வைட்டமின் ஏ குறைபாடு என்றால் என்ன?
இரெட்டினோல் என்றும் அழைக்கப்படும் வைட்டமின் ஏ கொழுப்பில் கரையக்கூடிய ஒரு வைட்டமின் ஆகும்.சாதாரண நிற பார்வை மற்றும் இரவு பார்வைக்கு தேவைப்படும் தண்டு நிறமி (ராடாப்சின்) எனப்படும் ஒளிவாங்கு திறன் கண் நிறமிகளை உருவாக்குவதற்கு இது அவசியமானதாகும்.இதனைத் தவிர, உயிரணு முதிர்ச்சி மற்றும் வளர்ச்சி, நோய் எதிர்ப்பு செயல்பாடு மற்றும் கரு வளர்ச்சி ஆகியவற்றில் வைட்டமின் ஏ உதவுகிறது.வைட்டமின் ஏ குறைபாடு குறிப்பாக கண் மற்றும் பார்வை தொடர்பான பல கோளாறுகளுக்கு வழிவகுக்கிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
வைட்டமின் ஏ பல செயல்பாடுகளைச் ஈடுபடுவதால், அதன் குறைபாடு பல நிலைமைகள் மற்றும் பல-அமைப்புமுறை அறிகுறிகளுக்கு வழிவகுக்கிறது. இந்த தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:
- இராக்குருடு/மாலைக்கண் - குறைந்த வெளிச்சம் மற்றும் இரவு நேரத்தின் போது மோசமான பார்வை (இது வைட்டமின் ஏ குறைபாட்டின் ஆரம்ப நிலை அறிகுறிகளில் ஒன்றாகும்).
- கண்வறட்சி - கண்கள் தடிமனாகுதல், இது கண் சவ்வு மற்றும் கருவிழி வறண்டு போதல் மற்றும் தடித்தலுக்கு வழிவகுக்கிறது. இது பகல் நேரத்திலும் கூட பார்ப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
- கண்புள்ளி - தேவையற்ற புறத்தோல் உயிரணுக்கள் கண் சவ்வில் தேங்குகின்றன.
- கருவிழிநைவு - கண் சவ்வு தெளிவற்றதாக மாறி சீரழிந்துவிடக்கூடும். இது ஒரு நிரந்தர சேதமாகும்.
- நோயெதிர்ப்பு எதிர்வினைகளில் பாதிப்பு ஏற்படுதல்.
- சருமம் - தடிமனாகுதல், இது வறட்சி, செதில் தன்மை மற்றும் அரிப்பை ஏற்படுத்துகிறது.
வைட்டமின் ஏ குறைபாட்டின் அறிகுறிகள் இளம் குழந்தைகளில் அதிகமாக தென்படுகிறது.இதனால் அவர்களின் வளர்ச்சி தாமதமாகக்கூடும். கடுமையான குறைபாடு குழந்தைகளில் மரணத்தை விளைவிக்கும்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
வைட்டமின் ஏ குறைபாடு முதன்மையாக வைட்டமின் ஏ நிறைந்த உணவுப்பொருட்களை எடுத்துக் கொள்ளாததால் ஏற்படுகிறது, அதாவது தவறான உணவு பழக்கத்தினால் ஏற்படும் உணவு குறைபாடு அல்லது வைட்டமின் ஏ கொண்ட உணவுகளை சேர்த்துக் கொள்ளாததால் ஏற்படுகிறது.இதனைத் தவிர, வைட்டமின் ஏ இரண்டாம் நிலை குறைபாடு முன் உயிர்ச்சத்து ஏ வின் உடலில் கிடைக்கின்ற அளவுக் குறைவு மற்றும் உறிஞ்சுதலில் ஏற்படும் தடை, வைட்டமின் ஏ வின் சேமிப்பு அல்லது போக்குவரத்து முதலியவற்றால் ஏற்படுகிறது.வைட்டமின் ஏ உறிஞ்சுதல், கணைய பற்றாக்குறை, குளூட்டன் ஒவ்வாமை, நாள்பட்ட வயிற்றுப்போக்கு, பித்த நாள அடைப்பு, கல்லீரல் அழற்சி, நீர்மத் திசுவழற்சி, ஜியார்டியாநோய் காரணமாகவும் ஏற்படலாம்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
பொதுவாக, ஒரு முழுமையான மருத்துவ பின்புலம் மற்றும் மருத்துவ பரிசோதனை வைட்டமின் ஏ குறைபாட்டை கண்டறிய உதவுகிறது.மருத்துவம் சார்ந்த கண்டுபிடிப்புகள் தவிர, பின்வருவன நோய் கண்டறிதலில் உதவுகின்றன,
- சீரம் இரெட்டினோல் அளவுகள் - இது பொதுவாக நோயறிதலை உறுதிப்படுத்துவதில் உதவுகிறது.
- கண்ணியல் மதிப்பீடு - விழி அகநோக்கி, பிளவுப்பட விளக்கு நுண்ணோக்கி, பொதுக்குவிய நுண்ணோக்கி ஆகியவற்றை கொண்டு செய்யப்படும் மதிப்பீடு கண் சார்ந்த நிலைமைகளைக் கண்டறிந்து உறுதிப்படுத்த உதவுகிறது.
- நோய் தீர்ப்பியல்புடைய பாதை - வைட்டமின் ஏ குறைநிரப்புகள் எடுத்துக் கொண்ட பிறகு அறிகுறிகளில் முன்னேற்றம் காணப்பட்டால், இந்த அறிகுறிகள் வைட்டமின் ஏ குறைபாட்டினால் தான் நேர்ந்தது என்று உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
வைட்டமின் ஏ குறைபாடு, வைட்டமின் ஏ நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொள்ளுதல் வாய்வழி அல்லது நரம்புவழி வைட்டமின் ஏ குறைநிரப்புகள் மூலம் சிகிச்சை செய்யப்படலாம்.
- வைட்டமின் ஏ நிறைந்த உணவுப் பொருட்கள் - முட்டையின் மஞ்சள் கருக்கள், மீன் எண்ணெய், வெண்ணெய், பாலாடைக்கட்டி வகை, கேரட், கீரை, பரட்டைக்கீரை, முட்டைக்கோஸ், சீமைக் காட்டுமுள்ளங்கி, சிவப்பு மிளகு போன்றவற்றை உள்ளடக்க்குகிறது.
- குறைநிரப்புகள்: வாய்வழியாக அல்லது உட்செலுத்துதல் மூலம் வழங்கப்படும் வைட்டமின் ஏ (வைட்டமின் ஏ பனையிகேட்டு) அதன் குறைபாட்டை போக்க உதவுகிறது.