பொதுவாகக் "கோந்து கத்திரா" என அறியப்படும் மருந்துப்பிசின் என்பது, அஷ்டிராகளாஸ் எனப்படும் மூலிகையின் பல்வேறு இனங்களின் சாற்றில் (மரப்பால்) இருந்து, இயற்கையாகப் பெறப்படும் ஒரு கோந்து ஆகும். இந்தப் பசையானது, பிசுபிசுப்பானது ( ஜெல்லி போன்றது), மணமற்றது (எந்த மணத்தையும் கொண்டிருக்காது) மற்றும் சுவையற்றது ஆகும். மருந்துப்பிசின் தண்ணீரில் கரையக் கூடியது மற்றும் முக்கியமாக அந்தத் தாவரத்தின் வேரில் இருந்து பெறப்படுகிறது. "கோந்து கத்திரா" தண்ணீரில் கலந்து, ஒரு பசை போன்று உருவாக்கக் கூடிய, ஒரு ஜெல் போன்ற பொருளை உருவாக்குகிறது. மருந்துப்பிசின் குறிப்பாக அதன் குளுமையூட்டும், மற்றும் செரிமானத்தை அதிகரிக்கும் பண்புகளுக்காக, ஆயுர்வேதத்தில் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

"கோந்து கத்திரா" பெறப்படும் அஷ்டிராகளாஸ் தாவரத்தின் இனங்கள், அஷ்டிராகளாஸ் அட்சென்டென்ஸ், அஷ்டிராகளாஸ் பிராச்சிகாலிக்ஸ், அஷ்டிராகளாஸ் ட்ராகாகந்தஸ் மற்றும் அஷ்டிராகளாஸ் கும்மிஃபெர் ஆகியவை ஆகும். இந்தத் தாவர இனங்கள், உலகின் மத்திய கிழக்குப் பகுதியை சேர்ந்தவையாக இருக்கின்றன. இந்தப் பிசின் ஈரானில் பெருமளவுக்கு உற்பத்தி செய்யப்படுகின்றது, மற்றும் பெர்சிய மருத்துவத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. அஷ்டிராகளாஸ் தாவரங்கள் வழக்கமாக மூலிகைகள் அல்லது சிறு மூலிகைகளாக இருக்கின்றன. ட்ராககந்த் என்ற பெயர், 'ட்ராகோஸ்' (ஆடு) மற்றும் 'அகாந்தா' (கொம்பு) ஆகிய கிரேக்க மொழிகளில் இருந்து பெறப்பட்டது ஆகும்.

மருந்துப்பிசின் ("கோந்து கத்திரா") பற்றிய சில அடிப்படை விவரங்கள்

  • பெயர்: மருந்துப்பிசின் ("கோந்து கத்திரா")
  • எவற்றில் இருந்து பெறப்படுகிறது: அஷ்டிராகளாஸ் இனங்களில் இருந்து
  • பயன்படும் தாவர பாகம்: வேர் பால் (உலர்ந்தது)
  • பொதுவான பெயர்கள்: சிரியாஜ், சிரியாஜ் பிசின், பிசின் டிராகன்
  • சமஸ்கிருதப் பெயர்: கால்கல்
  • சொந்த பிராந்தியம் மற்றும் புவியியல் பரவுதல்: உலகின் மத்திய கிழக்குப் பகுதிகள்.
  1. மருந்துப்பிசினின் ஊட்டச்சத்து விவரங்கள் - Tragacanth gum nutritional facts in Tamil
  2. கோந்து கத்திரா (மருந்துப்பிசின்) ஆரோக்கியம் சார்ந்த நன்மைகள் - Health benefits of Gond katira (Tragacanth gum) in Tamil
  3. மருந்துப்பிசினின் (கோந்து கத்திரா) பயன்கள் - Uses of tragacanth gum (gond katira) in Tamil
  4. கோந்து கத்திரா பொடி - Gond katira powder in Tamil
  5. கோந்து கத்திராவின் பக்க விளைவுகள் - Side effects of Gond katira in Tamil

மருந்துப்பிசின் பல்வேறு உணவுப்பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது மற்றும் ஒரு சிறப்பான கூட்டுப்பொருளாகக் கருதப்படுகிறது. கீழே உள்ள அட்டவணை, 100கி மருந்துப்பிசினில் உள்ள ஊட்டச்சத்துக்களின் அளவைப் பட்டியலிடுகிறது.  

