கருப்பை நார்த்திசுக்கட்டிகள் - Uterine Fibroids in Tamil

Dr. Rajalakshmi VK (AIIMS)MBBS

December 29, 2018

April 28, 2023

கருப்பை நார்த்திசுக்கட்டிகள்
கருப்பை நார்த்திசுக்கட்டிகள்

சுருக்கம்

கருப்பை நார்த்திசுக் கட்டிகள் (தசைத்திசுக் கட்டி, கருப்பை தசை கட்டி, தசைப்புற்று அல்லது நார்த்திசுக் கட்டி என்றும் அழைக்கப்படுகின்றன) என்பது கருப்பையகத்தின் (கருப்பை) தசை திசுக்களில் இருந்து உருவாகும் புற்றுநோய் அல்லாத (வளர்ச்சியடைந்த) கட்டிகள் ஆகும். நார்த்திசுக் கட்டிகள் கருப்பையில் எங்கு வேண்டுமானலும் ஏற்படலாம், அத்தகைய திசுக் கட்டியானது கருப்பையின் உட்புறத்தில் அல்லது வெளிப்புறத்திலும் காணப்படலாம் மற்றும் கருப்பை சுவரினுள் அல்லது கருப்பை சுவரில் ஒரு தண்டு போன்று   அமைப்புடையதாகவும் இருக்கலாம் (தலைக்காம்புடைய நார்த்திசுக்கட்டிகள்). மாறுபட்ட அளவுகளில் ஒன்று அல்லது பல நார்த்திசுக் கட்டிகளாகவும் இருக்கலாம். நார்த்திசுக் கட்டியானது, படிப்படியாக பல ஆண்டுகளுக்கு மேல் வளரலாம் அல்லது நீண்ட காலமாக சிறியதாக இருந்து, பின்னர் திடீரென்று வேகமாகவும் வளரலாம். நார்த்திசுக் கட்டிகள் ஏன் உருவாக்கிறது என்பதற்கான காரணங்கள் தெரியாவிட்டாலும், மரபுவழி மற்றும் ஹார்மோன்கள் போன்ற காரணிகள் நார்த்திசுக்கட்டிகளின் வளர்ச்சியை ஊக்குவிப்பதாக கருதப்படுகிறது. சில சமயங்களில், மற்ற பெண்களுக்கு ஏற்படும் கடுமையான மாதவிடாய் இரத்தப்போக்கு மற்றும் கடுமையான அடிவயிற்று வலி போன்ற அறிகுறிகளை கூட இந்த நார்த்திசுக்கட்டிகள் ஏற்படுத்தலாம். நார்த்திசுக் கட்டிகளின் அறிகுறிகளை விடுவிக்கும், சில மருந்துகள் உள்ளன. எனினும், இந்த மருந்துகள் நார்த்திசுக் கட்டிகளின் அளவு அதிகரிப்பை தடுக்க முடியாது. பொதுவாக, எந்த அறிகுறிகளும் இல்லாத நார்த்திசுக் கட்டிகளுக்கு எந்த சிகிச்சைகளும் தேவைப்படாது. அறிகுறிகள் உள்ள பெண்களுக்கு, நாம் எதிர்பார்த்தபடி மருந்துகள் வேலை செய்யவில்லை என்றால், அவர்களுக்கு அறுவை சிகிச்சைகள் தேர்வு செய்யப்படும். கடுமையான வலி, கடுமையான இரத்தப்போக்கு, அல்லது நார்த்திசுக் கட்டிகள் தன்னை தானே திருகி கொள்ளவது போன்ற சிக்கல்கள் ஏற்படும். நார்த்திசுக்கட்டிகளின் பிற சிக்கல்கள், இரத்தச்சோகை, சிறுநீர் பாதையில் நோய்த்தொற்றுகள் அல்லது சில அரிதான சந்தர்ப்பங்களில், கருவுறாமை ஆகியவையாகும்.

