கற்பூரம் என்பது கற்பூர மரத்தின் மரப்பட்டைகளிலிருந்து பெறப்பட்ட இயற்கையான ரசாயன கலவை ஆகும்.மெழுகு கற்பூர பந்துகள் முதன்மையாக டெர்பென்ஸ்களால் (தாவரங்களால் உற்பத்தி செய்யப்படும் கரிம கலவைகள்) உருவாக்கப்படுகின்றன, அந்த டெர்பென்ஸ்கள்தான் கற்பூரத்தின் வலுவான வாசனைக்கு காரணம் ஆகும்.இயற்கையில், இந்த டெர்பென்ஸ் என்பது தாவரங்களில் உள்ள இயற்கை பாதுகாப்பு முறையின் முக்கிய பகுதிகள் ஆகும்.டெர்பென்சை சாப்பிடும் போது நச்சு தன்மை கொண்டிருப்பதால், அதன் நறுமணம் தாவர உண்ணி மிருகங்கள் கற்பூரத் தாவரத்தை சாப்பிடாமல் பாதுகாக்கிறது.ஆனால் கற்பூரத்தினால் அடைய கூடிய பலன்கள் நிறைய உள்ளன.
அதன் மருத்துவ மற்றும் குணப்படுத்தும் பண்புகளால் கற்பூரம், பாரம்பரிய மற்றும் மேற்கத்திய மருத்துவ அமைப்புகளில் நன்கு அறியப்பட்டுள்ளது.இது சளி நெரிசல், வலி மற்றும் வீக்கம் போன்ற பல்வேறு நிலைமைகளுக்கு நாட்டு மருத்துவ தீர்வு ஆகும். உண்மையில், சில ஆய்வுகள் கற்பூரம் எரிந்த காயங்கள் மற்றும் பூஞ்சை தொற்று ஆகியவற்றை குணப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறுகின்றன.
கற்பூரம் இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகியவற்றின் பூர்வீகமான சொந்தக்காரராக இருந்தாலும், உலகின் பெரும்பாலான வெப்ப மண்டலப் பகுதிகளில் கற்பூரம் பரவலாக பயிரிடப்படுகிறது.சுவாரஸ்யமாக, இது 'குளோபல் இன்வாசிவ் ஸ்பெசீஸ் டேட்டாபேஸ்' ல் ஒரு நச்சுத்தன்மையுள்ள தாவரம் என்ற பட்டியலிடப்பட்டுள்ளது.
60 அடி உயரம் வரை வளர கூடிய ஒரு பசுமையான மரம் கற்பூரம். கற்பூர மரங்கள் பூர்வீக காடுகளில் தலை எடுத்து, விரைவாக பரவ கூடியது. அந்த மரத்திற்கு ஒரு குடை போன்ற தோற்றத்தை கொடுக்கும் வகையில், அதன் கிளைகள் பரவ முற்படுகின்றன. கற்பூர மரம் நீள்வட்ட இலைகள் மற்றும் சிறிய வெள்ளை பூக்களைக் கொண்டுள்ளது.அதன் பழம் வட்ட வடிவமாகவும் மற்றும் பொதுவாக ஊதா நிறத்தில் இருந்து கருப்பு நிறம் வரையிலும் இருக்கும்.
உங்களுக்கு தெரியுமா?
கற்பூரம் ஒரு மரம் மட்டுமல்ல, அது ஒரு எண்ணெய் மற்றும் ஒரு இரசாயன கலவை ஆகும். ஒரு இரசாயன கலவையாக அதை லாவெண்டர், கற்பூர துளசி மற்றும் ரோஸ்மேரி போன்ற தாவரங்களின் அத்தியாவசிய எண்ணெய்களில் இருந்து பெறலாம்.
கற்பூர லாரல் (வளையம்) அல்லது கற்பூர மரம் பற்றிய சில அடிப்படை தகவல்கள்:
- தாவரவியல் பெயர்: சின்னமோம் காம்போரா
- குடும்பம்: லாரசீஸ்
- பொதுவான பெயர்கள்: காம்போர் லாரல், கற்பூரம், கற்பூர மரம், கபூர்
- பயன்படுத்தப்படும் பகுதிகள்: இலைகள், பட்டை
- உள்ளூர் பகுதி மற்றும் புவியியல் பரப்பளவு: கற்பூர வகைகள், சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் போன்ற வெப்ப மண்டலப் பகுதிகளை பூர்வீகமாக கொண்டவை, ஆனால் அவை தற்போது அமெரிக்காவிலும், குறிப்பாக புளோரிடாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- ஆற்றலியல்: குளுமையானது