குரோன்'ஸ் நோய் என்றால் என்ன?
குரோன்'ஸ் நோய் என்பது ஒரு வகை குடல் அழற்சி நோய் (ஐ.பி.டி) ஆகும். இது செரிமான அமைப்பின் நீண்ட கால அழற்சி நிலையாக இருப்பதோடு, வாயில் இருந்து ஆசனவாய் வரை எந்த பகுதியிலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. இது முக்கியமாக வளரும் நாடுகளில் காணப்படும் நோய் வகை மற்றும் இது நகரமயமாக்குதலின் விளைவாகக்கூட ஏற்படலாம். இந்த நோயின் பாதிப்பு உலகளவில் 0.3% சதவிகித்திற்கு மேல் அதிகரித்துள்ளது. பிற ஆசிய நாடுகளை காட்டிலும் இந்தியாவிலேயே இதன் நிகழ்வு மற்றும் பாதிப்பு அதிகமாக உள்ளதாக ஆய்வுகளை ஒப்பிட்டுப் பார்க்கையில் தெரியவந்துள்ளது.
இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?
முதன்மையாக, குரோன்'ஸ் நோய் என்பது சிறு குடலின் கீழ் பிரிவினையே பாதிக்கிறது. பொதுவாகவே இந்நோய் படிப்படியாக வளரக்கூடியது எனவே இதன் அறிகுறிகளும் அடையாளங்களும் லேசாக ஆரம்பித்து கடுமையாக ஏற்படுகின்றது, ஆனால் சில நேரங்களில் இந்நோய் திடீரென்றும் ஏற்படலாம். வெளிப்படையான அறிகுறிகள் அல்லது அடையாளங்கள் இல்லையெனில் அது இந்நோய்கான நிவாரணக் காலமாக கூட இருக்கலாம். நோய் இருக்கிறது என்பதை பொதுவாக வெளிப்படுத்தும் அறிகுறிகள் பின்வருமாறு:
- தொடர்ந்து இருக்கும் வயிற்றுப்போக்கு.
- காய்ச்சல்.
- களைப்பு.
- வயிற்று வலி மற்றும் தசைப்பிடிப்பு.
- மலத்தில் இரத்தம்.
- வாயில் புண்கள்.
- பசியின்மை.
- எடை இழப்பு.
- ஃபிஸ்துலா உருவாக்கத்தினால் ஆசனவாய் பகுதியில் உண்டாகும் வலி
குரோன்'ஸ் நோய் கடுமையாக இருக்கும் போது ஏற்படும் அறிகுறிகள் பின்வருமாறு:
- கண், மூட்டுகள் மற்றும் தோலில் ஏற்படும் அழற்சி.
- கல்லீரல் அல்லது பித்தநீர் பாதைகளில் ஏற்படும் அழற்சி.
- குழந்தைகளுக்கான வளர்ச்சி அல்லது வயதிற்கு தேவையான பாலியல் வளர்ச்சிகள் தாமதமாடைதல்.
இதன் முக்கிய கரணங்கள் யாவை?
இந்நோய் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சமமான பாதிப்பினை ஏற்படுத்துவதோடு பொதுவாக 15லிருந்து -35 வரை வயதுள்ள மக்களிடத்திலேயே காணப்படுகிறது. குரோன்'ஸ் நோய்க்கு எந்த குறிப்பிட்ட காரணமும் இல்லை. சில காரணிகள் நோயின் ஆபத்தினை அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது:
- பரம்பரை: குரோன்'ஸ் நோய் இருக்கக்கூடிய குடும்ப வரலாற்றைக் கொண்ட தனிநபர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர்.
- நோயெதிர்ப்பு அமைப்பு: ஒரு வைரஸோ அல்லது பாக்டீரியமோ ஒரு அசாதாரண நோயெதிர்ப்பிற்கு-மருந்தூட்டப்பட்டதனால் ஏற்படும் விளைவினை தூண்டலாம், இதனால் நோயெதிர்ப்பு மண்டலம் செரிமான குழாயில் உள்ள அணுக்களை தாக்குவதற்கு காரணமாவதோடு அழற்சியையும் ஏற்படுத்துகிறது.
- நகர்ப்புறப் பகுதியில் வசிப்பது மற்றும் கொழுப்பு நிறைந்த உணவு பழக்கம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட உணவுகள் போன்ற சுற்றுச்சூழல் காரணிகள் கூட இந்நோயிக்கான பெரிய பங்கினை வகிக்கலாம்.