ஊட்டச்சத்துக்கள் 100 கிராமில் உள்ள அளவு
ஆற்றல் 70 கி.கலோரி
கார்போஹைட்ரேட்கள் 35 கி
நார்ச்சத்து 30 கி
ஹைட்ரேட்கள் 5 கி
கொழுப்புகள் 0 கி
தாது(க்கள்)
சோடியம் 9 கி
myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Urjas Capsule by using 100% original and pure herbs of Ayurveda. This ayurvedic medicine has been recommended by our doctors to lakhs of people for sex problems with good results.
Long Time Capsule
₹712  ₹799  10% OFF
BUY NOW

மருந்துப்பிசின், ஆரோக்கியம் அளிக்கும் ஏராளமான நன்மைகளைக் கொண்டிருக்கிறது, அதன் காரணமாக, அது ஆயுர்வேத மருத்துவத்தில் சிறப்பாகப் பரிந்துரைக்கப்படுகிறது. கோந்து கத்திராவின் ஆரோக்கியம் அளிக்கும் நன்மைகளைப் பற்றி கீழே விவரிக்கப்பட்டு இருக்கிறது:

  • குளுமைக்காக: கோந்து கத்திரா குளுமையூட்டும் பண்புகளைக் கொண்டிருக்கிறது. எனவே, வழக்கமாக கோடை காலங்களில், உடல் வெப்பத்தைக் குறைக்கவும், மற்றும் வெப்ப அதிர்ச்சி ஏற்படாமல் தடுக்கவும் உட்கொள்ளப்படுகிறது.
  • இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கு: அதன் குளுமையூட்டும் பண்புகளின் காரணமாக மருந்துப்பிசின், உயர் இரத்த அழுத்தப் பிரச்சினையைக் கொண்டவர்களுக்கு இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுவக் கூடியது எனத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
  • செரிமானத்துக்காக: மருந்துப்பிசின் எடுத்துக் கொள்வது, செரிமான செயல்பாடுகளை மேம்படுத்தி, அதன் வாயிலாக மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
  • சருமத்துக்காக: கோந்து கத்திரா, ஒரு முகத்திரை வடிவில் பயன்படுத்தப்படும் பொழுது, உங்கள் சருமத்துக்கான மிகச் சிறந்த ஒரு முதுமை-எதிர்ப்புப் பொருளாக இருக்கிறது. அது, சுருக்கங்கள், வரிகள் மற்றும் பிற முதுமைக்கான அறிகுறிகளைக் குறைக்க உதவுகின்ற அதே வேளையில், காயங்களை ஆற்றுவதிலும் திறன் மிக்கதாக இருக்கிறது.
  • வலியைக் கட்டுப்படுத்த: மருந்துப்பிசின், வலி உணர்வைக் குறைக்க நரம்பு மண்டலத்தில் சில குறிப்பிட்ட உணர்வேற்பிகள் மீது செயல்படுகின்ற காரணத்தால், அது ஒரு வலி நிவாரணியாகப் (வலியைக் கட்டுப்படுத்த) பயன்படுத்தக் கூடியது ஆகும்.
  • சிறுநீர் கட்டுப்பாடின்மைக்காக: நீரிழிவு அல்லது கர்ப்ப காலத்தின் பொழுது, சிறுநீரைக் கட்டுப்படுத்த முடியாமை, அல்லது சிறுநீர் கசிவை சரி செய்வதற்காக கோந்து கத்திராவைப் பயன்படுத்துவது பரிந்துரைக்கப்படுகிறது. அது கர்ப்ப காலத்தின் பொழுது, தாய் மற்றும் கருவில் உள்ள சேய்க்கு ஊட்டச்சத்து அளிக்கவும் கூடப் பயன்படுகிறது.
  • புற்றுநோய்க்காக: ஆய்வுக்கூட ஆராய்ச்சிகள், மருந்துப்பிசின் புற்றுநோய் செல்களின் பிரிதல் விகிதத்தைக் குறைப்பது நிரூபிக்கப்பட்டு இருப்பதால், அதை ஒரு புற்றுநோய் எதிர்ப்புக் காரணியாகப் பயன்படுத்துவதைப் பரிந்துரைத்து இருக்கின்றன.

