மெனீயெரின் நோய் என்றால் என்ன?
மெனீயெரின் நோய் என்பது உள் காதில் மாற்றங்கள் ஏற்படும் போது தோன்றும் மூன்று அறிகுறிகள் ஆகும், இதனால் மனித உடலின் உள் காது கட்டுப்படுத்தக்கூடிய சமநிலைத்தன்மை மற்றும் கேட்கும் திறன் ஆகிய இரண்டின் செயல்பாடுகளிலும் இழப்பு ஏற்படுகிறது.
இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?
மெனீயெரின் நோயிக்கான பொதுவான அடையாளகள் மற்றும் அறிகுறிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:
- வெர்டிகோ அல்லது தலை சுற்றும் உணர்ச்சி.
- காதுகளில் உண்டாகும் கூர்மையான ஒலி அல்லது உறுமல் சத்தம் டின்னிடஸ் என்று அழைக்கப்படுகின்றது.
- திடீர் செவிப்புலன் இழப்பு.
- காதுகளில் அழுத்தம் ஏற்படுதல் போன்ற உணர்வு.
- குமட்டல்.
அதன் முக்கிய காரணங்கள் என்ன?
இந்நிலைக்கான சரியான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை; இருப்பினும், பல காரணிகளின் சேர்க்கை, மெனீயரின் நோய்க்கு வழிவகுக்கலாம்.
மெனீயரின் நோய்க்குரிய சில காரணங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:
- காதுகளிலுள்ள திரவங்களின் இரசாயன சமநிலையின்மை.
- காது திரவத்தின் திரள் அல்லது காது திரவத்தின் உருவாக்கம் சமநிலைத்தன்மை மற்றும் கேட்கும் திறன் ஆகியவற்றின் செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
- வெகு நேரம் இரைச்சலின் வெளிப்பாடு.
- மரபுவழியாகவும் ஏற்படக்கூடியது.
- கட்டுப்பாடுத்தாத அதிக உப்பு அளவினை கொண்ட உணவு பழக்கம்.
- ஒவ்வாமைகள்.
- தலை காயம்.
- வைரல் தொற்று.
இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?
இந்நிலையினால் ஓருவர் பாதிக்கப்பட்டிருக்கிறாரா என்பதைக் கண்டறிய கேட்கும் திறன் மற்றும் சமநிலை ஆகியவைக்கான சோதனைகள் தனித்தனியாக செய்யப்படுகின்றன.
கேட்கும் திறன் சோதனைகள் - ஒலிச்செறிவுமானி சோதனை அல்லது கேட்கும் திறன் சோதனை என்பது கேட்கும் திறன் இழப்பை கண்டறிவதற்கு செய்யப்படுகிறது. ஒருவருக்கு ஒரு காதிலோ அல்லது இரண்டு காதுகளிலுமே கேட்கும் திறனில் சிரமம் இருப்பதை கண்டறிய இச்சோதனை உதவுகிறது. கூடுதலாக, எலெக்ட்ரோகோகுளோபோகிராஃபி (இசிஓஜி) சோதனை உள் காதில் உள்ள மின்சார செயல்பாட்டை அளவிட செய்யப்படுகிறது. மூளைத்தண்டின் எதிர்வினைச் செயல் சோதனை, கேட்கும் திறனுக்கான நரம்புகள் மற்றும் மூளை மையப் பகுதியில் இருக்கும் கேட்கும் திறனுக்கான செயல்பாடுகளை கண்டறிய மேற்கொள்ளப்படுகிறது. இந்த சோதனைகள் கேட்கும் திறனுக்கான பிரச்சனை உள் காதுகளிலா அல்லது காது நரம்புகளிலா என்பதை தீர்மானிக்க உதவுகின்றன.
சமநிலைத்தன்மை சோதனைகள் - எலக்ட்ரான்சிஸ்டோகிராஃபி (இஎன்ஜி) சோதனை மெனீயெரின் நோய்க்காக செய்யப்படும் மிகவும் பொதுவான சமநிலைச் சோதனை ஆகும்.
மெனீயெரின் நோய்க்கென குறிப்பான சிகிச்சை எதுவும் இல்லை, ஆனால் சில மருந்துகள் வெர்டிகோ, குமட்டல் மற்றும் டின்னிடஸ் போன்றவைகளின் அறிகுறிகளை கட்டுப்படுத்த உதவுகின்றன. டையூரிடிக் எனும் மருந்து வெர்டிகோ போன்ற நிலைகளை கட்டுப்படுத்தவும் உடலில் திரண்டிருக்கும் அதிகப்படியான திரவத்தை குறைக்கவும் உதவுகிறது.மெனீயெரின் நோயின் தீவிரத்தை அடிப்படையாகக் கொண்டும் கேட்கும் திறனின் தேவைகளை கொண்டும் சிகிச்சையளிப்பதற்காக அறுவைசிகிச்சை மற்றும் காது கேட்கும் கருவி உபயோகப்படுத்துதல் போன்ற அறிவுரை வழங்கப்படும்.
மெனீயெரின் நோயின் தாக்குதல்களை தடுக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அறிவுறுத்தப்படுகின்றன:
- புகை பிடிக்காமலிருத்தல்.
- உப்பு கட்டுப்படுத்தப்பட்ட உணவு பழக்கம்.
- மது மற்றும் கஃபீனை தவிர்த்தல்.