சாம்பல் அல்லது பழுப்பு நிறத்தை கொண்டதும், நீள் வடிவினை அல்லது முட்டை வடிவினைக் கொண்டதும் ஆன சியா விதைகள் சால்வியா ஹிஸ்பனிக்கா என்னும் பெயரைக் கொண்ட சியா செடியின் விதைகள் ஆகும். ஒரு மில்லிமீட்டர் குறுக்களவு கொண்ட சியா விதைகள் ஆற்றலின் சேமிப்புக் கூடமாக விளங்குகிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. வலிமை என்னும் பொருளைக் கொண்ட பண்டைய மாயன் சொல்லில் இருந்து பெறப்பட்ட பெயரே சியா விதைகள் ஆகும். ஊட்டச்சத்துக் களஞ்சியமாக விளங்குகிறது சியா விதைகள். வரலாற்ற்று ஆசிரியர்கள் பலரின் கூற்றுப் படி சியா விதைகளை முதன் முதலில் அறுவடை செய்தது ஆஸ்டெக்ஸ் பழங்குடி இனத்தவர்கள் தான் என்பதாகும். நவீன காலத்தின் மெக்ஸிகோ மற்றும் குவாதமாலா என்று சொல்லப்படுகிற நாடுகளுக்கு அருகாமையில் தான் இந்த ஆஸ்டெக்ஸ் பழங்குடி இனத்தவர்கள் வாழ்ந்து வந்ததாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. சியா விதைகள் என்னில் அடங்காத பல ஆற்றல்களை தன்னுள் கொண்டுள்ளதால், சியா விதைகளை புனிதத்தின் ஒரு அடையாளமாக கருதினர் அமெரிக்க இந்திய பழங்குடியினர். இதன் காரணமாக ஆஸ்டெக்ஸ் குருக்கள்களுக்கு சியா விதைகளை காணிக்கையாகவும் பிரசாதமாகவும் படைத்தது வந்தனர் பழங்குடியினர்.
நவ நாகரிக காலத்தில், சியா விதைகளை தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வணிக ரீதியாக பயிரிட்டு வருகின்றன.
பண்டைய காலம் முதல் சியா விதைகளை உபயோகித்து வந்த வரலாறுகள் பல இருந்தாலும், நவீன கால கட்டத்தில் அதன் மகத்துவத்தையும் நன்மைகளையும் புரிந்து அதனை உபயோகிக்குமாறு பிரபலப்படுத்தி வருகின்றனர். இதன் செய்முறையில் பலரும் தூண்டப்பட்டு, சியா விதையை தனது தினசரி உணவின் ஒரு பங்காக உபயோகிக்கின்றனர். இதன் காரணமாக சியா விதைகளை நவீன காலத்தின் சூப்பர்ஃபுட் என்று புகழ்கின்றனர். ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் நார் சத்துக்களை அதிகமாக கொண்ட சியா விதைகள், மேலும் பல ஊட்டச்சத்துக்களை உடலில் சேர்க்க உதவுகிறது. அவை - அதிகப்படியான ஆன்டிஆக்சிடண்ட்ஸ் , வைட்டமின்கள், மற்றும் தாதுக்கள் ஆகும். உடலின் ஊட்டச்சத்தை அதிகரிப்பதோடு, உடலில் ஏற்படும் செரிமான கோளாறுகள், இதய நோய்கள், மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை எதிர்த்து போராடி, நோய்கள் நம்மை பாதிக்காமல் காத்து நிற்கிறது. இத்தகைய நற்குணங்களை கொண்ட சியா விதைகள் உண்மையில் ஒரு ஊட்டச்சத்து மிகுந்த உணவாகும்.
சியா விதைகள் பற்றிய சில முக்கிய தகவல்கள்
- தாவரவியல் பெயர் சால்வியா ஹிஸ்பனிக்கா
- குடும்பம் லேபியாடே
- வேறு பெயர்கள் மெக்ஸிகன் சியா அல்லது சல்பன் சியா
- பரவலாக காணப்படும் இடங்கள் மெக்ஸிகோ மற்றும் குவாதமாலா ஆகிய இடங்களை தன் தாயகமாகக் கொண்ட சியா விதைகள் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பொலிவியா, ஈக்வடார், நிகரகுவா, பெரு மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் வணீக ரீதியாக பயிரிடப்பட்டு வருகிறது.
- வேடிக்கையான உண்மைகள் கலிஃபோர்னியாவில் உள்ள ஜோசப் என்டர்ப்ரைசஸ் லிமிடெட் என்னும் நிறுவனத்தைச் சேர்ந்த ஜோ பேடட் சியா விதைகளின் விளைச்சலை பிரபலப்படுத்த விலங்குகள் வடிவிலான டெரக்கோட்டாவினை வடிவமைத்து விற்று வந்தார். சில தினங்களுக்கு தண்ணீர் பாய்ச்சிய பிறகு, சியா விதைகளை பயிரிட்டனர். சியா செடிகள் வளர்ந்து வரும்பொழுது அவை விலங்குகளின் மென்மையான முடி போல அழகாக தோற்றம் அளித்தது. 2007 ஆம் ஆண்டில், அமெரிக்காவில் மட்டும் சுமார் ஐந்து லட்சம் சியா பெட்ஸ் என்று சொல்ல கூடிய விலங்குகள் வடிவிலான டெரக்கோட்டாக்கள் விற்பனை ஆகின.