ஒரு குளுமையூட்டும் காரணியாக மருந்துப்பிசின் - Tragacanth gum as a cooling agent in Tamil

கோந்து கத்திரா, அதன் குளுமையூட்டும் பண்புகளுக்காகப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. கோடை காலங்களில், உடல் வெப்பத்தைத் தணிவாக வைப்பதற்கு, மருந்துப்பிசின் தண்ணீருடன் கலந்து அருந்தப்படுகிறது. அதனால், கோடைகாலங்களில் கோந்து கத்திரா எடுத்துக் கொள்வது வெப்ப அதிர்ச்சி ஏற்படாமல் தடுக்கக் கூடியது ஆகும். மருந்துப்பிசின், நமது உடலில் உள்ள முக்கிய உறுப்புகளின் தகுந்த செயல்பாட்டுக்காக உடல் உள்ளுறுப்புகளின் வெப்பநிலையைப் பராமரிக்க, ஆயுர்வேத மருத்துவர்களால் பரவலாகப் பரிந்துரைக்கப்படுகிறது.

ஆய்வுகள் மூலம், மருந்துப்பிசின், அதன் குளுமையூட்டும் பண்புகளுடன் தொடர்புடையதாக அறியப்படும், ஒரு அழுத்தக்குறைப்புக் (இரத்த அழுத்தத்தைக் குறைத்தல்) காரணியாகத் திறன்மிக்கதாக இருப்பதாகக் கண்டறியப்பட்டு உள்ளது. அதிகப்படியான வெப்பத்தின் காரணமாக மூக்கில் இரத்தக் கசிவு ஏற்படும் நிகழ்வுகள், கோந்து கத்திராவைப் பயன்படுத்துவதன் மூலம் தடுக்கப்படக் கூடியவை ஆகும்.

(மேலும் படிக்க: உயர் இரத்த அழுத்த அறிகுறிகள்)

செரிமானத்துக்காக கோந்து கத்திரா - Gond katira for digestion in Tamil

மருந்துப்பிசின், அதன் செரிமானத்தை மேம்படுத்தும் பண்பின் மூலமாகவும் நமது ஆரோக்கியத்துக்கு நன்மையளிக்கிறது. கோந்து கத்திராவைப் பயன்படுத்துவது, ஒரு சுத்திகரிப்பு (மலம் கழித்தல் செயல்பாடுகளை முறைப்படுத்துவதன் மூலம் இரைப்பையை சுத்திகரிக்கிறது) விளைவை வழங்குகிறது எனக் கண்டறியப்பட்டு உள்ளது.மருந்துப்பிசினில் உள்ள எக்லோகலக்டுரோனன் போன்ற குறிப்பிட்ட நொதிகள், செரிமானத்தை மேம்படுத்தும் பணியை மேற்கொள்கின்றன. கோந்து கத்திராவை தினசரி உணவுப் பழக்கத்தில் சேர்த்துக் கொண்டால், அது மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கக் கூடியதாகும்.