கருப்பை நார்த்திசுக்கட்டிகள் அறிகுறிகள் என்ன - Symptoms of Uterine Fibroids in Tamil

கருப்பையில் நார்த்திசுக் கட்டிகள் இருந்தாலும் கூட பல பெண்கள் எந்த அறிகுறிகளையும் அனுபவிக்காமலும் இருந்திருக்கலாம். எனினும், மற்ற பெண்களுக்கு, கருப்பை நார்த்திசுக் கட்டிகள் சங்கடமான அல்லது சில நேரங்களில் வலி போன்ற பின்வரும் அறிகுறிகளையும் ஏற்படுத்தும்:

 • மாதவிடாய் காலங்களில் விட்டு விட்டு இரத்தப்போக்கு (மெட்ரோற்ரஹாஜியா என்று அழைக்கப்படும், ரத்த திட்டுக்கள் அல்லது மாதவிலக்கு அல்லாத காலத்தில் ஏற்படும் இடைப்பட்ட இரத்தப்போக்கு).
 • கடுமையான இரத்தப்போக்கு அல்லது மாதவிடாய் காலங்களில் வலி ஏற்படல்.
 • இரத்த சோகை ஏற்படல் அதாவது, அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்படும் காரணத்தால் ஹீமோகுளோபின் குறைபாடு அல்லது இரத்த சிவப்பணுக்கள் குறைபாடு ஆகும்.
 • நார்த்திசுக் கட்டிகள் சிறுநீர்ப்பையின் மீது அழுத்தம் ஏற்படுத்துவதினால் தொடர்ச்சியான சிறுநீர் வெளியெற்றம் ஏற்படலாம்.
 • பின் முதுகுகில் மந்தமான வலி ஏற்படலாம்.
 • கடினமான மலச்சிக்கல் அல்லது குடல் இயக்கங்கள் இருக்கலாம்.
 • வயிற்றில் (முழு அடிவயிற்றில்) "முழுமை" போன்ற உணர்வு இருக்ககூடும்.சில நேரங்களில் இது "பெல்விக் (இடுப்பு) அழுத்தம்" என்றும் அழைக்கப்படுகிறது.
 • உடலுறவின்போது வலி ஏற்படல் (வலிமிகு புணர்ச்சி சிக்கல்).
 • இனப்பெருக்க அமைப்பில் ஏற்படும் சிக்கல்கள், பல கருச்சிதைவுகளை, கர்ப்ப காலத்தில் முன்கூடிய பிரசவ வலி மற்றும் கருவுறாமையாகும்.
 • பிரசவம் மற்றும் கர்ப்பம் தொடர்பான சிக்கல்கள், சிசேரியன் செய்யவதற்கான அதிகப்படியான வாய்ப்புகள் போன்றவையாகும்.

நோய் கண்டறிதலின் வேறுபாடுகள்

கருப்பை நார்த்திசுக்கட்டிகளைப் போன்ற அறிகுறிகளுடன் கூடிய பிற சுகாதார நிலைகள்:

 • அடினோமோசோசிஸ்: கருப்பை உட்புறத்தில் (கருப்பையகம்) ஒரு அசாதாரண தசை (கருப்பைத்தசை) வளர்தல்.
 • கர்ப்பம்
 • எட்டோபிக் கர்ப்பம்: கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தங்கள் குழந்தை கருவில் தங்கியுள்ளதா அல்லது ஃபெலோப்பியன் குழாயிலேயே தங்கியிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
 • எண்டோமெரியெரி பாலிப்: கருப்பை உட்புறத்தில் ஒரு சிறிய துருத்தில் வளர்ச்சி உண்டாகும்.
 • எண்டோமெட்ரியல் ஹைப்பர்ளாசியா: கருப்பையின் உட்புறத்தில் (கருப்பை) ஒரு அசாதாரண வளர்ச்சி.
 • என்டோமெட்டிரிஸ்: கருப்பை உள் புறத்தில் இருக்கும் திசுக்கள் கருப்பையின் வெளிஇடங்களிலும் வளரும்.
 • கருப்பையகத்தின் புற்றுநோய்: கருப்பை உள் புறத்தில் உருவாகும் புற்றுநோய்.
 • கருப்பை புற்றுநோய்: கருப்பையில் உருவாகும் ஒரு வகை புற்றுநோய்.
 • கருப்பை தசைபுற்று: கருப்பை அல்லது கருப்பைக்கு ஆதரவு கொடுக்கும் திசுக்களின் தசைகளில் ஏற்படும் புற்றுநோய்.
 • கருப்பை புற்றுநோய்கோமா: ஒரு அரிய வகை கருப்பை புற்றுநோய் ஆகும்.
Patrangasava
₹450  ₹500  10% OFF
BUY NOW

