கழிப்பறைப்படை (ஜாக் இட்ச்) என்றால் என்ன?
கழிப்பறைப்படை என்பது வயிறு தொடை சேருமிடத்திலுள்ள சருமத்தின் பூஞ்சை நோய்த்தொற்று ஆகும். இதனை படர்தாமரை என்றும் அல்லது மருத்துவ ரீதியாக கவட்டைப்படை (டினியா க்ரூரிஸ்) என்றும் அழைக்கப்படும். இது மிகவும் பொதுவான தோல்நோய்த் தொற்று ஆகும், மேலும் இது வயிறு தொடை சேரும் பகுதியை மேலோட்டமாக பாதிக்கிறது. இது ஒரு உயிருக்கு ஆபத்தான நிலை கிடையாது ஆனால் குறிப்பிடத்தக்க அசௌகரியமும் சமூக சங்கடமும் ஏற்படலாம்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
கழிப்பறைப்படை இடுப்பு,தொடை இடுக்கு பகுதியை முழுவதுமாக பாதிக்கிறது. இருப்பினும், அது உட்புற தொடைகள், பிட்டம் மற்றும் சில சமயங்களில் அடிவயிற்றுக்கு பரவக்கூடும். பிறப்புறுப்புகள் பொதுவாக பாதிக்கப்படுவதில்லை. விளையாட்டு வீரர்கள் அல்லது பருமனான மக்களில் இது அடிக்கடி காணப்படுகிறது. பின்வரும் அடையாளங்கள் மற்றும் அறிகுறிகளும் கழிப்பறைப்படை இருப்பதைக் குறிக்கலாம்:
- பாதிக்கப்பட்ட சருமத்தின் நிற மாற்றம், பொதுவாக, பாதிக்கப்பட்ட பகுதி சிவந்து காணப்படும்.
- சொறி போன்ற தோற்றம், இது வட்ட வடிவில் இருக்கும். (மேலும் வாசிக்க: தோல் தடிப்பிற்கான சிகிச்சை).
- காயத்தின் எல்லைகள் கடுமையாக வரையறுக்கப்படுகின்றன.
- பாதிக்கப்பட்ட பகுதியின் பொதுமைய வட்டங்களுக்குள் சாதாரண தோற்றமளிக்கும் தோல் இருக்கலாம்.
- காயம் புடைத்திருப்பது போலத் தோன்றும்.
- காயங்களுடன் கொப்புளங்கள் தோன்றக்கூடும்.
- அரிப்பு மற்றும் அசௌகரியம் பொதுவாக காணப்படுகின்றன.
- உடற்பயிற்சி செய்யும்போது அறிகுறிகள் மோசமாகின்றன.
இது மீண்டும் மீண்டும் ஏற்படக்கூடிய நோய்த் தொற்றாகும் மற்றும் கடந்த காலத்தில் கழிப்பறைப்படையால் (ஜாக் அரிப்பு) பாதிக்கப்பட்டிருந்தால், அவை எதிர்காலத்தில் கண்டிப்பாக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். மேலும், சில நேரங்களில், இடுப்பு பகுதி நோய்த்தொற்று, கால் நோய்த்தொற்றுடன் இணைந்து காணப்படுகிறது.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
இது ஒரு பரவக்கூடிய பூஞ்சை நோய்த்தொற்று ஆகும். ஈரப்பதம் மற்றும் சூடான தோல் மேற்பரப்பில் பூஞ்சை வளரும். இதனால், இறுக்கமான அல்லது ஈரமான (வியர்வை படிந்துள்ள) உள்ளாடைகளை அணிவது இந்நோயின் ஆபத்து விளைவிக்கும் காரணியாகும். தொடும் தோல் மடிப்புகளை உடைய அதிக எடை கொண்டவர்கள் இந்த நோய்த்தொற்று ஏற்படுவதற்கான அதிக ஆபத்தில் இருப்பார்கள். பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய துண்டுகள், படுக்கைகள், முதலியவற்றைப் பயன்படுத்திவதன் மூலம் கழிப்பறைப்படை பரவலாம். இது தொற்றிக் கொள்ளும் தன்மை கொண்டதாக இருப்பதால், இது தொடுவதன் மூலம் உங்கள் உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவலாம். இந்த நிலை பெண்களை விட ஆண்களை மிகவும் பாதிக்கிறது.கழிப்பறைப்படை ஏற்படுத்தும் பூஞ்சை எபிடெர்மோபைட்டன் ஃப்லக்கோஸம் மற்றும் ட்ரைக்கோபைட்டன் ரூப்ரம் ஆகும்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
நோயாளியின் மருத்துவ பின்புலம் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதன் மூலம் நோயறியப்படுகிறது. இருப்பினும், பொட்டாசியம் ஹைட்ராக்சைடு (கேஓஹெச்) ஸ்லைடு தயாரித்து 4 - 6 வாரங்களில் என்ன வகையான பூஞ்சை என்று உறுதிப்படுத்தலாம்.டினியா க்ரூரிஸ் மிதமான நோய்த் தொற்று என்பதால், இதற்கு வழக்கமாக ஒரு நாளைக்கு 2-3 முறை மேற்பூச்சு பூஞ்சை காளான் எதிர்ப்பு மருந்துகள் தடவுவதன் மூலமாக சிகிச்சை அளிக்கலாம். இந்த தொற்று பொதுவாக 3-4 வாரங்களில் முழுமையாக தீர்க்கப்படும். இப்பகுதியை ஈரப்பதமின்றி பாதுகாக்கவும், நல்ல சுகாதார நடைமுறைகளை மேற்கொள்வதிழும் கவனமாக இருக்க வேண்டும்.