ஆழமான நரம்பு இரத்த உறைவு (டிவிடி) என்றால் என்ன?
ஆழமான நரம்பு இரத்த உறைவு (டிவிடி) என்ற நிலையானது ஆழமான நரம்புகளுள் ஒன்றில் உருவாகும் இரத்த உறைவே, பொதுவாக கால்களிலேயே இந்நிலை ஏற்படும். இது யாரை வேண்டுமானாலும் பாதிக்கலாம், பொதுவாக 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கே பாதிப்பை ஏற்படுத்தும். இந்தியாவில் நிகழும் இந்த நோய்கான விகிதம் 8%லிருந்து -20%வரை ஆகும்.
இதன் முக்கிய அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
இதன் முக்கிய அறிகுறியானது கால்களில் ஏற்படும் வீக்கமே. மிக அரிதாக, இரண்டு கால்களிலும் வீக்கம் காணப்படும்.
மற்ற அறிகுறிகள் பின்வருமாறு:
- கால்களில் வலி ஏற்படுதல்.
- கால்கள் சிவப்பு நிறமாக மாறுதல்.
- கால்களில் வெதுவெதுப்பான உணர்வு.
இத்தகைய அறிகுறிகளை கவனிக்கத்தவறினால், இரத்த உறைவு இடம்பெயர்ந்து, இரத்த ஓட்டம் வழியாக பயணித்து நுரையீரலுக்குள் சென்று இரத்த ஓட்டத்தில் அடைப்பினை ஏற்படுத்தி பல்மனரி எம்போலிசத்திற்கு வழிவகுக்கிறது.
பல்மனரி எம்போலிசத்திற்கான அறிகுறிகள் பின்வருமாறு:
- திடீரென சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுதல்.
- ஆழ்ந்த சுவாசம் மற்றும் இருமலின் போது மேலும் மோசமடையும். மார்பு வலி.
- தலைசுற்றல் .
- வேகமான இதய துடிப்பு.
- இருமும் போது இரத்தம் வெளிப்படுதல்.
அதன் முக்கிய காரணங்கள் என்ன?
இரத்த ஓட்டத்தை தடைசெய்யக்கூடிய அனைத்துமே ஆழமான நரம்பு இரத்த உறைவு (டிவிடி) ஏற்படுவதற்கு காரணமாகிறது. இத முக்கிய காரணிகள் பின்வருமாறு:
- நரம்பில் ஏற்படும் காயம்.
- அறுவை சிகிச்சை.
- புற்று நோய், இதய நோய் அல்லது கடுமையான தொற்று நோய் போன்ற முக்கிய நோய்கள்.
- சில மருந்துகளின் பக்கவிளைவினால் ஏற்படலாம்.
- நீண்டகாலமாக செயலற்று இருத்தல்.
ஆழமான நரம்பு இரத்த உறைவு (டிவிடி) நோய் வாய்ப்புகளை அதிகரிக்கக்கூடிய ஆபத்து காரணிகள்:
- பரம்பரையாக வரும் இரத்த உறைவு நோய்.
- கர்ப்ப காலத்தில் ஏற்படுவது.
- குழந்தை பிறப்பைக் கட்டுப்படுத்த பயன்படுத்தும் மாத்திரைகள்.
- உடல் பருமன்.
- புகைபிடித்தல்.
- இருதயம் செயலிழப்பு.
- குடல் அழற்சி நோய்.
இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?
நோய் கண்டறிதல் முக்கியமாக நோயாளியின் மருத்துவ வரலாறு மற்றும் பாதிக்கப்பட்ட மூட்டின் உடலியல் பரிசோதனையையே சார்ந்திருக்கிறது. மருந்துகளின் வரலாறும் பெற்றுக்கொள்ளப்படுகிறது. இந்நோயை கண்டறிவதற்கான மற்ற நடவடிக்கைகள்:
- டி - டைமர் பரிசோதனை.
- அல்ட்ராசவுண்ட் பரிசோதனை.
- வெனோக்ராபி.
- சிடி ஸ்கேன் அல்லது காந்த அதிர்வு விம்பங்கள் (எம்.ஆர்.ஐ) ஸ்கேன்.
- நுரையீரல் ஆஞ்சியோகிராஃபி.
ஆழமான நரம்பு இரத்த உறைவு (டிவிடி) நோய்க்கான அடிப்படை காரணங்களை கண்டறிய உதவும் பரிசோதனைகள்:
- இரத்த பரிசோதனைகள்.
- மார்பில் எடுக்கப்படும் எக்ஸ்-கதிர்கள் (எக்ஸ் - ரே) சோதனை.
- எலக்ட்ரோகார்டியோகிராஃபி.
வலி மற்றும் வீக்கம் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் நிவாரணமே ஆழமான நரம்பு இரத்த உறைவு (டிவிடி) நோய்க்கான சிகிச்சையின் இலக்கு. மருந்துகள், குறிப்பாக இரத்ததை மெலிதாக்கும் காரணிகளை (இரத்த தின்னர்கள்) பரிந்துரைப்பார்கள்.
தடுப்பு நடவடிக்கைகள் பின்வருமாறு:
- நீங்கள் படுக்கையிலேயே ஓய்வு எடுப்பவராகயிருந்தால், விரைவில் எழுந்து நடமார முயர்ச்சி செய்யுங்கள். எவ்வளவு விரைவில் நீங்கள் இவ்வாறு செய்கிறீர்களோ, அவ்வளவு தூரம் டிவிடி நோய் தாக்கத்துக்கான வாய்ப்பு குறையும்.
- நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டிருக்கும் போது கால்கள் விறைத்து போவதைத் தடுக்க கால் தசைகளுக்கான உடற்பயிற்சியை செய்ய வேண்டும்.
- இரத்த உறைதலை தவிர்க்க அழுத்தம் கொடுக்கக்கூடிய காலுறைகளை உபயோகித்தல் அவசியம்.
- இயக்கம் மற்றும் இரத்த ஓட்டதுக்கான கட்டுப்பாடுகளை தவிர்க்க தளர்ந்த ஆடைகளை தேர்ந்தெடுக்கவும்.
- சுறுசுறுப்பான வாழ்கை முறைக்கு வழிவகுக்கவும்.
- இரத்தத்தை மெலிவுற செய்யும் மருந்துகளை(இரத்த தின்னர்ஸ்) பயன்படுத்தும்போது ஏதேனும் இரத்தக்கசிவு இருக்கிறதா என்பதை கண்காணித்துக்கொண்டே இருக்க வேண்டும்.