கருப்பை நார்த்திசுக்கட்டிகள் சிகிச்சை - Treatment of Uterine Fibroids in Tamil

கருப்பை நார்த்திசுக்கட்டிகளுக்கான சிகிச்சையானது, அறிகுறிகள் உடைய பெண்கள் அல்லது அறிகுறிகள் இல்லாத பெண்கள் என்பதைப் பொறுத்தாகும்:

அறிகுறிகள் இல்லாத பெண்களுக்கான சிகிச்சை

அறிகுறிகள் இல்லாத பெண்களுக்கு பொதுவாக சிகிச்சை தேவைப்படாது. ஒரு தொடர்ச்சியான மருத்துவ கண்காணிப்பின் மூலம் நார்த்திசுக்கட்டிகள் திடீரென வளரவோ அல்லது எண்ணிக்கையில் அதிகரிக்காமல் இருக்க உதவுகிறது.

அறிகுறிகளை அனுபவிக்கும் பெண்களுக்கான சிகிச்சையானது, மாதவிடாய் நிற்பதற்கு முன் அல்லது மாதவிடாய் நிற்பதற்கு பின் என்பதைப் பொறுத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

 • மாதவிடாய் நிற்பதற்கு முன் உள்ள பெண்களுக்கான சிகிச்சைகள் 
  • பெண் தன்னுடைய கருப்பை அல்லது கருவுறுதலை பாதுகாக்க விரும்பினால், மருந்துகள் மற்றும் அறுவைசிகிச்சைகள் ரீதியாக சரி செய்யலாம்.ஈஸ்ட்ரோஜன் மற்றும் பெண் பாலின ஹார்மோன் உற்பத்தியை நிறுத்துவதற்கு தற்காலிக மருந்துகள், இந்த மருத்துவ சிகிச்சையில் தரப்படுகிறது.
   எனவே, கருத்தடை சாதனங்கள் (கருவுறுதல் கட்டுப்பாட்டு மாத்திரைகள்), என் ஸ் ஏ ஐ டி (ஸ்டெராய்ட அல்லாத எதிர்ப்பு அழற்சி மருந்துகள்), திரனேக்ஷாமிக் அமிலம் கொண்ட மருந்துகள் (மாதவிடாய் போது இரத்தப்போக்கு அளவை குறைக்க) அல்லது கோனாடோட்ரோபின் ஹார்மோன் மருந்துகள் (ஜி என் ஆர் ஹ்ச்) அகோனிஸ்ட்ஸ் (பாலின ஹார்மோன்களின் உற்பத்தியை குறைக்கும் மருந்து ) மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஏற்பி மாற்றியமைப்பிகள் நார்திசுக்கட்டிகளின் வளர்ச்சியை குறைக்க கூடியதாகும் (ஸ் பி ஆர் ம்) . அறுவை சிகிச்சையின் மூலம் நார்த்திசுக்கட்டிகளை அகற்றலாம் (தசைக்கட்டி நீக்கம்).
  • பெண் தன்னுடைய கருப்பை அல்லது கருவுறுதலை பாதுகாக்க விரும்பவில்லை என்றால், அறுவை சிகிச்சை மூலம் (தசைக்கட்டி நீக்கம்) நார்த்திசுக்கட்டிகளை அகற்றலாம், (கருப்பை தசைப்பிடிப்பு) அல்லது ஃபெலோப்பியன் குழாயுடன் சேர்ந்தோ அல்லது இல்லாமலோ கருப்பை நீக்கப்படலாம் மற்றும் சினைப்பை நீக்கம். (சலிப்பிங்-ஒபோரோகிராமியுடன் சேர்ந்து அல்லது இல்லாமல் கருப்பை நீக்கம்).
 • மாதவிடாய் நின்ற பெண்களுக்கான சிகிச்சை
  போன்ற பெண்களுக்கு, நார்த்திசுக்கட்டிகளை அகற்றுதல் அல்லது ஃபெலோப்பியன் குழாயுடன் சேர்ந்தோ அல்லது இல்லாமலோ கருப்பை நீக்கப்படலாம் மற்றும் சினைப்பையும் நீக்கப்படலாம்.

