காப்பி மாய சக்திகள் கொண்ட ஒரு மாய பானம் ஆகும். ஒரு குளிர்கால நாளில் காப்பியின் சூடான ஒரு கோப்பையை விரும்பாதவர் யார் இருப்பார்கள்! இந்த கருநிறம் கொண்ட கஷாயம் கொஞ்சம் கசப்பாகவும் அமிலதன்ம்மை நிறைந்ததாகவும் இருக்கும். ஆனால், காலை உணவு ஒரு கப் இல்லாமல் நிறைவடையாது. ஒரு நாளைக்கு சுமார் 400 பில்லியன் கப் காப்பியை உலகம் முழுவதும் பருகிறார்கள் என்று அரிந்தால் நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள்.
நாம் அறிந்த, நறுமணம் நிறைந்த காப்பி கொட்டைகள் ஆகிய இவை, உண்மையில் காப்பி பழங்களின் வறுக்கப்பட்ட விதைகள் ஆகும். காப்பியின் மனம் மற்றும் சுவை, காப்பி பீன்ஸ் வறுத்தெடுக்கும் அளவுக்கு பொருத்தது. அரபு மற்றும் ராபஸ்டா காப்பியில் இரண்டு மிகவும் பிரபலமான வகைகள் ஆகும் . எனினும், அரபு காப்பி உயர்ந்த தரமாக கருதப்படுகிறது. அது ஒரு சிறந்த நறுமணம் மற்றும் சுவையை கொண்டுள்ளது. காப்பி பெரும்பாலும் சூடாக பரிமாறப்படுகிறது. ஆனால் குளிர்ந்த காப்பியும் ஒரு பிரபலமான பானம் ஆகும்.
பிரேசில் நாடு உலகத்தின் மிக பெரிய காப்பி உற்பத்தியாளர் ஆகும். இந்தியாவின் உள்ள மூன்று பெரிய காப்பி உற்பத்தி மாநிலங்களில், கர்நாடகா முதன்மையானது, அது இந்தியாவின் மொத்த உற்பத்தியில் 71% பங்கு வகிக்கிறது. அதற்கு அடுத்தாக கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகியவை உள்ளன. கர்நாடகவின் காப்பி உற்பத்தியில் 80 சதவீதத்திற்கும் அதிகமாக சிக்மகளூர் மற்றும் கொடகு பகுதிகள் உற்பத்தி செய்கின்றன.
காப்பியை வெற்றிகரமான ஒரு பானமாக்க அதில் உள்ள காப்பின் ஒரு பெரிய பங்குவகிக்கிறது. அது மனித உடலில் சக்தி மேம்படுத்தும் தன்மை வாய்ந்தது. மேலும், காப்பி பல உடல் நலன்களையும் அளிக்கிறது. இது, மன அழுத்தத்தை குணப்படுத்த, மார்பக புற்றுநோய் தடுக்க மற்றும் கல்லீரலை பாதுகாக்கவும் உதவுகிறது. இதில் அண்டி-ஆக்சிடன்ட்ஸ் நிறைந்துள்ள்ளது மற்றும் பிற உயிரியல் சேர்மங்களின் ஆதாரமாக உள்ளது, மற்றும் உடல் ரீதியாக புத்துயிர் பெற உதவுகிறது
காப்பி பற்றிய சில அடிப்படை விஷயங்கள் :
- தாவரவியல் பெயர்: கோஃபி
- குடும்பம் : ரூபியாசி
- பொதுவான பெயர்: காப்பி
- சமஸ்கிருத பெயர்: काफी (காப்பி) / पीयूष (பியுஷ்)
- பயன்படுத்தப்படும் பாகங்கள்: காப்பி பீன்ஸ்
- பூர்வீக பிராந்தியம் மற்றும் புவியியல் விநியோகம்: காப்பி செடி எதியோப்பியாவின் காஃபா பகுதியிலிருந்து தோன்றியதாக நம்பப்படுகிறது. இது துணை சஹாரா ஆப்பிரிக்காவின் வெப்ப மண்டல பகுதிகளை சேர்ந்தது. ஹவாய், மெக்சிகோ, பியுர்டோ ரிகோ, கோஸ்டா ரிகா, கொலம்பியா, பிரேசில், எத்தியோப்பியா, கென்யா, இந்தியா மற்றும் யேமன் ஆகிய பிரதேசங்களில் காப்பி தாவரங்கள் பயிரிடப்படுகின்றன
- சுவாரஸ்யமான தகவல்கள்: உலகில் எண்ணெய்க்கு பிறகு இரண்டாவதாக மிகப் அதிகமாக வர்த்தகம் செய்யப்படுவது காப்பி ஆகும்