மேல் சுவாசக்குழாய் தொற்றுநோய் என்றால் என்ன?
மூக்கு, தொண்டை மற்றும் குரல்வளை அடங்கிய மேல் சுவாசக்குழாயில், நுண்ணுயிரி, நச்சுயிரி அல்லது பூஞ்சையினால் ஏற்படும் நோய்த்தொற்று, மேல் சுவாசக்குழாய் நோய்த்தொற்று (யு.ஆர்.டி.ஐ) ஆகும். சைனசைடிஸ் எனப்படும் மூச்சுக்குழலறை அழற்சி, ரைநைடிஸ் எனப்படும் நாசியழற்சி, லாரிஞ்சைடிஸ் எனப்படும் குரல்வளை அழற்சி மற்றும் ஃபாரிஞ்சைடிஸ் எனப்படும் அடி தொண்டை அழற்சி ஆகியவை பொதுவாகக் காணப்படும் யு.ஆர்.டி.ஐ நோய்கள் ஆகும். பெரும்பாலான யு.ஆர்.டி.ஐ நோய்கள் கடுமையானவை அல்ல, எனினும் மருத்துவ தலையீடு தேவைப்படும் சிலவற்றிற்கு சிகிச்சை அளிக்காவிடில் அது தீவிர நோய்த்தொற்றாக மாற வாய்ப்புள்ளது. மூச்சுக்குழாய் என்பது காற்றில் உள்ள நுண்ணுயிர்களுடன் நேரடி தொடர்பில் இருப்பதால், நோய்த்தொற்றிற்கான சுலபமான இலக்காகிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் என்ன?
நோய்த்தொற்றை உண்டாக்கும் நுண்ணுயிரி அல்லது நச்சுயிரியின் வகையை பொறுத்து இதன் அறிகுறிகள் வேறுபடும். பொதுவாக நிகழும் யு.ஆர்.டி.ஐ நோய்களில் நிகழும் சில அறிகுறிகள் பின்வருமாறு:
- தலைவலி.
- மூக்கடைப்பு அல்லது மூக்கு ஒழுகுதல்.
- உடல் வலி.
- காய்ச்சல்.
- சோர்வு.
- சளி உடனோ அல்லது இல்லாமலோ இருமல்.
- தூங்குவதில் சிரமம்.
- தும்மல்.
- தொண்டை வலி.
- அரிதாக மார்பக வலி.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
யு.ஆர்.டி.ஐ நோய்களில் முக்கிய காரணங்கள் பின்வருமாறு:
- ஃப்ளூ எனப்படும் சளிக்காய்ச்சல்.
- சாதாரண சளி.
- பருவக்காலத்திற்குரிய ஒவ்வாமை அல்லது தட்பவெப்பநிலை மாற்றம்.
- யு.ஆர்.டி.ஐ நோய் பாதிப்புள்ள நபருடன் நேரடி தொடர்பு வைத்திருத்தல்.
- சளிக்காய்ச்சல் நச்சுயிரி, தடுமன் நச்சுயிரிகள், கோரோனா நச்சுயிரிகளை கொண்ட தும்மல் அல்லது இருமல் திவலைகளை மூச்சிழுத்தல்.
இது எவ்வாறு கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது?
அநேக யு.ஆர்.டி.ஐ நோய்களை நோயாளியின் அறிகுறிகளை வைத்து கண்டறியலாம். ராபிட் ஆன்டிஜென் கண்டறிதல் சோதனை, ஹெடெரோஃபில் எதிர்பொருள் சோதனை, ஐஜிஎம் எதிர்பொருள் சோதனை போன்ற சோதனைகள் பரிந்துரைக்கப்பட்டு நுண்ணுயிரியோ அல்லது நச்சுயிரியோ நோய்க்கான காரணிகளா என்பதை கண்டறியலாம்.
யு.ஆர்.டி.ஐ நோய்க்கு அளிக்கப்படும் பொதுவான சிகிச்சைகள் பின்வருமாறு:
- ஹிஸ்டமின் எதிர்ப்பிகள் மற்றும் மூக்கடைப்பு நீக்கி ஆகியவை மூக்கு சுரப்பு மற்றும் தும்மல் குறைவதற்கான பரிந்துரைக்கப்படும்.
- உப்பு கலந்த நீரில் கொப்பளித்தல் தொண்டைவலியை இதமாக்க பரிந்துரைக்கப்படும்.
- நுண்ணுயிரியோ அல்லது நச்சுயிரியோ காரணமாக இருக்கும் ஃபாரிஞ்சைடிஸ் போன்ற யு.ஆர்.டி.ஐ நோய்க்கு நுண்ணுயிர்க்கொல்லிகள் மற்றும் நச்சுயிரிமுறிகள் பரிந்துரைக்கப்படும்.
- மருந்தகங்களில் கிடைக்கும் சர்க்கரை கலந்த மிட்டாய் வடிவில் இருக்கும் மருந்துகள் மற்றும் மூக்கில் விடப்படும் உப்பு நீர் சொட்டு மருந்து ஆகியவை சைனசைடிஸில் இருந்து நிவாரணம் தரும்.
- மிதமான சூட்டுடைய தேநீர் அல்லது சூப் போன்றவை புண் பட்ட தொண்டைக்கு இதம் அளிக்கும்.
- அசிடமினோஃபென் போன்ற வலி நிவாரணிகளும் வலியை போக்க கொடுக்கப்படுகின்றன.