்டை தொற்றுக்களுக்கு மிகவும் பொதுவான காரணம் வைரஸ்கள் ஆகும், அத்துடன் பாக்டீரியாக்களும் இந்நிலைக்கு காரணிகளாக இருக்கலாம்.

அதன் முக்கிய அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் என்ன?

தொண்டை நோய்த்தொற்றுக்களினால் எதிர்கொள்ளப்படும் பொதுவான அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:

அதன் முக்கிய காரணங்கள் என்ன?

தொண்டை தொற்றுகளின் முக்கிய காரணிகள் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களே ஆகும்.

  • தோராயமாக 90% தொண்டை தொற்றுநோய்கள் வைரஸ்களால் ஏற்படக்கூடியது. பொதுவாக தொண்டை நோய்த்தொற்றை ஏற்படுத்தும் வைரஸ்கள் ஃப்ளு, சளி, கக்குவான் இருமல், சின்னம்மை மற்றும் தட்டம்மை போன்றவைகளை ஏற்படுத்தக்கூடியவை.
  • பாக்டீரியாவினால் உண்டாகும் தொண்டை தொற்றுகள் பொதுவாக ஸ்ட்ரெப்டோகோகால் தொற்றினால் ஏற்படுகின்றது.

புகைபிடித்தல், மாசுபாடு மற்றும் ஒவ்வாமைகள் ஆகியவை தொண்டை தொற்றுகளுக்கான அபாயத்தை அதிகரிக்கக்கூடியவை.

இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?

மருத்துவர் நோய் பாதிக்கப்பட்ட நபருக்கு முழுமையான உடல் பரிசோதனையை மேற்கொள்வதோடு, காது, மூக்கு அல்லது தொண்டை தொற்று போன்ற நோய் பாதிப்புள்ள தனிநபரைச் சுற்றி இருந்தீர்களா என கேட்பார். மருத்துவர் காய்ச்சல் இருப்பதை அறிய உடல் வெப்பநிலையை பரிசோதிப்பார், மேலும் காது, மூக்கு, கழுத்து பகுதியில் உள்ள நிணநீர் முனைகளை சோதிப்பார். தொண்டை தொற்று இருப்பதாக மருத்துவர் சந்தேகித்தால், தொண்டை பகுதியிலிருந்து எடுக்கப்படும் திரவத்தை கொண்டு ஸ்ட்ரெப் சோதனை மற்றும் ஆய்வக சோதனைகளை பரிந்துரை செய்வார்.

தொண்டை தொற்றிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு பின்வரும் சிகிச்சை நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்படுகின்றன:

  • பாக்டீரியல் தொற்று நோய்க்கு ஆண்டிபயாடிக்குகள் பரிந்துரைக்கப்படுகிறது.
  • வைரல் தொற்று நோய்க்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது.
  • தொண்டை வலி குணமடைய இபுப்ரோபென் மற்றும் ஆஸ்பிரின் போன்ற வலி நிவாரணிகள்.
  • உடலில் ஏற்படும் நீரகற்றத்தை தடுக்க அதிகளவிலான தண்ணீர் உட்கொள்தல் அவசியம்.

பரிபத்துரைக்கப்படாத தொண்டை லோஜின்ஜி மற்றும் தொண்டைக்கு இதமளிக்கும் கூல் மிஸ்ட் வேப்பரைஸர் தொண்டை வலியிலிருந்து நிவாரணம் அளிப்பதோடு தொண்டையில் ஏற்படும் பொதுவான அறிகுறிகளுக்கும் உதவுகிறது.

சிறந்த சுகாதார பழக்கங்களை பேணிக்காப்பது தொண்டை நோய்த்தொற்றை தடுப்பதற்கு உதவக்கூடும்.



மேற்கோள்கள்

  1. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Simple goiter.
  2. American Thyroid Association. [Internet]: Virginia, USA ATA: Complementary and Alternative Medicine in Thyroid Disease (CAM).
  3. Michigan Medicine: University of Michigan [internet]; Thyroid Disorders.
  4. Healthdirect Australia. Causes of thyroid problems. Australian government: Department of Health
  5. Healthdirect Australia. Thyroid problems. Australian government: Department of Health
  6. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Thyroid Diseases.
  7. American Thyroid Association. [Internet]: Virginia, USA ATA: Thyroid Surgery.

தொண்டை நோய்த்தொற்று க்கான மருந்துகள்

Medicines listed below are available for தொண்டை நோய்த்தொற்று. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.