இந்திய சமையலறையில் சில மாற்ற முடியாத விஷயங்கள் உள்ளன. அது ஏனென்றால், சில ஆச்சரியமான பிராந்திய சுவை கொண்ட பதார்த்தங்களை சமைக்க பயன்படுத்தப்படுவது மட்டும் இல்லாமல், அவற்றின் நன்மைகள் வேறுபட்டவை மற்றும் சமையலறையின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டவையாக உள்ளது. அத்தகைய பொருட்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு 'கடுகு எண்ணெய்'. இது ஒரு தனித்துவமான கடுமையான மணம் கொண்டது அதனால் மற்றும் அதைப் பயன்படுத்த பழக சிறிது காலம் எடுக்கிறது. ஆனால் நீங்கள் அதைப் பயன்படுத்த தொடங்கிவிட்டால், அதன் மிகச்சிறந்த சுவையை பாராட்ட கற்றுக்கொள்வீர்கள். இது நம்மை அடிமைபடுத்தக் கூடியது.
இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் கடுகு எண்ணெய் பயன்படுத்தாத ஒரு குடும்பத்தை கற்பனை செய்வது கூட கடினம். இது பூஞ்சை தொற்று நோய்க்கு சிகிச்சை அளிக்கவும், ஜலதோசத்தை குணப்படுத்தவும், முடி வளர்ச்சியை அதிகரிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கவும், சருமத்திற்கு ஊட்டமளிக்கவும், எலும்புகளை வலுப்படுத்தவும், வாய்வழி ஆரோக்கியத்தையும் அதிகரிக்கவும் மற்றும் இன்னும் பல அசாதாரண மருத்துவ குணங்களையும் கொண்டுள்து என நம்பப்படுகிறது. இந்த பட்டியல் முடிவு இல்லாதது.
கடுகு எண்ணெய் கடுகு விதைகளை (கருப்பு, பழுப்பு அல்லது வெள்ளை) குளிர் அழுத்தம் செய்வது மூலம் எடுக்கப்படுகிறது. மேலும் கடுகு எண்ணெய் சிவப்பு பழுப்பு அல்லது அம்பர் வண்ணத்தில் இருக்கும். இது பொதுவாக வடக்கு மற்றும் கிழக்கு இந்தியா, பங்களாதேஷ், பாக்கிஸ்தான் மற்றும் நேபாளத்தில் பயன்படுத்தப்படுகிறது. எனினும், அது இப்போது மிக பிரபலமாகி வருகிறது, மிக மிக சிறந்த உணவகங்கள் சிலவற்றில் கூட தலைமை சமயல் கலைஞர்கள் தங்கள் சமையல்களில் இந்த எண்ணெயை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். சமையலில் பயன்படுத்தப்படுவதைத் தவிர, கடுகு எண்ணெய் சாலட்டில் , குழந்தைகளின் மசாஜ் எண்ணெயாக, முடியில் தடவும் எண்ணெயாக, முகம் மற்றும் உடலில் தடவ பயன்படுத்தப்படும் எண்ணெயாகவும் பயன்படுத்தப்படுகிறது.
கடுகு எண்ணெய் பற்றி சில அடிப்படை தகவல்கள்:
- தாவரவியல் பெயர்: ப்ராசிகா ஜூன்சியா
- குடும்பம்: பிராசிகாசியா
- பொது பெயர்: சார்சொன் கா டெல்
- சமஸ்கிருத பெயர்: சர்ஷாபாட்டியாலா
- பயன்படுத்தப்படும் பகுதிகள்: கடுகு எண்ணெயை கடுகிலிருந்து பிரித்தெடுக்க கடுகு விதைகள் அழுத்தப்படுகிறது
- உள்ளூர் பகுதி மற்றும் புவியியல் பரப்பளவு: கடுகு எண்ணெய், கிழக்கு இந்தியா, வட இந்தியா, பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகியபகுதிகளில் சமையல் செய்ய பயன்படுத்தப்படுகிறது.
- சுவாரசியமான தகவல்: சமையலறையில் பயன்படுத்தப்படுவதை தவிர, கடுகு எண்ணெய் பல்வேறு பண்டிகைகளிலும் சந்தர்ப்பங்ககளிலும் பயன்படுத்தப்படுகிறது. எனவே இந்தியர்கள் கடுகு எண்ணைக்கு கலாச்சார மற்றும் பாரம்பரிய முக்கியத்துவத்தை கொடுக்கின்றனர் என்று தைரியமாக சொல்லலாம்.பஞ்சாபி கலாச்சாரத்தில், மாப்பிள்ளையின் தாய் மணமகளை வரவேற்பதன் அறிகுறியாக கதவுவின் இரு பக்கங்களிலும் கடுகு எண்ணெய்யை ஊற்றி வைப்பார்கள்
தீபாவளி போன்ற பண்டிகை நிகழ்ச்சிகளில் இது மண் விளக்குகள் அல்லது தியாஸ் களில் பயன்படுத்தப்பட்டு ஒளியூட்டப்படுகிறது.மையான் என்று அழைக்கப்படும் திருமணத்திற்கு முன்பான நிகழ்ச்சியில், கடுகு எண்ணை திருமணம் செய்து கொள்ள போகும் மணமக்களுக்கு தடவும் ஒரு சாந்து தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய பொருட்களில் ஒன்றாகும்.