கோந்து கத்திரா (மருந்துப்பிசின்) சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்துகிறது - Gond katira (Tragacanth gum) improves urinary function in Tamil

அனிச்சையாக சிறுநீர் வெளியேறுதல் மற்றும் சிறுநீரைக் கட்டுப்படுத்த முடியாமை (சிறுநீரைக் கட்டுப்படுத்தும் திறன் குறைவாக இருத்தல்) ஆகியவற்றுக்கு எதிராக கோந்து கத்திராவின் விளைவானது ஏற்கனவே நன்கு அறியப்பட்டது ஆகும். அது, சிறுநீர் பாதையில் ஏதேனும் அடைப்பு அல்லது அழற்சி ஏற்பட்டு இருக்கும் பட்சத்தில், சிறுநீர்ப் பாதை தசைகளுக்கு இதமளிப்பதில் உதவுகிறது. நீரிழிவு - காரணமாக ஏற்படும் சிறுநீரகப் பிரச்சினைகளையும் கோந்து கத்திரா எடுத்துக் கொள்வதன் மூலம் குறைக்க இயலும்.

கர்ப்ப காலத்தின் போது கோந்து கத்திரா இனிப்புகளை சாப்பிடவும் - Eat gond katira sweets in pregnancy in Tamil

கோந்து கத்திரா கர்ப்பிணிப் பெண்களால் எடுத்துக் கொள்ளப்படும் பொழுது, அதன் ஊட்டமளிக்கும் பண்புகளின் காரணமாக மிகவும் நன்மை அளிக்கக் கூடியதாக இருக்கிறது. இனிப்பு அடங்கிய மருந்துப்பிசினை உண்பது இந்தியாவில் மிகவும் வழக்கமான ஒன்றாகும். அது தாய்க்கும், அதே போன்று குழந்தைக்கும் ஊட்டச்சத்துக்கான ஒரு நல்ல ஆதாரம், மற்றும் ஒரு ஆரோக்கியமான சிற்றுண்டி என நம்பப்படுகிறது.

கோந்து கத்திரா, கர்ப்பிணிப் பெண்களுக்கு நன்மை அளிக்கக் கூடியது என்று கருதப்படுகின்ற புரதச்சத்து மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்களை செறிவாகக் கொண்டிருக்கிறது. பிரசவத்திற்கு பிறகு, கோந்து கத்திரா, அந்த தாய்மார்களுக்குத் தேவைப்படும் ஊட்டச்சத்துக்களை வழங்குவதன் மூலம், அவர்கள் திரும்பவும் தங்கள் வலிமையை அடைய உதவுகிறது. மருந்துப்பிசின், பாலூட்டும் (பால் ஊட்டுதல்) தாய்மார்களுக்கு பால் உற்பத்தி ஆவதை அதிகரிக்கிறது என்று ஆய்வுகள் வெளிப்படுத்தி இருக்கின்றன.

ஒரு நல்ல சருமத்துக்காக கோந்து கத்திராவைப் பயன்படுத்துதல் - Use gond katira for a good skin in Tamil

கோந்து கத்திரா முதுமை எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. மருந்துப்பிசின், அடிக்கடி சோற்றுக் கற்றாழை போன்ற மற்ற தாவரம் சார்ந்த பொருட்களுடன் கலந்து ஒரு முகத்திரையாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த முகத்திரைகள், சுருக்கங்கள் மற்றும் வரிகளைக் குறைப்பதில் மிகவும் திறன் வாய்ந்தவை எனக் கண்டறியப்பட்டு இருக்கிறது. சருமப் பாதுகாப்பு பொருட்களில் மருந்துப்பிசினின் பயன்பாடு குறித்த மருத்துவரீதியான சோதனைகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன.

கோந்து கத்திரா பல்வேறு நன்மையளிக்கும் ஊட்டச்சத்துக்களைக் கொண்டிருப்பதால், சருமப் பராமரிப்பு முறைகளில் ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது. மருந்துப்பிசினை சோற்றுக் கற்றாழையுடன் கலந்து பயன்படுத்துவது, காயங்களை குணமாக்கும் பண்புகளைக் கொண்டிருப்பதாகவும் கண்டறியப்பட்டு இருக்கிறது.

