மல்டிபிள் மைலோமா என்றால் என்ன?
மல்டிபிள் மைலோமா உடலின் பிளாஸ்மா (குருதிநீர்) அணுக்களில் ஏற்படும் ஒரு வகை புற்றுநோய் ஆகும். இந்த அணுக்கள் பொதுவாக எலும்பு மஜ்ஜையில் காணப்படும் மற்றும் இவை நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஒரு பகுதியாக உருவாகிறது. எலும்பு மஜ்ஜையில் பிளாஸ்மா அணுக்களின் குவிதல் காரணமாக மல்டிபிள் மைலோமா ஏற்படுகிறது மற்றும் இவை இரத்த அணுக்களின் உற்பத்தியை பாதிக்கிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
மல்டிபிள் மைலோமாவின் பிந்தைய காலத்தில், அதன் தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் காணப்படுகின்றன. அவற்றில் சில பின்வருமாறு:
- தொடர்ந்து ஏற்படும் எலும்பு வலி.
- எலும்புகள் பலவீனமடைவதால், சிறிய தாக்கம் ஏற்பட்டால் கூட அடிக்கடி எலும்பு முறிவு ஏற்படும்.
- இரத்த சோகை.
- அடிக்கடி உண்டாகும் நோய்தொற்றுகள்.
- இரத்தத்தில் கால்சியம் அளவு அதிகரித்ததால் வயிற்று வலி, தீவிர தாகம், மலச்சிக்கல் மற்றம் தூக்கக் கலக்கம் ஏற்படுதல்.
- சிறுநீரகங்களின் செயலிழப்பு அல்லது தோல்விக்கு வழிவகுக்கும் சிறுநீரக பிரச்சினைகள் தொடங்குகின்றன.
நோய்தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
மல்டிபிள் மைலோமாவை ஏற்படுத்தும் சரியான காரணம் இன்னும் விவரிக்கப்படவில்லை அல்லது மருத்துவர்களால் உறுதி செய்யப்படவில்லை, ஆனால் மல்டிபிள் மைலோமாவின் ஆபத்தை அதிகரிப்பதாக சில காரணிகள் நம்பப்படுகின்றன. 35 வயதிற்கு அதிகமான வயது, உடல் பருமன், மல்டிபிள் மைலோமாவின் குடும்ப வரலாறு, ஆண் பாலினம் மற்றும் ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் ஆகியவை இந்த நிலை இருப்பதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது.
புற்றுநோய் மரபணு மற்றும் கட்டி தடுப்பு மரபணுக்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வு ஒரு முக்கிய காரணியாகும். மனித உடலில் உள்ள உயிரணுக்களின் வளர்ச்சிக்காக புற்றுநோய் மரபணு பொறுப்பேற்றுள்ளன, அதே நேரத்தில் கட்டி தடுப்பு மரபணுக்கள் வளர்ச்சியை குறைக்கவும் சரியான நேரத்தில் அணுக்களை அழிக்கவும் பொறுப்பேற்கின்றன. இந்த மரபணுக்களின் பிறழ்வு மற்றும் செயலிழப்பு காரணமாக ஏற்படும் நிலைமை பிளாஸ்மா உயிரணுக்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சிக்கு வழிவகுக்கலாம், இதன் விளைவாக மல்டிபிள் மைலோமா ஏற்படுகிறது.
இது எவ்வாறு கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?
தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் மல்டிபிள் மைலோமா இருப்பதாக அறிவுறுத்தினால், ஒரு எக்ஸ் - கதிர்கள் சோதனை, முழுமையான இரத்த எண்ணிக்கை பரிசோதனை, சிறுநீர் பகுப்பாய்வு, சி.டி ஸ்கேன், பி.இ.டி ஸ்கேன், அல்லது எம்.ஆர்.ஐ. ஸ்கேன் தேவைப்படலாம். இந்த ஸ்கேன்கள் ஒரு கட்டியின் இடம் மற்றும் அளவை தீர்மானிக்க உதவும்.
திசு பரிசோதனை செய்வது மல்டிபிள் மைலோமாவை உறுதிப்படுத்துவதற்கான ஒரு உறுதியான சோதனை. எலும்பு மஜ்ஜையில் புற்றுநோய்க்கான பிளாஸ்மா உயிரணுக்களின் சாத்தியம் இருப்பதை தீர்மானிக்க எலும்பு மஜ்ஜையின் மாதிரிகள் எடுக்கப்படுகின்றன.
கீமோதெரபி மல்டிபிள் மைலோமாவின் மிகவும் பொதுவான சிகிச்சையாகும், இருப்பினும் சில பக்க விளைவுகளையும் இது ஏற்படுகிறது. புற்றுநோய் உயிரணுக்களைக் கொல்லவும் கட்டி வளர்வதை தடுக்கவும் கீமோதெரபி மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.
மற்ற மருந்துகளும் பயன்படுத்தப்படுகின்றன, ஆனால் அதை அனைத்து நேரங்களிலும் நோயை குணப்படுத்துவதில்லை அல்லது பல பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது. இந்த மருந்துகள் பின்வருமாறு:
- ஸ்டீராய்டுகள்- ஸ்டீராய்டுகள் பொதுவாக கீமோதெரபி மருந்துகளுடன் சேர்ந்து அவை இன்னும் சிறப்பாக செயல்பட பயன்படுத்தப்படுகின்றன. ஸ்டீராய்டுகளின் முக்கியமான பக்க விளைவுகள்: நெஞ்செரிச்சல், அஜீரணம் மற்றும் தூங்குவதில் சிரமம் ஆகியவை.
- தலிடோமைடு - தலிடோமைடு மைலோமா அணுக்களைக் கொல்ல உதவுகிறது, ஆனால் பெரும்பாலும் மலச்சிக்கல் மற்றும் தலைவலியை ஏற்படுகிறது. மேலும், கால்களில் வீக்கம் அல்லது வலி போன்ற ரத்த உறைவு, மூச்சுவிட இயலாமை மற்றும் நெஞ்சு வலி ஏற்படும் ஆபத்து இருக்கிறது.
- ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை - மைலோமாவின் தீவிர நிகழ்வுகளில், சேதமடைந்த எலும்பு மஜ்ஜை திசுக்களுக்கு பதிலாக ஆரோக்கியமான ஸ்டெம் செல்கள், ஸ்டெம்செல் மாற்று அறுவை சிகிச்சை மூலம் மாற்றப்படுகிறது. இதன் விளைவாக புதிய உயிரணுக்கள் வளர்ந்து எலும்பு மஜ்ஜையை சேதத்திலிருந்து மீள அனுமதிக்கிறது.
இந்த சிகிச்சைகள் விலை உயர்ந்தவை, வலி மிகுந்தவை மற்றும் நோயாளிகளிடமிருந்தும் மருத்துவர்களிடமிருந்தும் சிகிச்சைக்கு நிறைய பொறுப்புகள் தேவைப்படுகின்றன.