தேன் என்பது, மலர்களின் மகரந்தங்களில் இருந்து உற்பத்தியாகிற இனிப்பான மற்றும் பிசுபிசுப்பான திரவம் ஆகும். உலகம் முழுவதும் உள்ள ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாக மதிக்கப்படுகிற தேன், ஏராளமான மருத்துவப் பயன்களைக் கொண்ட ஒரு அருமையான உருவாக்கம் ஆகும். மேலும் அது மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் இனிப்பூட்டி ஆகும். சொல்லப் போனால், 18 ஆம் நூற்றாண்டில் கண்டங்களுக்கு இடையே வர்த்தகம் நடந்து, கரும்புகள் கிடைக்கின்ற வரையில், சர்க்கரை என்ற ஒன்று இல்லை.
தேனீக்கள், முதன் முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. ஆனால் அவை, 100 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பதாக நம்பப்படுகிறது. எனவே, உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இருக்கும் மக்கள், தேனைப் பயன்படுத்துவதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. ஏறத்தாழ அனைத்து பண்டைய நாகரிகங்களின் புராணங்கள் மற்றும் வேதங்கள், தேனைப் பற்றிய குறிப்புகளைக் கொண்டிருக்கின்றன. தேன், அதன் ஊட்டச்சத்து அளிக்கும் பண்புகளுக்காக பைபிளில், மற்றும் ஒரு குணமளிக்கும் பானமாக, குர்ஆனில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. தேன், அதன் ஏராளமான குணமளிக்கும் நன்மைகளுக்காக, ஆயுர்வேதத்தில் ஒரு தனித்துவமான இடத்தைக் கொண்டிருக்கிறது. நவீன மருத்துவமும் கூட, தேனின் எண்ணற்ற நன்மைகளை ஒப்புக் கொள்கிறது. அதைக் "கடவுள்களின் உணவு" என்று அழைப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
இயற்கையான தேன், அதன் நிறத்தைக் கொண்டு தரம்பிரிக்கப்படுகிறது. தெளிவான பொன்னிறமான தேன், கருப்பான ஒன்றை விட அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. மிதமான நிறமுடைய தேன், திடமான சுவையை உடைய கருமை நிற ஒன்றுடன் ஒப்பிடும் பொழுது, பொதுவாக அதைவிட அதிக மென்மையாக மற்றும் இனிப்பாக இருக்கின்றது.
தேன் இரண்டு வடிவங்களில் கிடைக்கிறது - இயற்கை நிலையில் உள்ளது மற்றும் பதப்படுத்தப்பட்டது. இயற்கை நிலையில் உள்ள தேன், அனைத்து நொதிகள், மகரந்த துகள்கள் மற்றும் பிற நுண்ணூட்டச்சத்துக்களைக் கொண்டிருக்கிறது. இவை, வெப்பத்தின் மூலம் தேன் பதப்படுத்தப்படுகிற பொழுது, வழக்கமாக வடிகட்டி வெளியேற்றி விட அல்லது அழிக்கப்பட்டு விடப்படுகின்றன. இயற்கை நிலையில் உள்ள தேன் வடிகட்டப்படாமல் இருப்பதால், அது உடனடியாக உறைந்து விடுகிறது. மற்றொரு புறம் பார்க்கும் பொழுது பதப்படுத்தப்பட்ட தேன், நீண்ட நாட்களுக்கு திரவ வடிவத்திலேயே நீடிக்கிறது.
தேன் எங்கு விற்பனைக்கு செல்லப் போகிறதோ அதைப் பொறுத்து, சில்லறை விற்பனைக்காக அது சிறிய பாட்டில்களில் அடைக்கப்படலாம் அல்லது பெரிய பீப்பாய்களில் அடைக்கப்பட்டு ஏற்றுமதியும் செய்யப்படலாம். பல்வேறு விதமான நுகர்வோர்களுக்கு வழங்க வேண்டிய காரணத்தினால், தேன் பல்வேறு வித அளவுகள் மற்றும் பாணிகளில் உள்ள குப்பிகளில் அவை அடைக்கப்படுகின்றன. அவற்றுள் கண்ணாடி ஜாடிகள், பிளாஸ்டிக் டப்பாக்கள், மற்றும் நசுக்கக் கூடிய பாட்டில்கள் ஆகியவை அடங்கும்.
உங்களுக்குத் தெரியுமா?
தேனின் நறுமணம், சுவை, நிறம் மற்றும் குணங்கள், அது எந்த மகரந்தத்தில் இருந்து எடுக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து இருக்கிறது. மலர்களின் தனித்த வாசனைகள் மற்றும் நறுமணச்சுவைகள் ஆகியவை, அவற்றின் மகரந்தத்துக்குள் ஊடுருவி, அதில் உற்பத்தியாகும் தேனில் பிரதிபலிக்கின்றன. தேனின் சுவை, நிறம், மற்றும் பண்புகள் ஆகியவை, ஒரே நாடாக இருந்தாலும், பிரதேசத்துக்குப் பிரதேசம் மாறுபடுகிறது.
தேனைப் பற்றிய சில அடிப்படை விவரங்கள்:
- பொதுவான பெயர்: ஷாகத் (இந்தி), தேன்
- சமஸ்கிருதப் பெயர்: மது
- சொந்த பிராந்தியம் மற்றும் புவியியில் பரவுதல்: சீனா, துருக்கி, அமெரிக்க ஐக்கிய நாடுகள், ரஷ்யா, மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முதன்மையான தேன் உற்பத்தியாளர்கள் ஆகும்.
- சுவாரசியமான தகவல்:ஒரு காற்றுப் புகாத ஜாடியில் வைக்கப்பட்டு இருந்தால், தேன் நிலையான ஆயுளைக் கொண்டிருக்கும். எப்போதும் அது கெட்டுப் போகாது.