புற்றுநோய்க்கு எதிராக கோந்து கத்திரா - Gond katira against cancer in Tamil

மருந்துப்பிசின், இயற்கையாகவே புற்றுநோய் எதிர்ப்பு பண்பைக் கொண்டிருப்பதாகவும் கண்டறியப்பட்டு இருக்கிறது. இந்தப் பிசின், புற்றுநோய் செல்கள் பிரிதல் விகிதத்தைக் குறைக்கின்ற குறிப்பிட்ட உயிரிவேதியியல் பொருட்களையும், மற்றும் கட்டிகள் வளர்வதற்கு எதிரான திறன்மிக்க பன்பையும் கொண்டிருக்கிறது.

விட்ரோ மற்றும் விவோவில் நடத்தப்பட்ட ஆய்வுகள், ஒரு புற்றுநோய் எதிர்ப்புக் காரணியாக மருந்துப்பிசினின் திறனை நிரூபித்து இருக்கின்றன. அடுத்த கட்ட ஆய்வுகள், இன்னும் நிறைய நடத்தப்பட வேண்டியிருப்பினும், புற்றுநோய்க்கு எதிராக ஒரு தடுப்புப் பொருளாக அன்றாட வாழ்வில் கோந்து கத்திராவின் பயனைத் நிர்ணயித்திருக்கின்றன.

வலி நிவாரணத்துக்காக மருந்துப்பிசின் (கோந்து கத்திரா) - Tragacanth gum (gond katira) for pain relief in Tamil

வலியைக் குறைப்பதில் கோந்து கத்திராவின் விளைவுகளை ஆராய்வதற்காக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. மருந்துப்பிசினை, தகுந்த அளவுகளில் கொடுக்கப்படும் பொழுது, ஒரு திறன் மிக்க வலி நீக்கியாக (வலி நிவாரணி) பயன்படுத்த இயலும். மருந்துப்பிசின், வலி உணர்வைக் குறைப்பதற்காக நரம்பு மண்டலத்தின் குறிப்பிட்ட மூலக்கூறுகள் மீது  செயல் புரிகிறது. ஒரு வலி நிவாரணியாக மருந்துப்பிசின் எவ்வாறு செயல்படுகிறது என்ற சரியான செயல்படு முறையை அறிந்து கொள்ள, அடுத்த கட்ட விவோ ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கிறது. 

மருந்துப்பிசின், அதன் ஆரோக்கியமளிக்கும் நன்மைகளைத் தவிர, உணவு மற்றும் தோல் தொழிலில் பல்வேறு பரவலான பயன்களைக் கொண்டிருக்கிறது. அதன் பிசின் போன்ற இருப்புத்தன்மை, அறிவியல் மற்றும் ஆராய்ச்சித் தளங்களில் பல்வேறு வழிகளில் வெளிப்படுத்தப்பட்டு இருக்கின்றன.

ஒரு கொழுப்பு பிற்சேர்க்கைப் பொருளாக மருந்துப்பிசின் - Tragacanth gum (gond katira) as a fat substitute in Tamil

உணவுத் தொழிலில், கொழுப்புக்கு மாற்றாக ஒரு ஆரோக்கியமான மாற்றுப்பொருளைக் கண்டறிய தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மருந்துப்பிசின், இறைச்சி அப்பம் போன்ற பல்வேறு பாக்கெட்டில் அடைக்கப்பட்ட, அல்லது பதப்படுத்தப்பட்ட இறைச்சிப் பொருட்களுக்கு ஒரு திறன்மிக்க மாற்றுப்பொருளாகக் கண்டறியப்பட்டு இருக்கிறது. அதன் பிசின் போன்ற இருப்புத்தன்மை, பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளுடன் இணைந்து செயலாற்றும் காரணியாகவும் மற்றும் அதிக கொழுப்பு உட்பொருளைக் கொண்ட உணவுகளுக்கு, அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு மாற்றுப் பொருளாகவும், அதனை ஆக்குகிறது.

