வைட்டமின் பி குறைபாடு என்றால் என்ன?
வைட்டமின் பி (பி தொகுதி) பின்வருவம் எட்டு வகை வைட்டமின்கள் அடங்கிய கூட்டுக்குழுமம் ஆகும்:
- பி1 (தயமின்).
- பி2 (இரைபோஃபிளவின்).
- பி3 (நியாசின் அல்லது நியாசினமைட்).
- பி5 (பன்டோதீனிக் அமிலம்).
- பி6 (பிரிடொக்சின், பிரிடொக்சல், அல்லது பிரிடொக்சாமைன்).
- பி7 (பயோட்டின்).
- பி9 (போலிக் அமிலம் அல்லது இலைக்காடி).
- பி12 (பலதரப்பட்ட கோபாலமின்கள்).
இவை அனைத்தும் உயிரணுக்களின் செயல்பாடு, மூளையின் செயல்பாடு மற்றும் உயிரணுக்களின் வளர்சிதைமாற்றத்திற்கு மிகவும் முக்கியமானதாகும்.வைட்டமின் பி தொகுதி குறைபாடு சிக்கலான கோளாறுகளுக்கு வழிவகுக்கக்கூடும்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
பல கூறுகளின் குறைபாடு காரணமாக, வைட்டமின் பி குறைபாட்டின் அறிகுறிகள் பரவலாக வேறுபடுகின்றன.இருப்பினும், பி தொகுதி குறைபாடு சில பொதுவான அறிகுறிகளை கொண்டுள்ளன, அவற்றில் பின்வருவன அடங்கும்:
- வாயில் புண்கள்.
- உதட்டில் வெடிப்பு.
- செதில் போன்ற அரிக்கும் சருமம்.
- பலவீனம்.
- சோர்வு.
- இரத்த சோகை.
- எரிச்சலூட்டும் தன்மை.
- குழப்பம்.
- மறதி.
- அடிவயிற்றில் வீக்கம் மற்றும் பிடிப்புகள்.
- மலச்சிக்கல்.
- கைகள் மற்றும் கால்களில் கூச்ச உணர்வின்மை.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
வைட்டமின் பி குறைபாடு ஏற்படுவதற்கு வைட்டமின் பி தொகுதி நிறைந்த உணவுப் பொருட்களை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளாததே காரணமாகும், இது ஒரு முதன்மை குறைபாடாக குறிப்பிடப்படுகிறது.குளூட்டன் ஒவ்வாமை, நாள்பட்ட வயிற்றுப்போக்கு, கணையக் குறைபாடு, கல்லீரல் அழற்சி, ஜியார்டியாநோய், அஸ்கரியேசிஸ், குரோன் நோய் மற்றும் பெருங்குடல் புண் போன்ற சில நோய்கள் வைட்டமின் பி தொகுதி குறைபாட்டிற்கு வழிவகுக்கக்கூடும்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
நோயின் மருத்துவ பின்புலம் மற்றும் முழுமையான மருத்துவ பரிசோதனை நோய் கண்டறிதலுக்கு உதவுகிறது. இதனுடன் சேர்த்து, நோய்த் தீர்வியல் பாதை (அறிகுறிகளுக்கான வைட்டமின் பி தொகுதி குறைநிரப்புகள் அளிப்பது) வைட்டமின் பி குறைபாடு கண்டறிதலுக்கு உதவுகிறது.இரத்தத்தில் உள்ள வைட்டமின் பி1, பி2, பி6, பி9, பி12 அளவுகள் போன்ற சில இரத்த பரிசோதனைகள் தவிர, ஹோமோசிஸ்டீன் அளவுகளுடன் முழுமையான குருதி எண்ணிக்கை (சி.பி.சி) போன்ற வழக்கமான இரத்த பரிசோதனைகள் வைட்டமின் பி குறைபாடு நோய் கண்டறிதலை உறுதி செய்ய உதவுகிறது.
வைட்டமின் பி குறைபாட்டிற்கான சிகிச்சை வைட்டமின் பி தொகுதி நிறைந்த உணவை அதிகமாக எடுத்துக் கொள்வதன் மூலம் அல்லது வைட்டமின் பி தொகுதி வாய்வழியாகவோ ஊசி மூலமாகவோ உட்செலுத்தக்கூடிய குறைநிரப்பிகளை எடுத்துக் கொள்வதன் மூலம் வைட்டமின் பி அளவுகளை சீராக வைத்திருப்பதில் அடங்குகிறது.
- வைட்டமின் பி நிறைந்த உணவுப் பொருட்கள் - முட்டைகள், மீன், கல்லீரல் ஆகியவை வைட்டமின் பி அசைவ உணவு மூலங்கள்; பால், பாலாடைக்கட்டி, பச்சை இலை காய்கறிகள் (கீரை, வெந்தயக்கீரை, பரட்டைக்கீரை போன்றவை), பழங்கள் (ஆரஞ்சு, வாழை, தர்பூசணி, ஸ்ட்ராபெர்ரி போன்றவை), பீன்ஸ், பாதாம் போன்ற பருப்பு வகைகள், பீட் ரூட் மற்றும் வெண்ணெய் போன்றவை.
- குறைநிரப்புகள்: வாய்வழியாக அல்லது ஊசி மூலமாக உட்செலுத்தத்தக்க வைட்டமின்பி தொகுதி குறைநிரப்புகள் இந்த குறைபாட்டை சரிசெய்ய உதவும்.