அமுக்கரா கிழங்கு என்றால் என்ன?
நீங்கள் ஆயுர்வேத மருந்துகள் எடுத்துகொள்கிறீர்கள் அல்லது மாற்று மருந்துகளை நம்புகிறீர்கள் என்றால், அமுக்கரா கிழங்கு என்ற பெயரை நீங்கள் பல முறை கேட்டிருக்க வாய்ப்புகள் உள்ளன. ஏன் இல்லை? அமுக்கரா கிழங்கு மிகவும் முக்கியமான ஆயுர்வேத மூலிகைகளில் ஒன்றாகும். அதர்வன வேதத்தின் படி அமுக்கரா கிழங்கின் இருப்பு மற்றும் பயன்பாடு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு பின்னர் நம்மை அழைத்துச் செல்கிறது. இந்தியாவின் பண்டைய மரபு சார்ந்த மருத்துவ முறை பெரும்பாலும் அமுக்கரா கிழங்கை "மாயாஜால மூலிகை" அல்லது அடாப்டோகான் (மன அழுத்த எதிர்ப்பு முகவர்) என்று குறிப்பிடுகிறது. ஏனெனில் அமுக்கரா கிழங்கு மன அழுத்தம் தொடர்பான அறிகுறிகள் மற்றும் பதற்றம் போன்ற குறைபாடுகளில் இருந்து விடுபட மிகவும் பொதுவாக பயன்படுத்தப்படும் மூலிகைகளில் ஒன்றாகும்.
அமுக்கரா கிழங்கிற்கு அஸ்வகந்தா என்ற பெயர் உண்டு. அஸ்வ என்ற சொல் குதிரையையும், கந்தா என்ற வாசனையையும் குறிக்கிறது. கூடுதலாக உண்மையில், அஸ்வகந்தாவின் வேர்களிலிருந்து குதிரையின் சிறுநீர் அல்லது வியர்வையின் தனித்துவமான மணம் வரும். இவ்வாறாக இந்த அமுக்கரா கிழங்கு, அஷ்வகந்தா என்று பெயர் பெற்றது. மேலும், அமுக்கரா கிழங்கு, மனிதனின் உடலில் சேரும் போது, மனிதனுக்கு குதிரை போன்ற வீரியத்தை (வலிமை மற்றும் பாலியல் சக்தியை) அளிக்கிறது என்று ஆயுர்வேத ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.
அமுக்கரா கிழங்கு பற்றிய சில அடிப்படை தகவல்கள்:
- தாவரவியல் பெயர்: வித்தானியா சோம்னிஃபெரா
- குடும்பம்: சோலனேசே (நைட்ஷேட் குடும்பம்)
- சமஸ்கிருதப் பெயர்கள்: அஷ்வகந்தா, வராஹகர்ணி (பன்றி காதுகளை போன்ற இலைகள்), காமரூபினி.
- பொதுவான பெயர்கள்: குளிர்கால செர்ரி, இந்திய ஜின்ஸெங், விஷ நெல்லிக்காய்.
- பயன்படுத்தப்படும் பகுதிகள்: பெரும்பாலும் இதன் வேர்கள் மற்றும் இலைகள் பயன்படுத்தப்படுகிறது ஆனால் மலர்கள் மற்றும் விதைகள் கூட பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
- பூர்வீக பிராந்தியம் மற்றும் விநியோகம் செய்யப்படும் புவியியல் பரப்பு: அமுக்கரா கிழங்கு இந்தியாவின் பெரும்பாலான பல வறண்ட பகுதிகள் (முக்கியமாக மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான்), நேபாளம், ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு ஆகிய நாடுகளை பூர்வீக இடங்களாக கொண்டுள்ளது, ஆனால் இது அமெரிக்காவிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.