நுண்ணுயிரிகளுக்கு எதிராக கோந்து கத்திரா - Gond katira against microbes in Tamil

கோந்து கத்திரா, நுண்ணுயிர்களுக்கு எதிராகத் திறன்மிக்கதாக இருப்பதும் கண்டறியப்பட்டு இருக்கிறது. மருந்துப்பிசின், ஒரு நுண்ணுயிர் எதிர்ப்பு காரணியாக அதன் திறனை வெளிப்படுத்துவதற்கு பல்வேறு ஆய்வுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு நுண்ணுயிர் எதிர்ப்புக் காரணியாக கோந்து கத்திராவின் செயல்பாடு, அதனுடன் நுண்ணுயிர் எதிர்ப்பு அம்பிஸிலின் இணையும் பொழுது தோன்றுகிறது. அது நுண்ணுயிரிகளுக்கு எதிராக மிகவும் திறன் வாய்ந்ததாக இருப்பது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.ஆயினும், மருந்துப்பிசினின் இந்தப் பண்பைப் பரிசோதிக்க விவோ மருத்துவப் பரிசோதனைகள் தேவைப்படுகின்றன.

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு வாய்வழி எடுத்துக் கொள்ளும் முறையில் கோந்து கத்திரா - Gond katira as an oral delivery system in diabetics in Tamil

கோந்து கத்திரா சாறு, இன்சுலினைத் தக்க வைக்க (அடங்கியிருக்க) பயன்படுத்தப்படுகிறது. இன்சுலின் எடுத்துக் கொள்ளும் நீரிழிவு நோயாளிகள், அதனை நேரடியாக இரத்த ஓட்டத்தில் ஊசி மூலம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது. மருந்துப்பிசினின் பிசின் போன்ற பண்பு, தேவையான அளவு இன்சுலினைப் பிடித்து வைக்க உதவக் கூடியது ஆகும். இந்தத் தயாரிப்பு ஒரு மாத்திரை வடிவத்தில் உட்கொள்ளப்படலாம். மருந்துப்பிசின், இந்த அம்சத்தில் ஒரு உறுதியான திறனைக் கொண்டிருக்கிறது. தேவைப்படும் அளவுக்கு திறன்மிக்க பொருளைத் தயாரிப்பதற்கான ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிகள் இன்னும் நடந்து கொண்டு இருக்கின்றன. (மேலும் படிக்க: நீரிழிவு)

ஒரு கெட்டிப்படுத்தும் காரணியாக மருந்துப்பிசின் (கோந்து கத்திரா) - Tragacanth gum (gond katira) as a thickening agent in Tamil

கோந்து கத்திரா, கெட்டிப்படுத்தும் பண்புகளைக் கொண்டிருக்கிறது மற்றும் ஒப்பீட்டளவில் வெப்பம் மற்றும் அமிலத்தன்மைக்கு நிலையானதாக இருக்கிறது. இது அதனை, காய்கறி கூட்டு, ஊறுகாய், கெட்ச்அப்கள், மற்றும் மயோனைஸ்  தயாரிப்பில் ஒரு பொருத்தமான கெட்டிப்படுத்தும் காரணியாக ஆக்குகிறது. மருந்துப்பிசினின் நிலைப்படுத்தும் பண்பானது, அதனை ஒரு பொருத்தமான பதப்படுத்தியாகவும் ஆக்குகிறது. மேலும், அதன் அமில எதிர்ப்பு பண்பு, இந்தப் பொருட்களின் அலமாரி வாழ்நாளை (அந்தப் பொருளைப் பயன்படுத்த பாதுகாப்பான கால அளவு) அதிகரிக்க உதவுகிறது.

