கலா அசார் (கருப்பு காய்ச்சல், உள்ளுறுப்பு லேயிஷ்மேனியாசிஸ்) என்றால் என்ன?
கருப்புக் காய்ச்சல் (உள்ளுறுப்பு லேயிஷ்மேனியாசிஸ்) என்பது மெதுவாக பரவக்கூடிய மற்றும் மிகவும் தொற்றக்கூடிய ஒரு நாள்பட்ட நோயாகும், இது மீண்டும் மீண்டும் வரக்கூடி மற்றும் ஒழுங்கற்ற காய்ச்சல், குறிப்பிடத்தக்க எடை இழப்பு, கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீக்கம் மற்றும் இரத்த சோகை ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது. இது பாதிக்கப்பட்ட பெண் மணல்-ஈக்கள் (ஃபிளேபோடோமைன்) கடியின் மூலமாக பரவுகிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் என்ன?
பாதிக்கப்பட்ட உறுப்பை அடிப்படையாகக் கொண்டு லேயிஷ்மேனியாசிஸ் பல வடிவங்களில் உள்ளன. மிகவும் பொதுவான வகைகள் தோல் மற்றும் உள்ளுறுப்பு (கல்லீரல் மற்றும் மண்ணீரலை பாதிக்கும்) ஆகும். கருப்புக் காய்ச்சலின் தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:
- பசியின்மை.
- வெளிறிய தோற்றம் மற்றும் கணிசமான எடை இழப்பு.
- பலவீனம்.
- காய்ச்சல்.
- தோல் - உலர்ந்து, மெலிந்து மற்றும் செதில் ஆவது.
- இரத்த சோகை.
- ஸ்ப்லெனோமெகாலி - மண்ணீரல் விரிவாக்கம், பொதுவாக மென்மையான மற்றும் உணர்ச்சியின்மை.
- கல்லீரல் - விரிவாக்கம் - மென்மையான, மிருதுவான மேற்பரப்பு, கூர்மையான முனை.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
கருப்புக் காய்ச்சல் என்பது நோய்க்கடத்தி உயிரியால் - பாதிக்கப்பட்ட மணல் ஈக்கள் (பெண் பிளெபோடோமஸ் அர்ஜென்ட்டிப்பஸ்) வழியாக பரவுகிறது. பாதிக்கப்பட்ட ஈ, லெஷ்மேனியா என்று அழைக்கப்படும் ஒட்டுண்ணியை இரத்த ஓட்டத்தில் சேர்கின்றன, இது அறிகுறிகளை உருவாக்குகிறது.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?
கருப்புக் காய்ச்சல் நோயை அறிவதில் 2 அணுகுமுறைகள் உள்ளன.
- அறிகுறிகளை சார்ந்த: மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் நெருக்கமாக கண்டறியப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன.
- ஆய்வகம்: இதில் ஊநீரியல் சோதனை அடங்கும், அது ஒட்டுண்ணிக்கு எதிராக உற்பத்தி செய்யப்படும் ஆன்டிபாடிகளை பரிசோதிக்க மற்றும் திசு ஆய்வு (பையாப்சி) அல்லது நுண்ணுயிர் வளர்ப்பு முறையில் சேகரிக்கப்பட்ட எலும்பு மஜ்ஜை/மண்ணீரல்/நிணநீர் கணு திசு மாதிரியில் உள்ள ஒட்டுண்ணி தாக்கத்தை கண்டறிய செய்யப்படுகிறது. இது உறுதிசெய்யும் நோயறிதல் என்று கருதப்படுகிறது.
நோயாளியின் உடலில் உள்ள ஒட்டுண்ணியைக் கொல்ல ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்துகள் உதவலாம். கருப்புக் காய்ச்சலுக்கு எதிரான முதல் வாய்வழி மருந்து மில்டெபோசின் ஆகும். இது நோயாளிகளுக்கு 95% நல்ல பயனளிக்கக்கூடியது ஆகும். கறுப்புக் காய்ச்சலுக்கான தடுப்பூசிகள் அல்லது தடுப்பு மருந்துகள் கிடைப்பதில்லை, அதனால் இந்த நோய் பகுதியான துணை சஹாரா நாடுகள், ஆசியா, தெற்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற இடங்களில் இருக்கும் போது முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
இந்த நோய் உள்ள பகுதிகளுக்கு பயணம் செய்யும்போது முழுக்கை சட்டை மற்றும் பேண்ட் அணிவது சுய பராமரிப்பு வழிகளில் அடங்கும். பூச்சிகளை விரட்டும் ஸ்ப்ரேக்களைப் பயன்படுத்த வேண்டும் மற்றும் மணல் ஈக்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் மாலை மற்றும் இரவு நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்கவேண்டும்.