நார்த்திசுக்கட்டிகளுக்கான சிகிச்சை:

 • கடுமையான மாதவிடாய் இரத்தப்போக்கு காலங்களில் ஏற்படும் இரத்த சோகைக்கு, சிகிச்சையளிக்கவோ அல்லது தடுக்கவோ இரும்புச் சத்துக்கள் தேவைப்படுக்கின்றன.
 • வலியில் இருந்து விடுப்பட இபுப்ரோஃபென் அல்லது நாப்ராக்ஸன் போன்ற வலி நிவாரண மருந்துகள் தரப்படுகிறது.
 • நீங்கள் ஒரு வருடத்திற்கு ஒரு முறையாவது இடுப்பு சோதனை மற்றும் அல்ட்ராசவுண்ட்ஸ் சோதனைகள் செய்ய வேண்டும், அதன் மூலமாக உங்கள் மருத்துவர் கருப்பை நார்த்திசுக்கட்டிகளின் அளவு மற்றும் எண்ணிக்கையை கண்கானிக்க உதவுகிறது.

வாழ்க்கை மேலாண்மைகள்

சீனா ஆய்வாளர்கள் நடத்திய ஒரு ஆய்வில், அதிக உடல் எடை குறியீடு உள்ள மாதவிடாய் ஏற்படும்   (உடல் நிறை குறியீட்டெண்) பெண்களுக்கு அதிக ஆபத்து உள்ள கருப்பை நார்த்திசுக்கட்டிகளை உருவாக்குவதாக தெரிவித்துள்ளனர். எனவே, ஆரோக்கியமான உணவை உட்கொள்வதன் மூலமும், தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதன் மூலமும் உங்கள் உயரத்திற்கான சிறந்த எடையை பராமரிக்கலாம்.

கருப்பை நார்த்திசுக்கட்டிகள் என்ன - What is Uterine Fibroids in Tamil

கருப்பை நார்த்திசுக்கட்டிகளானது மென்மையான தசை செல்கள் மற்றும் பிற சுற்றியுள்ள கருப்பை திசுக்களில் உருவாகும் ஒரு அசாதாரண வளர்ச்சியாகும். கருப்பை நார்த்திசுக்கட்டிகளானது எண்ணிக்கையில் ஒன்றிலிருந்து பல மடங்கு வளர்ச்சியாக மாறக்கூடியதாகும். அதன் அளவுகள் கூட நுண்ணோக்கி அளவிலிருந்து எட்டு அங்குலங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட அளவுகளிலும் மாறக்கூடியதாகும். பெரும்பாலான நார்த்திசுக்கட்டிகளானது ஒரு பெரிய பளிங்கு கற்கள் அளவிலிருந்து ஒரு பேஸ்பால் அளவை விட சற்று சிறியதாகவும் இருக்கலாம்.