மருந்துப்பிசின், அஷ்டிராகளாஸ் செடி இனங்களின் வேர்களில் இருந்து எடுக்கப்படுகிறது. இந்த செடியின் வேர்கள் உரிக்கப்பட்டு, அவற்றில் இருந்து துகள்களாக (மெல்லிய பட்டைகள்) அல்லது திருகிய நாடாக்களைப் போன்று பிசின் வழிகிறது. பின்பு அந்த பிசின் காயுமாறு விடப்பட்டு, பின்னர் அதனை நொறுக்கி கோந்து கத்திரா பொடி தயாரிக்கப்படுகிறது. கோந்து கத்திரா சந்தையில் பெரும்பாலும் பொடி வடிவத்திலேயே கிடைக்கிறது.

கோந்து கத்திரா, அதன் பல்வேறு ஆரோக்கியம் அளிக்கும் மற்றும் தொழில்முறை நன்மைகளுக்காகப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. கோந்து கத்திராவைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது எனக் கூறப்பட்டு இருக்கிறது. இருப்பினும், அதனைப் பயன்படுத்துவது சில நபர்களுக்கு அவ்வப்போது பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். அந்த பக்க விளைவுகள் கீழே பட்டியலிடப்பட்டு உள்ளன.

  • கோந்து கத்திரா, அதிகமான அளவு தண்ணீருடன் சேர்த்து எடுத்துக் கொள்ளப்படாவிட்டால், சிலருக்கு குடலில் அடைப்பு அல்லது திணறல் ஏற்பட வழிவகுக்கலாம். 
  • குறிப்பிட்ட நபர்கள் இயற்கையாகவே உணவு மற்றும் மருந்துப் பொருட்களில் பயன்படுத்தப்படும் பிசினுக்கு எதிரான ஒவ்வாமை உணர்திறனைக் கொண்டிருக்கின்றனர். மருந்துப்பிசின் அவர்களுக்கு ஒரு ஒவ்வாமை விளைவை ஏற்படுத்தக் கூடும் என்பதால், அது போன்ற நபர்கள் அதனை உட்கொள்வது கூடாது. 
  • கோந்து கத்திராவை உட்கொள்வது, சிலருக்கு மூச்சுப் பிரச்சினைகளையும் கூட ஏற்படுத்தக் கூடும்.

Medicines / Products that contain Gond Kateera (Tragacanth)

மேற்கோள்கள்

  1. Zandleven J, Beldman G, Bosveld M, Benen J, Voragen A. Mode of action of xylogalacturonan hydrolase towards xylogalacturonan and xylogalacturonan oligosaccharides. Biochem J. 2005 May 1;387(Pt 3):719-25. PMID: 15560751
  2. Mokhamad Nur, Todor Vasiljevic. Insulin Inclusion into a Tragacanth Hydrogel: An Oral Delivery System for Insulin. Materials (Basel). 2018 Jan; 11(1): 79. PMID: 29304023
  3. E. Mayhew, E. M. F. Roe. Changes in the Permeability of Landschütz Ascites Tumour Cells to Vital Stains after Treatment with Tumour-Inhibitory or modified Samples of Gum Tragacanth or with Gum Karaya. Br J Cancer. 1964 Sep; 18(3): 537–542. PMID: 14219547
  4. Mehdi Atashkar, Mohammad Hojjatoleslamy, Leila Sedaghat Boroujeni. The influence of fat substitution with κ‐carrageenan, konjac, and tragacanth on the textural properties of low‐fat sausage. Food Sci Nutr. 2018 Jun; 6(4): 1015–1022. PMID: 29983965
  5. Heena Sharma, B. D. Sharma, S. Talukder, Giriprasad Ramasamy. Utilization of gum tragacanth as bind enhancing agent in extended restructured mutton chops. J Food Sci Technol. 2015 Mar; 52(3): 1626–1633. PMID: 25745233
  6. Seyyed Majid Bagheri, Leila Keyhani, Mehrangiz Heydari, Mohammad Hossein Dashti-R. J Ayurveda Integr Med. 2015 Jan-Mar; 6(1): 19–23. PMID: 25878459
Read on app