மெலனின் குறைபாடு என்றால் என்ன?
சருமத்தில் உள்ள மெலனோசைட்டுகள் என்று அழைக்கப்படும் சிறப்பு உயிரணுக்களின் மூலம் மெலனின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிறமி தான் உடலில் நிற குறைபாடு ஏற்பட காரணியாகிறது .உயிரணுக்களில் ஏற்படும் சேதத்தினால் மெலனின் உற்பத்தி தடைப்படுகிறது. சில குறைபாடுகள் உடலின் சில பாகங்களை மட்டுமே பாதிக்கிறது. ஆனால், மற்றவைகள் உடலின் அனைத்து பாகங்களையும் பாதிக்கிறது. மெலனின் அதிகம் இருந்தால் தோலின் நிறம் கருப்பாகவும், குறைவாக இருந்தால் வெளுப்பாகவும் காணப்படுகிறது. குறிப்பிட்ட அளவிற்கு மேல் மெலனின் அளவு குறையும் போது, அது வெண்புள்ளி (விட்டிலிகோ) நோய் ஏற்பட வழிவகுக்கிறது. இதனால் தோலின் பல பகுதிகளில் வெள்ளை திட்டுகள் தோன்றுதல், சருமத்தின் நிறத்தை மாற்றும் அல்பினிசம் (வெண் தோல்) மற்றும் இது போன்ற பிற நிலைமைகள் ஏற்படுகிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
மெலனின் குறைபாடு பின்வரும் தாக்கங்கள் மற்றும் அறிகுறிகளை வெளிப்படுத்தும் பல்வேறு நோய்களின் வடிவத்தில் தோன்றுகிறது. அவை பின்வருமாறு:
- மிக இள வயதில் முடி, தாடி, மீசை, புருவம் மற்றும் கண்இமைகள் சாம்பல் நிறமாக காணப்படுதல்.
- வாய்க்கு உட்புறத்தில் உள்ள தோலின் நிறம் இழப்பு.
- தோல் நிறமிழப்பு.
- ஒன்று அல்லது அதற்கு மேட்பட்ட பகுதிகளில் தோல் நிறமிழப்பு.
- உடலின் ஒரு பக்கத்தை மட்டும் பாதிக்கும் தோல் நிறமிழப்பு.
- முழு உடலையும் பாதிக்கும் தோல் நிறமிழப்பு
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
மெலனோனின் குறைபாடு என்பது மெலனோசைட்களை பாதிக்கும் சில அடிப்படை தோல் நோயின் காரணமாக இருக்கலாம். இதனால் மெலனின் உற்பத்தி பாதிப்படைகிறது. பின்வருவன மெலனின் குறைபாடு ஏற்பட வழிவகுக்கலாம்:
- முழு அல்லது பகுதி அளவிலான மெலனின் இழப்பை ஏற்படுத்தும் பரம்பரை குறைபாடுகள், எ.கா: அல்பினிசம்.
- தன்னுடல் தாக்கு நோயின் காரணமாக உடலின் சில அல்லது அனைத்து பகுதிகளிலும் ஏற்படும் மெலனோசைட்களின் இழப்பு, எ.கா: விட்டிலிகோ.
- சருமத்தில் ஏற்படும் அல்சர், தீப்புண், கொப்புளங்கள் மற்றும் நோய்த்தொற்று போன்றவை சரும உயிரணுக்களில் நிரந்தர சேதம் ஏற்பட வழிவகுக்கிறது. சேதமடைந்த தோலில் மெலனின் குறைபாடு ஏற்படுகிறது.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
நோயறிதல் பின்வருவனவற்றை அடிப்படையாகக் கொண்டது:
- நோயாளியின் மருத்துவ அறிக்கை.
- வெள்ளைத் திட்டுக்களை சோதனை செய்ய உடல் பரிசோதனை.
- நீரிழிவு நோய் அல்லது தைராய்டு பிரச்சினைகள் இருப்பதை அடையாளம் காண இரத்த பரிசோதனைகள்.
- பாதிக்கப்பட்ட சருமத்தின் திசு பரிசோதனை.
இந்நோய்க்கான சிகிச்சையானது மெலனின் குறைபாடு காரணத்தின் அடிப்படையில் அளிக்கப்படுகிறது. மருத்துவர் பின்வரும் சிகிச்சை முறைகளை பரிந்துரைக்கலாம்:
- இயக்க ஊக்கி கிரீம்கள்
- குறுகிய-புற ஊதா பி சிகிச்சை.
- ஒளிவேதியியல் சிகிச்சை.
- சீரொளி (லேசர்) சிகிச்சை.
சில பயனுள்ள வீட்டு வைத்திய முறைகளாவன:
- சன்ஸ்க்ரீன்ஸ்.
- கண்சீலர் போன்ற ஒப்பனைப் பொருட்கள்.