எம்பிஸிமா - Emphysema in Tamil

Dr. Nabi Darya Vali (AIIMS)MBBS

December 01, 2018

March 06, 2020

எம்பிஸிமா
எம்பிஸிமா

எம்பிஸிமா என்றால் என்ன?

எம்பிஸிமா என்பது நுரையீரல் திசுவின் பாதிப்பை உள்ளடக்கிய நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயின் ஒரு வகையாகும். எம்பிஸிமா மூச்சு விடுவதில் சிரமங்களை ஏற்படுத்துகிறது மற்றும் ஒரு நபரை சௌகரியமாக தனது தினசரி நடவடிக்கைகள் மற்றும் விளையாட்டுகளில் ஈடுபடவிடாமல் தடுக்கிறது. நாட்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் தொடர்ச்சியான இருமல் போன்ற சுவாச நிலைமைகளும் இதனுடன் சேர்ந்து ஏற்படக்கூடும். எம்பிஸிமாவினால் நுரையீரலில் இருக்கும் அல்வியோலி (காற்றுப்பைகள்) சேதப்படுத்தப்படுகிறது.

இதன் முக்கிய அறிகுறிகள் என்ன?

எம்பிஸிமாவின் முக்கிய அறிகுறிகள் இவையாகும்:

  • மூச்சுத்திணறல்.
  • சுவாசமின்மை.
  • தொடர்ச்சியான இருமல்.
  • சோர்வு.
  • மார்பின் வடிவத்தில் மாற்றங்கள் (மார்பின் உயரத்தில் மாற்றங்கள்).
  • ஆக்சிஜன் குறைபாட்டால் சருமம் நீல நிற சாயத்துடன் தோன்றுவது.

இதன் முக்கிய காரணங்கள் என்ன?

எம்பிஸிமா ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் இவையாகும்:

  • காற்றில் பரவும் எரிச்சலூட்டிகளுக்கு தொடர்ச்சியாக வெளிப்படுத்தப்படுவது.
  • புகைபிடித்தல்.
  • தீவிரமான காற்று மாசுபாட்டிற்கு வெளிப்படுத்தப்படுவது.
  • அரிதான நேரங்களில் எம்பிஸிமா மரபுவழியாகவும் ஏற்படலாம்.

புகைபிடித்தல் எம்பிஸிமாவின் முக்கிய அபாய காரணியாக கருதப்படுகிறது. மந்தமான புகைக்கு வெளிப்படுத்தப்படுவதும் ஒருவரின் அபாயத்தை அதிகரிக்கலாம். சுரங்க தொழிற்துறையில் வேலை செய்யும் நபர்களுக்கு எம்பிஸிமா ஒரு தொழில்சார் ஆபத்தாகவும் இருக்கக்கூடும்.

இது எவ்வாறு கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?

எம்பிஸிமாவை கண்டறிதல் நுரையீரல் செயல்பாட்டு சோதனைகளை உள்ளடக்கியது. இந்த சோதனைகள் சுவாசத்தின் விகிதம் மற்றும் அந்த நபர் உட்கொள்ளப்போகும் ஆக்சிஜனின் அளவை தீர்மானிப்பதில் உதவுகிறது. மற்ற கண்டறிதல் சோதனைகள் எக்ஸ்ரேக்கள் மற்றும் சி.டி ஸ்கேன்களை உள்ளடக்கியதாகும்.

எம்பிஸிமாவுக்கான சிகிச்சை எதுவும் இதுவரை இல்லை மற்றும் இந்த நோய் அறிகுறிகளைப் பொறுத்தே நிர்வகிக்கப்படுகிறது.

மருத்துவர் நுரையீரலிலுள்ள வீக்கங்களை குறைப்பதற்காக அழற்சி நீக்கி மருந்துகளை அளிக்கலாம்.

மார்பில் தொற்று ஏற்பட்டிருக்கும் பட்சத்தில் ஆண்டிபையோட்டிக்ஸ்கள் வழங்கப்படலாம்.

நிலைமை மிகத் தீவிரமாக இருந்தால் ஆக்சிஜன் சிகிச்சையும் அளிக்கப்படலாம்.

இந்த நோய் மோசமடைந்து மேலும் தீவிரமாவதை தடுப்பதற்காக தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த நடவடிக்கைகள் கீழ்க்காண்பவற்றை உள்ளடிக்கியது:

  • புகைபிடித்தலை அறவே நிறுத்துவது.
  • காற்று மாசுபாடுகளுக்கு வெளிப்படுவதை தவிர்ப்பது.
  • சுவாசப் பாதுகாப்பு முகமூடிகளை பயன்படுத்துவது.
  • முறையாக உடற்பயிற்சிகளை செய்வது.
  • மார்பு தொற்றுகளிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக தடுப்பூசிகளை எடுத்துக்கொள்வது.



மேற்கோள்கள்

  1. American Lung Association. Emphysema. [Internet]
  2. Better health channel. Department of Health and Human Services [internet]. State government of Victoria; Emphysema
  3. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Emphysema
  4. National Health Portal [Internet] India; Chronic obstructive pulmonary disease (COPD)
  5. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Chronic Obstructive Pulmonary Disease (COPD)

எம்பிஸிமா க்கான மருந்துகள்

Medicines listed below are available for எம்பிஸிமா. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.