எண்டோமெட்ரியல் ஹைப்பர் பிளேசியா என்றால் என்ன?
கருப்பை மெல்லுறை (பெரிமெட்ரியம்), கருப்பத் திசுச்சுவர் (மையோமெட்ரியம்), கருப்பையின் உள்ளுறை (எண்டோமெட்ரியம்) ஆகிய மூன்று அடுக்குகளை கருப்பை கொண்டுள்ளது. கருப்பையின் உள்ளுறை (எண்டோமெட்ரியம்) என்பது சிறு புறத்தோல் உயிரணுக்களால் ஆன கருப்பையின் உட்சவ்வாகும். இது கருப்பையங்களால் வெளியிடப்படும் ஹார்மோன்களின் செயல்பாட்டின் கீழ் வளரும். எண்டோமெட்ரியம் தான் வளர்ந்து, மாதவிடாய் காலத்தில் சுரப்பிகளுடன் கருப்பையை விட்டு விடுகிறது. இதனால் இரத்தப் போக்கு உண்டாகிறது. ஈஸ்ட்ரோஜன் அளவுகளில் ஏற்படும் சில மாற்றங்கள் காரணமாக, இந்த எண்டோமெட்ரியம் தடிமனாக இருக்கும், இந்த நிலையே எண்டோமெட்ரியல் ஹைப்பர் பிளேசியா என்று அழைக்கப்படுகிறது. இது புற்றுநோய் அல்ல, ஆனால் சில நேரங்களில், இது இறுதியில் புற்றுநோயாக மாறக்கூடும்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
எண்டோமெட்ரியல் ஹைப்பர் பிளேசியாவின் அறிகுறிகள் கருப்பைக்கு மட்டுமே உட்பட்டது அல்ல; இது பொதுவான அறிகுறிகளையும் உருவாக்கலாம், அவை பின்வருமாறு:
- அசாதாரண மாதவிடாய் இரத்தப்போக்கு (கடுமையான இரத்தப்போக்கு அல்லது அடிக்கடி மாதவிடாய் ஏற்படுதல்).
- மாதவிடாய்க்கு இடையில் இரத்தப்போக்கு.
- மாதவிடாய் நிறுத்தத்திற்கு பின்பும் யோனியில் இரத்தப்போக்கு.
- அதிக இரத்த இழப்பு காரணமாக இரத்த சோகை ஏற்படுதல்.
- பலவீனம்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
எண்டோமெட்ரியம் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் அளவுகளுக்கு உணர்ச்சிமிக்கதாக உள்ளது. வழக்கமாக, ஈஸ்ட்ரோஜென் தான் எண்டோமெட்ரியம் தடிமனாக வளரத் தூண்டுகிறது. ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகமாக இருந்து, அதனை ஒப்பிடுகையில் புரோஜெஸ்ட்டிரோன் அளவுகள் குறைவாக இருக்கும் போது, அது எண்டோமெட்ரியல் ஹைப்பர் பிளேசியாவிற்கு வழிவகுக்கிறது. இது பொதுவாக பெண்களில் பின்வரும் காரணங்களால் ஏற்படுகிறது.
- உடல்பருமன்.
- நீண்ட கால ஹார்மோன் மாற்று சிகிச்சை (ஹெச்.ஆர்.டி).
- மலட்டுத்தன்மை.
- சினைப்பை நீர்க்கட்டி (பி.சி.ஓ.டி).
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
மருத்துவ பரிசோதனை மற்றும் மருத்துவ அறிக்கையை கொண்டு எண்டோமெட்ரியல் ஹைப்பர் பிளேசியா கண்டறியப்படுகிறது. கீழே குறிப்பிட்டுள்ள சில ஆய்வுகள் நோயறிதலை உறுதிப்படுத்தி புற்றுநோய் இல்லை என்று அறியவும் மேற்கொள்ளப்படுகின்றன:
- இடுப்பு அல்ட்ராசவுண்ட் - எண்டோமெட்ரியத்தின் தடிமன் அளவை வெளிப்படுத்தவும் மற்றும் காரணத்தை கண்டறிவதற்கும்.
- ட்ரான்ஸ்வெஜைனல் அல்ட்ராசவுண்ட் - எண்டோமெட்ரியத்தின் மாற்றங்களை இன்னும் துல்லியமாக மதிப்பிடுவதற்கு.
- கருப்பை உள்நோக்கியல் - ஒரு உள்நோக்கியியல் பயன்படுத்தி எண்டோமெட்ரியத்தைப் பார்க்க.
- எண்டோமெட்ரியல் திசுப் பரிசோதனை - சிறு திசு மாதிரிகள் எடுக்கப்பட்டு நுண்ணோக்கி மூலம் மதிப்பீடு செய்யப்படுவதன் மூலம் நோயறிதலை உறுதிப்படுத்துதல் மற்றும் எண்டோமெட்ரியல் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க.
புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகளைத் தவிர்ப்பதற்கு, வழக்கமான இடுப்பு அல்ட்ராசவுண்ட் ஒவ்வொரு 2-3 வருடங்களுக்கு மேற்கொள்ளப்படுகிறது.
எண்டோமெட்ரியல் ஹைப்பர் பிளேசியாவிற்கான சிகிச்சை முறைகள் பின்வருமாறு:
- கவனிப்பு - இது மிகவும் பொதுவாக பயன்படுத்தப்படும் நுட்பமாகும். ஏனென்றால் மாதவிடாய் நிறுத்தத்திற்கு பிறகு, ஈஸ்ட்ரோஜன் இல்லாத நிலையில், ஹைப்பர் பிளேசியா குறைபாடுகள் அல்லது அறிகுறிகள் குறையும்.
- மருத்துவ நிர்வகிப்பு - குறிப்பிடதக்க அறிகுறிகள் அல்லது மாதவிடாய் நிறுத்தத்திற்கு பிறகும் யோனியில் இரத்தப்போக்கு போன்ற அறிகுறிகள் உள்ள பெண்களுக்கு வாய் வழியாக புரோஜெஸ்ட்டிரோன் மாத்திரைகள் பயன்படுத்துதல்.
- அறுவை சிகிச்சை - மருத்துவ சிகிச்சை அளித்தும் சில நோயளிக்களுக்கு தொடர்ந்து காணப்படும் அறிகுறிகளால் எண்டோமெட்ரியல் அகற்றுதல் என்னும் நடைமுறை மூலம் எண்டோமெட்ரியம் நீக்கப்படுகிறது. நோய் தீவிரமடைந்த நிலையில், கருப்பை முழுமையாக அகற்றப்படுகிறது.