- கிழக்கு ஐரோப்பிய வம்சாவளி மக்களுக்கு இந்நோயினால் ஆபத்து அதிகமாக உள்ளது.
இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?
வழக்கமாக நடத்தப்படும் சில பொதுவான சோதனைகள் கீழ்கண்டவாறு:
- இரத்த பரிசோதனைகள்:
- ஏதேனும் நோய்த்தொற்று, இரத்த சோகை, அழற்சியின் விளைவு மற்றும் ஏதேனும் வைட்டமின் அல்லது கனிம குறைபாடுகள் இருந்தால் அவற்றை கண்டறிதல்.
- இரத்த கசிவு ஏதேனும் உள்ளதா என்று மலம் பரிசோதனை மேற்கொள்ளுதல், இது செரிமான குழாயில் இரத்தப்போக்கு இருப்பதை அடையாளம் காண உதவுகிறது.
- இரத்தத்தில் பயோமார்க்கர்கள் (ஆன்டிபாடிகள்) இருப்பது.
- இமேஜிங் சோதனைகள்:
- நிலையான மற்றும் மாறுபாடு கொண்ட எக்ஸ்-கதிர்கள்.
- வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி (சி.டி) ஸ்கேன்.
- லுகோசைட் சிண்டிகிராபி.
- எண்டோஸ்கோபி.
- காந்த அதிர்வு அலை வரைவு (எம்.ஆர்.ஐ).
சிகிச்சை முறைகள் முக்கியமாக மருந்துகளின் பயன்பாடு, உணவு முறையின் மாற்றம் மற்றும் சில நேரங்களில் பாதிக்கப்பட்ட பகுதியை அகற்றுவதற்கு செய்யும் அறுவை சிகிச்சை ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
- நோயெதிர்ப்பு அமைப்பை கட்டுப்படுத்துதல் மற்றும் அழற்சிகளை குறைத்தல் ஆகியவைக்கான மருந்துகளே பொதுவாக பரிந்துரைக்கப்படுகின்றன. அழற்சி எதிர்ப்பு மருந்துகளுடன் ஒரு இம்முனோமாடுலேட்டர்களையும் பயன்படுத்தலாம்.
- இந்த நிலையில் பசியின்மை இருப்பதால், உணவு முறை மாற்றங்கள் மூலம் ஒரு சீரான உணவு பழக்கத்தை பின்பற்றலாம். மசாலா, எண்ணெய் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவு பொருட்களுக்குப் பதிலாக பத்தியமான அதாவது காரமில்லாத உணவுகளை உட்கொள்வது அழற்சியை குறைக்க உதவும்.
- இந்நோய்க்கு மேற்கொள்ளும் அறுவை சிகிச்சையானது மருந்தில்லாத சிகிச்சைக்கான தேர்வாக கருதப்படுகிறது. கிட்டத்தட்ட 70% சதவிகித நோயாளிகளுக்கு இறுதியில் அறுவைச் சிகிச்சை தேவைப்படலாம்.
சுய பாதுகாப்பு மற்றும் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள்:
- நீங்கள் எடுத்துக் கொண்ட அனைத்து பரிந்துரைக்கப்பட்ட மற்றும் ஓவர்-தி-கவுண்டர் (OTC) மருந்துகளின் பட்டியலை உருவாக்கவும். உங்களுக்கும் உங்கள் மருத்துவருக்கும் உங்கள் நிலைமை பற்றி மேலும் தெரிந்துகொள்ளவும், உங்களுக்கென பிரத்யேகமான சிகிச்சைத் திட்டத்தை ஏற்படுத்துவதற்கும் இது உதவியாக இருக்கும்.
- ஸ்டெராய்டு அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகளை தவிர்த்தல் நன்று, ஏனெனில் இது உங்கள் நிலைமையை மோசமாக்கூடியது. நீங்கள் அதை எடுத்துக்கொள்ள வேண்டுமெனில், முதலில் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை செய்து பிறகு செயல்படுத்துங்கள்.
- கார உணவுகளை தினசரி உட்கொள்வதை தவிர்த்தல் அவசியம், இது உங்கள் அசௌகரியத்தை அதிகரிக்கலாம்.
- உங்கள் அறிகுறிகளைக் கண்காணிப்பதோடு, அதை குறித்து வையுங்கள்.
- ஒழுங்கான சிகிச்சை பின்தொடர்தலுக்கு செல்தல்.