கழுத்து வலி என்றால் என்ன?
கழுத்து வலி என்பது ஆண்கள் மற்றும் பெண்களிடத்தில் நடுத்தர வயதில் காணப்படும் ஒரு பொதுவான நிலைமையாகும். இது கழுத்துப்பகுதியில் உள்ள முள்எலும்புகளில் தொடங்குவதால், கழுத்து வலி என்று அழைக்கப்படுகின்றன. கழுத்து வலி ஒரு தசைஎலும்புக்கூட்டு கோளாறின் விளைவாக ஏற்படுகின்றது. இதனால், கழுத்தைச் சுற்றி உள்ள தசைகளில் லேசான வலி முதல் கழுத்தின் வழக்கமான அசைவுகளில் சிரமம் மற்றும் மேல் மூட்டுகளில்/கைகளில் உணர்ச்சி இழப்பு ஆகிய கடுமையான விளைவுகள் வரை ஏற்படுத்தக்கூடும்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
கழுத்து வலி என்பது ஒரு கடுமையான அல்லது நாள்பட்ட நிலைமையாக இருக்கக்கூடும். கழுத்து வலியுடன் தொடர்புடைய சில பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:
- கழுத்துத் தசைகளில் விறைப்புத் தன்மை.
- கழுத்தின் அசைவுகள் தடைபடுதல்.
- கைகளில் கூச்ச உணர்வு அல்லது உணர்வின்மை.
- கழுத்துப் பகுதியில் வலி.
- கைகள் மற்றும் தோள்களில் வலி.
அரிதான அறிகுறியாக ஒற்றைத் தலைவலி ஏற்படக்கூடும். நாட்பட்ட வலி ஏற்பட்டால், சில நரம்பியல் ரீதியான சிக்கல்கள் ஏற்படலாம்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
கழுத்து வலி பல்வேறு காரணங்கள் காரணமாக இருக்கலாம். பொதுவான காரணங்கள் பின்வருமாறு:
- கழுத்தை அதிக அசைவுக்கு உள்ளாக்குவதால் ஏற்படும் கழுத்துச் சுளுக்கு.
- கழுத்து எலும்பில் அடிபடுவதால் ஏற்படும் காயம்.
- விளையாடுவதினால் ஏற்படும் காயங்கள்.
- தண்டுவட சிதைவு நோய்.
- தவறான முறையில் அமர்ந்து வேலை பார்த்தல்.
- கழுத்தில் தசைச்சுரிப்புக்கோளாறு.
- கணினி / மொபைல் போன்றவற்றின் அதிகப்படியான பயன்பாடு.
- சோர்வு அல்லது தூக்கமின்மை.
- கழுத்து முதுகெலும்பு இணைப்பு பிரிநோய்/செர்விகல் ஸ்பாண்டிலோசிஸ், முடக்கு வாதம் மற்றும் எலும்புப்புரை போன்ற நிலைமைகள்.
- மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்ற உணர்வு சார்ந்த காரணிகள்.
அரிதாக, கழுத்து பகுதியில் வளரும் ஒரு கட்டியின் காரணமாக கழுத்து வலி ஏற்படக்கூடும்.
இதன் பரிசோதனை முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் யாவை?
கழுத்து வலி ஏற்படுவதற்கான காரணம் ஒரு முழுமையான மருத்துவம் சார்ந்த வரலாறு மற்றும் உடல் பரிசோதனை அடிப்படையில் கண்டறியப்படுகிறது. நோயறிதலை உறுதிப்படுத்த பின்வரும் கண்டறியும் கருவிகளை பயன்படுத்தப்படலாம்:
- முதுகெலும்பின் எக்ஸ்-கதிர்கள் (எக்ஸ் - ரே) சோதனை.
- கழுத்துப் பகுதியின் காந்த அதிர்வு விம்பங்கள் (எம்.ஆர்.ஐ).
- சி-எதிர்வினை புரதம் மற்றும் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் டி க்கான இரத்த பரிசோதனை, குறிப்பாக நோயாளியிடம் முன்பு ஏதேனும் அழற்சி நோய் கண்டறியப்பட்டால் இவை செய்யப்படுகின்றன.
கழுத்து வலிக்கான சிகிச்சைகள் பின்வருமாறு:
- பிசியோதெரபி- குறுகிய கால மூட்டு முடக்கம்.
- கழுத்து பயிற்சிகள்.
- துளையிட்ட மின்காந்த புல சிகிச்சை.
- வலியைப் போக்க ஸ்டீராய்டு-அல்லாத அழற்சி-எதிர்ப்பு மருந்துகள். மற்றும் தசையைத் தளர்வு செய்யும் மருந்துகள் உள்ளடக்கிய சிகிச்சை.
- வெப்ப அழுத்தங்கள்.
நாள்பட்ட வலியை போக்க பின்வரும் சிகிச்சை முறைகளை பயன்படுத்தலாம்:
- தசையை வலிமையாக்கக்கூடிய மற்றும் உடல் உறுதியை மேம்படுத்தவதற்கான பயிற்சிகள்.
- உடற்பயிற்சி சிகிச்சை மற்றும் வெப்பச் சிகிச்சை.
- வலி நிவாரணிகள், அழற்சி எதிர்ப்பு மருந்துகள் மற்றும் தசை தளர்த்திகள்.
- ஆலோசனை.
- குத்தூசி மருத்துவம் போன்ற மாற்று சிகிச்சைகள்.
- நரம்பியல் சிக்கல் ஏற்படும் போது, அறுவை சிகிச்சை.
சுருக்கமாக, கழுத்து வலி என்பது கழுத்து பகுதியில் இருந்து உருவாகிறது மற்றும் இது தசை வலியில் தொடங்கி நரம்பியல் சிக்கல்கள் வரையிலான துன்பங்களை ஏற்படுத்தும். இதற்க்கு உடற்பயிற்சி, முடநீக்கியல் மற்றும் மருந்துகள் மூலமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. சரியான முறையில் அமர்ந்து வேலை பார்த்தல் மற்றும் உடற்பயிற்சி இதுபோன்ற வலி தரும் நிலைமையிலிருந்து தடுக்க உதவுகின்றன.