வளர்சிதை மாற்ற நோய்க்குறி என்றால் என்ன?
மருத்துவ நிலைகள் மற்றும் அறிகுறிகளின் திரள் ஒன்றாக தோன்றுவதை வகைப்படுத்தும் ஒரு குறிப்பிட்ட நோய் அல்லது நிலையே நோய்க்குறி (சிண்ட்ரோம்) எனப்படுகிறது. வளர்சிதை மாற்ற நோய்க்குறி என்பது உயர் இரத்த அழுத்தம், உயர் ட்ரைகிளிசரைட் அளவுகள், நீரிழிவு மற்றும் உடல் பருமன் ஆகிய அனைத்தும் திரளாக தோன்றுவதன் விளைவால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற நோயினை ஏற்படுத்தக்கூடிய அதிக அபாயத்தைக் கொண்ட நிலையாகும்.
இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?
வளர்சிதை மாற்ற நோயின் அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் மிக குறிப்பாகவும், உறுதியாகவும் அறியப்படக்கூடியதில்லை. இந்த வளர்சிதை மாற்ற நோயினால் பாதிக்கப்பட்டவருக்கு ஏற்படக்கூடிய மிக முக்கியமான மற்றும் பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:
- நீண்ட காலமாக இருக்கும் அதிகரித்த இரத்த அழுத்தம்.
- ஒருவரின் இடுப்பின் சுற்றளவு அதிகரித்தல்.
- நீரிழிவு நோயின் அடையாளங்கள் மற்றும் இன்சுலின் எதிர்ப்பான்கள் போல் மீண்டும் மீண்டும் ஏற்படும் தொற்றுகள், அதிகரித்த தாகம் மற்றும் பசியார்வம், எடை அதிகரிப்பு, அதிகமாக சிறுநீர் கழித்தல், மற்றும் பல அறிகுறிகள் தோன்றலாம்
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
இந்த வளர்சிதை மாற்ற நோய்க்குறி ஏற்படுவதற்கான முக்கிய காரணம் உடல் பருமன் மற்றும் குறைந்த உடல் செயல்பாடுகளை கொண்டிருத்தல் ஆகும். இந்த வளர்சிதை மாற்ற நோய்க்குறி வழிவகுக்கக்கூடிய மற்ற காரணங்கள் பின்வருமாறு:
- உயர் இரத்த அழுத்தம்.
- பரம்பரையாக காணப்படும் இன்சுலின் எதிர்ப்பு மற்றும் இரண்டு விதமான நீரிழிவு நோய்களின் முக்கிய காரணிகள்.
- கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்பகாலத்தின் போது தோன்றக்கூடிய நீரிழிவு நோய் அல்லது உயர் இரத்த அழுத்தத்தினாலும், இந்த வளர்சிதை மாற்ற நோய்க்குறி தோன்றலாம்.
இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?
ஒருவருக்கு பின்வரும் அறிகுறிகள் காணப்பட்டால் வளர்சிதை மாற்ற நோய்க்குறிக்கான நோயறிதல் கருதப்படுகிறது:
- இரத்தத்தில் இருக்கும் அதிக அளவு கொலஸ்ட்ரால் - கொலஸ்ட்ரால் உள்ளடக்கங்களை கண்டறிய இரத்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
- ஹைப்பர்டென்ஷன் அல்லது உயர் இரத்த அழுத்தம் - இரத்த அழுத்த தொடர்ந்து 140/90மிமி ஹெச் ஜி ஆகவோ அல்லது அதிகமாகவோ இருப்பது, வளர்சிதை மாற்ற நோய்க்குறிக்கான அதிகரித்த அபாயத்தினை ஏற்படுத்துகின்றது.
- எடை பருமன் - இடுப்பின் சுற்றளவு அதிகரித்தல், அதாவது ஆண்களில் 94 செ.மீ அல்லது அதற்கு மேல் மற்றும் பெண்களில் 80 செ.மீ அல்லது அதற்கு மேல் காணப்படுதல் அசாதாரண வளர்சிதை மாற்றதிற்கான ஒரு அடையாளமாகும்.
- இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரித்தல்.
சில பழக்க வழக்கம் மற்றும் வாழ்க்கைமுறையில் ஒருங்கிணைந்த மாற்றங்களை கொண்டுவருவதன் மூலம் வளர்சிதை மாற்ற நோய்க்குறியை கட்டுப்படுத்த முடியும். அவைகளில் சில பின்வருமாறு:
- புகைபிடித்தல் - புகைபிடித்தல் இதயநாள நோய், பக்கவாதம், புற்றுநோய் மற்றும் உடலின் பிற நோய்களுக்கான ஆபத்தினை அதிகரிக்கிறது.
- உணவு பழக்கத்தில் கட்டுப்பாடு - அதிகமாக உணவருந்துதல் மற்றும் உடல்பருமனை தடுக்க உணவு முறையில் கட்டுப்பாடு வேண்டும்.
- அதிக நேரம் உடல் செயல்பாட்டில் ஈடுபடுதல் - சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஏற்றுக்கொள்தலின் மூலம் எடை பருமன், உயர் இரத்த அழுத்தம் மற்றும் பல வாழ்க்கை -அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய நோய்கள் ஆகியவற்றை தடுப்பதற்கு அவசியமானதாகும். நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், உயர் ட்ரைகிளிசரைட் அதே போல இன்சுலின் எதிர்ப்பான் போன்றவைகளை கட்டுப்படுத்த உடல் எடை குறைப்பது அவசியமாகும்.
இந்நிலைக்கான சிகிச்சை முறை பாதுகாப்புக்காக எடுக்கப்படும் நடவடிகைகளை ஒத்ததாக இருக்கின்றது. கூடுதலாக, நீண்ட-கால வளர்சிதை மாற்ற நோய்குறியின் ஒட்டுமொத்த அதிகரிப்பின் விளைவினால் ஏற்படும் எந்த நிலையையும் கையாள சில மருந்துகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இரத்தத்தில் அதிகரிக்கும் சர்க்கரையின் அளவுகளை கட்டுப்படுத்த இன்சுலின் ஷாட்ஸ் பரிந்துரைக்கப்படுகின்றன. இரத்த அழுத்ததை குறைக்க இரத்த அழுத்ததை குறைப்பதற்கான மருந்துகள் பரிந்துரைக்கப்படும்.