மாதவிடாய் பிரச்சினைகள் என்றால் என்ன?
ஒவ்வொரு மாதமும் ஏற்படக்கூடிய பெண்களின் மாதவிடாய் சுழற்சியின் சாதாரண பகுதியே மாதவிடாய் எனப்படுகிறது.மாதவிடாயின் போது ஏற்படும் இரத்தப்போக்கு என்பது பருவமடையும் போது தொடங்குகிறது,அதாவது மிக பொதுவாக 10 வயது முதல் 12 வயதிற்குள் தொடங்கி கர்ப்பக்காலம், தாய்ப்பால் புகட்டும் காலம் அல்லது வயது முதிர்ந்த நிலையில் மாதவிடாய் நிற்கும் காலம் என குறிப்பிட்ட காலங்களை தவிர ஒவ்வொறு மாதமும் வழக்கமாக தொடர்ந்து ஏற்படக்கூடியது.மாதவிடாய் சுழற்சி ஒழுங்குமுறையின்றி ஏற்படும் போது பின்வரும் மாதவிடாய் பிரச்சினைகள் உண்டாகின்றன:
- அமினோருவோ (மாதவிடாயின்போது இரத்தப்போக்கின்மை ஏற்படுதல்).
- டிஸ்மெனோரிஹோ (வலிமிகுந்த இரத்தப்போக்கு ஏற்படுதல்).
- ஒலியிகோமெரோரியா (ஒழுங்குமுறையில்லாத இரத்தப்போக்கு).
- மெனோராஜியா (கடுமையான இரத்தப்போக்கு ஏற்படுதல்).
இதன் முக்கிய அறிகுறிகளும் அடையாளங்களும் என்ன?
மாதவிடாய் பிரச்சினைகள் என்பது பொதுவாக பின்வரும் அறிகுறிகளைக் கொண்டிருக்கின்றன:
- வலி.
- தசை பிடிப்புகள்.
- தலைவலி.
- வயிற்று உப்பசம்.
- கடுமையான அல்லது மிகவும் குறைந்த இரத்த போக்கு.
- ஒழுங்குமுறையில்லாத இரத்த போக்கு.
இதன் முக்கிய காரணங்கள் யாவை?
உங்களுக்கு ஏற்படும் இயல்பான மாதவிடாய் சுழற்சிகள் உங்கள் உடலின் இனப்பெருக்கத்திற்கான ஆரோக்கிய நிலையை சுட்டிக்காட்டுபவை.பூப்பூ அடைந்த, முதல் சில மாதங்களுக்கு மாதவிடாய் ஒழுங்குமுறையின்றி ஏற்படக்கூடும், இருப்பினும், இறுதியில், இந்த சுழற்சி வழக்கமாக ஏற்படுவதோடு 22-31 நாட்கள் வரை நீடிக்கக்கூடியது.மாதவிடாய் பிரச்சனைகள் எழுவதற்கு காரணமாக இருக்கும் காரணிகள் பின்வருமாறு:
- பாலி சிஸ்டிக் ஓவரியன் நோய் (பிசிஓடி): ஓவரியில் நீர்க்கட்டிகள் இருப்பது.
- எண்டோமெட்ரியாசிஸ்: ஓவரியின் வெளிப்புற சுவரில் ஏற்படும் எண்டோமெட்ரியல் திசு வளர்ச்சி மாதவிடாயின் போது சிதறுதல்.
- ஹார்மோன் சமநிலையின்மை.
- கருப்பையில் இருக்கும் ஃபைப்ராய்ட்ஸ்.
- கருப்பையகமான சாதனம் (ஐ.யூ.டி).
- ஹார்மோன் மாத்திரைகள்.
- தைராய்டு பிரச்சினைகள்.
- இரத்த உறைவு குறைபாடுகள்.
இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?
ங்கள் ஏதேனும் மாதவிடாய் பிரச்சனைகளை எதிர்கொண்டால், அதை கையாள உங்களுடைய பெண்ணோயியல் மருத்துவரிடம் ஆலோசனை செய்வது சாலச்சிறந்தது.ஏனெனில் சிகிச்சையளிக்கப்படாத மாதவிடாய் பிரச்சனைகள் தீவிரமான சிக்கல்களை விளைவிக்கலாம்.இதற்கான நோயறிதல் பின்வருமாறு மேற்கொள்ளப்படுகின்றன:
- மாதவிடாய் பற்றிய விரிவான வரலாறு.
- உடலியல் பரிசோதனை.
- கருப்பையின் உட்புறத்தை பரிசோதனை செய்தல்.
- ஹார்மோன்களுக்கான இரத்த பரிசோதனை.
- சிறுநீர் பகுப்பாய்வு.
- அல்ட்ராசவுண்ட் இமேஜிங்.
- எண்டோமெட்ரியல் திசுப்பரிசோதனை.
- ஹிஸ்டரோஸ்கோபி (கருப்பையின் உட்புறத்தை ஆய்வு செய்யும் முறை).
மாதவிடாய் பிரச்சினைகளுக்கான அறிகுறிகள் மற்றும் அடிப்படை காரணங்கள் ஆகிய இரண்டையும் குணப்படுத்த உடனடியான சிகிச்சை அவசியம்.இன்றைய காலகட்டத்தில் பின்வரும் சிகிச்சை தேர்வுகள் கிடைக்கின்றன:
- ஹார்மோனல் சிகிச்சை.
- இரத்த கட்டிகள் உடைவதை தடுப்பதோடு அதீத இரத்த போக்கை கட்டுப்படுத்தவும் பிளாஸ்மினோகன் செயலி இன்ஹிபிட்டர் பயன்படுத்தப்படுகிறது.
- வலியினை குறைக்க ஆன்டி-ஸ்டெராய்டல் எதிர்ப்பு அழற்சி மருந்துகள் (என் எஸ் ஏ ஐ டி எஸ்) பயன்படுத்தப்படுகிறது.
- இரத்த போக்கை நிறுத்த ஹேமஸ்டாடிக்ஸ் பயன்படுத்தப்படுகிறது.
- வலிக்காக சூடான நீர் பையைக் கொண்டு ஒத்தடம் கொடுப்பது போன்ற சுய கவனிப்பை மேற்கொள்ளலாம்.
- மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்பு வலியிலிருந்து நிவாரணம் பெறுவதற்கான உடற்பயிற்சிகளை மேற்கொள்தல்.
மாதவிடாயின் போது வழக்காமாக நடக்கும் சாதாரண மாதவிடாய் சுழற்சி மற்றும் நிகழ்வுகளை புரிந்துகொள்தல் அவசியம்.மாதவிடாய் பிரச்சனைகளிலிருந்து விடுபடவும் மேலும் ஏற்படக்கூடிய சிக்கலைத் தவிர்க்கவும் உங்கள் பெண்ணோயியல் மருத்துவரிடம் வழக்கமான சோதனை செய்துகொள்வது அவசியம் என்பதை தயவுசெய்து நினைவில் கொள்ளவும்.