கருப்பை நார்த்திசுக்கட்டியானது பொதுவாக இனப்பெருக்க வயதில் உள்ள பெண்களிக்கு ஏற்படும் இடுப்பு கட்டிகள் ஆகும். ஒரு ஆய்வின் படி, 50 வயதிலும், 80% வரை பெண்களுக்கு கருப்பை நார்த்திசுக்கட்டிகள் உருவாக்குகின்றன. ஐக்கிய மாநிலங்களில், கருப்பை அகற்றுதலுக்கு கருப்பை நார்த்திசுக்கட்டிகளே முக்கிய காரணமாகிறது என்று கூறுகின்றனர் (கருப்பை நீக்கம்). 2014 ஆம் ஆண்டில் ஐரோப்பியாவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், 30 முதல் 60 வயதிற்குட்பட்ட பெண்களில் 21.4 சதவிகிதம் கருப்பை நார்த்திசுக்கட்டிகளுடன் இருப்பதாக கண்டறியப்பட்டது. நார்த்திசுக்கட்டி அறிகுறிகள் இல்லா பெண்களுக்கு, பொதுவாக உடல்நல பரிசோதனையின் போது அல்ட்ராசவுண்ட் ஸ்கானில் அல்லது வேறு சில உடல்நலக் கோளாறுகளை கண்டறியும் போது இந்த நோய் இருத்தலை கண்டறியப்படுகிறது.  20% முதல் 50% பெண்கள் இந்த கருப்பை நார்த்திசுக்கட்டிகளின் அறிகுறிகளைக் கொண்டு இருக்கிறார்கள் மற்றும் அவர்கள் அதற்கான சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.மேற்கோள்கள்

 1. American College of Obstetricians and Gynecologists [Internet] Washington, DC; Uterine Fibroids
 2. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Uterine fibroids
 3. F O Okogbo, OC Ezechi, OM Loto, PM Ezeobi. Uterine Leiomyomata in South Western Nigeria: a clinical study of presentations and management outcome. Afr Health Sci. 2011 Jun; 11(2): 271–278. PMID: 21857861
 4. MARIA SYL D. DE LA CRUZ, EDWARD M. BUCHANAN. Uterine Fibroids: Diagnosis and Treatment. Am Fam Physician. 2017 Jan 15;95(2):100-107. [Internet]
 5. Agency for Healthcare Research and Quality. Management of Uterine Fibroids: An Update of the Evidence . U.S. Department of Health and Human Services, Rockville [Internet]
 6. National Health Service [Internet] NHS inform; Scottish Government; Fibroids
 7. Eunice Kennedy Shriver National Institute of Child Health and Human; Monday, July 21, 2014; What are the symptoms of uterine fibroids?. National Health Service [Internet]. UK.
 8. Fleischer AC, James AE Jr, Millis JB, et al. Differential diagnosis of pelvic masses by gray scale sonography. AJR Am J Roentgenol. 1978;131(3):469–476. PMID: 98992
 9. AC Fleischer, AE James, Jr, JB Millis and C Julian. Differential diagnosis of pelvic masses by gray scale sonography Read More: https://www.ajronline.org/doi/abs/10.2214/ajr.131.3.469?src=recsys. American Journal of Roentgenology. 1978;131: 469-476. 10.2214/ajr.131.3.469
 10. National Health Service [Internet]. UK; Fibroids.
 11. He Y, Zeng Q, Dong S, Qin L, Li G, Wang P. Associations between uterine fibroids and lifestyles including diet, physical activity and stress: a case-control study in China. Asia Pac J Clin Nutr. 2013;22(1):109-17. doi: 10.6133/apjcn.2013.22.1.07. PMID: 23353618

கருப்பை நார்த்திசுக்கட்டிகள் க்கான மருந்துகள்

Medicines listed below are available for கருப்பை நார்த்திசுக்கட்டிகள். Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.