பொருத்தமற்ற ஆன்டிடையூரிடிக் ஹார்மோன் சுரப்பு என்றால் என்ன (எஸ்.ஐ.ஏ.டி.ஹெச்)?
ஆன்டிடையூரிடிக் ஹார்மோன் (ஏ.டி.ஹெச்) என்பது ஹைபோதலாமஸினால் (மூளையின் பகுதி) உற்பத்தி செய்யப்பட்டு பிட்யூட்டரி சுரப்பியின் மூலம் (மூளையின் அடிப்பகுதியில் அமைந்துள்ளது) வெளியிடப்படுகிறது. சிறுநீர் வழியாக சிறுநீரகம் வெளியேற்றும் நீர் அளவினை கட்டுப்படுத்துவதற்கு ஏ.டி.ஹெச் உதவுகிறது. பொருத்தமற்ற ஆன்டிடையூரிடிக் ஹார்மோன் சுரப்பு (எஸ்.ஐ.ஏ.டி.ஹெச்) என்பது ஒரு நோய்க்குறியீடு ஆகும், இதனால் உடல் உயர்ந்தளவிலான ஆன்டிடையூரிடிக் ஹார்மோனை(ஏ.டி.ஹெச்) சுரக்கின்றது. இந்த கோளாறு உடலில் அதிக நீர் தேங்கியிருக்க வழிவகுக்கிறது.
அதன் முக்கிய அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
எஸ்.ஐ.ஏ.டி.ஹெச்சின் பொதுவான அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:
- தலைவலி.
- குமட்டல்.
- வாந்தி.
- மனநிலை மாற்றங்களுள் அடங்குபவை:
- குழப்பம்.
- நினைவாற்றலில் ஏற்படும் பிரச்சனை (மேலும் வாசிக்க: நினைவு இழப்புக்கான சிகிச்சை).
- சமநிலை தொடர்பான சிக்கல்கள் கீழே விழுவதற்கு வழிவகுக்கும்.
- கடுமையான சந்தர்ப்பங்களில், இது வலிப்பு அல்லது கோமாவினை ஏற்படுத்துகின்றது.
அதன் முக்கிய காரணங்கள் என்ன?
உடலில் ஏ.டி.ஹெச் அளவுகளை அதிகரிக்கும் காரணிகள் எஸ்.ஐ.ஏ.டி.ஹெச்க்கு வழிவகுக்கும், அத்தகைய காரணிகள் பின்வருமாறு:
- மருந்துகள் உட்கொள்தல், மருந்துகளுள் அடங்குபவை:
- ஹார்மோனல் மருந்துகள் (வெசொப்ரேசின் அல்லது ஏ.டி.ஹெச்).
- வகை 2 நீரிழிவு.
- வலிப்பு.
- மனஅழுத்தம் தடுப்பிகள்.
- இரத்த அழுத்தம் அல்லது இதய நோய் சார்ந்த மருந்துகள்.
- புற்றுநோய்.
- மயக்க மருந்து அல்லது பொது மயக்கமருந்து பயன்படுத்தப்படும் அறுவை சிகிச்சை.
- மூளை கோளாறுகள், இதில் அடங்குபவை பின்வருமாறு :
- நுரையீரல் நோய், இதில் அடங்குபவை பின்வருமாறு:
- மனநல சீர்குலைவுகள்.
- ஹைபோதாலமஸ் அல்லது பிட்யூட்டரி சிதைவு.
- பின்வரும் உறுப்புகள் / உடல் அமைப்புகளில் ஏற்படும் புற்றுநோய்கள்:
- லுகேமியா (இரத்த புற்றுநோய்).
- கணையம்.
- சிறு குடல்.
- மூளை.
இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?
மருத்துவர் அறிகுறிகளின் காரணத்தைக் கண்டறிய, நோயாளிக்கு முழு உடலியல் பரிசோதனை மேற்கொள்வார், அதை தொடர்ந்து சில பரிசோதனைகளும் அடங்கும் அவை பின்வருமாறு:
- இரத்தம் மற்றும் சிறுநீரில் சோடியம் அளவினை சோதிக்கக்கூடிய பரிசோதனைகள்.
- இரத்தம் மற்றும் சிறுநீரில் அஸ்மோலலிட்டியினை மதிப்பீடு செய்வதற்கான பரிசோதனைகள்.
- விரிவான வளர்சிதை மாற்ற குழு (சிறுநீரக மற்றும் கல்லீரல் செயல்பாடு, அமிலம்/காரம் சமநிலை, எலெக்ட்ரோலைட் மற்றும் இரத்த சர்க்கரை ஆகியவைகளை மதிப்பீடு செய்வதற்கான சோதனை)
எஸ்.ஐ.ஏ.டி யின் காரணத்தை பொறுத்தே சிகிச்சை அளிக்கப்படுகிறது அவை பின்வருமாறு:
- திரவம் உட்கொள்தளை தடுத்தல். நீங்கள் எடுத்துக் கொள்ளக் கூடிய திரவ அளவு மருத்துவரால் தீர்மானிக்கப்படும்.
- சிறுநீரகங்களில் ஏற்படும் ஏ.டி.ஹெச்சின் விளைவுகளை தடுக்க வாய்வழி அல்லது நரம்பு வழியாக உபயோகப்படுத்தும் மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம் இது சிறுநீரகத்தை அதிகப்படியான நீரினை வெளியேற்ற ஊக்குவிக்கிறது.
- நோய் அறிகுறிகளின் மூல காரணத்திற்கு அளிக்கப்படும் சிகிச்சைமுறை பின்வருமாறு:
- கட்டி காரணமாகயிருந்தால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும்.
- மருந்துகளின் அளவுகளை மாற்றுதல் அல்லது ஏ.டி.ஹெச்சின் அசாதாரண உற்பத்திக்கு காரணமாக இருக்கும் மருந்துகளை மாற்றுதல்.