எலும்புருக்கி நோய் (ரிக்கெட்ச்சியல் இன்ஃபெக்க்ஷன்) என்றால் என்ன?
எலும்புருக்கி நோய் என்பது சிற்றுண்ணிகள், உண்ணி, தெள்ளுப்பூச்சி அல்லது பேன் கடித்தல் மூலம் மனித உடலுக்குள் வரும் பல நுண்ணுயிர் கிருமிகளால் உண்டாகும் ஒரு நோய்தொற்று ஆகும்.மனித உடலில் உள்ள பேன், ரிக்கெட்சியா ப்ரொவஸேகி (எபிடெமிக் டைபிஸ்) சிறப்பினத்தை பரப்பும் போது எலும்புருக்கி நோயின் திடீர்ப்பெருக்கம் உண்டாகிறது.மனிதரிடமிருந்து மனிதருக்கு இந்நோய்த்தொற்று பரவுவதில்லை.
மனிதரில் நோய்த்தொற்றை உண்டாக்கும் (மிக அரிதாக) மற்றும் ஆஸ்திரேலியாவில் காணப்படும் ரிக்கெட்சியா சிறப்பினத்தில் பின்வருவன அடங்கும்:
- ரிக்கெட்சியா டைஃபி - மூரின் டைஃபஸ்.
- ரிக்கெட்சியா அஸ்ட்ரலிஸ் - குயின்ஸ்லாந்து டிக் டைஃபஸ்.
- ரிக்கெட்சியா ஹொனேய் - ஃபின்ஸ்லாந்து தீவு ஸ்பாட்டட் காய்ச்சல்.
- ஓரியண்டியா ட்சூட்சுகமூஷி - ஸ்க்ரப் டைஃபஸ்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
நோய்த்தொற்று உண்டான வீரியம் மற்றும் அறிகுறிகள் ஒருவருக்கொருவர் மாறுபடுகிறது.பொதுவாக எப்பொழுதும் ஏற்படும் அறிகுறிகள் பின்வருமாறு:
- நோய்த்தொற்று ஆரம்பித்த இடத்தில் (கடித்த இடம்) சிறிய, கெட்டியான, கருப்பு புண் (தீக்காயப் பொடுகு) காணப்படுகிறது.
- இருமல்.
- தலைவலி.
- காய்ச்சல்.
- வேனற்கட்டி.
- தசை வலி.
- நிணநீர்ச்சுரப்பிகளில் வீக்கம்.
அரிதாக மூச்சுவிடுதலில் சிரமம் மற்றும் குழப்பம் தென்படுகிறது.
நோய்தாக்குதலுக்கான முக்கியக் காரணங்கள் என்ன?
எலும்புருக்கி நோயின் முக்கியக் காரணங்களில் பின்வருவன அடங்கும்:
- சிற்றுண்ணிகள் மற்றும் உண்ணிகள் மனிதனை கடிக்கையில் அதன் எச்சில் நோய்த்தொற்றை நேரடியாக இடம் மாற்றுகிறது.
- தெள்ளுப்பூச்சிகளால் கடி படும் இடம், மலக்கழிவுகளால் மாசுபடுகிறது.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
எலும்புருக்கி நோய் அசாதாரணமானது மற்றும் அரிதானது ஆதலால் இதனை கண்டறிதல் அநேக நேரங்களில் கடினமாகிறது.அறிகுறிகளின் விரிவான வரலாற்றை பெறுவது கண்டறிதலுக்கு உதவுகிறது.தீர்மானமான கண்டறிதலுக்கு மருத்துவர் பின்வரும் பரிசோதனைகளை பரிந்துரைப்பார்:
- இரத்த பரிசோதனை.
- கடிபட்ட இடத்தில் இருக்கும் தோலின் திசுப் பரிசோதனை.
எலும்புருக்கி நோய்க்கான சிகிச்சையில் பின்வருவன அடங்கும்:
- கடிபட்ட தோல் பகுதியில் ஆய்வு நடத்துதல் (முக்கியமாக வயிறு-தொடை இணைவிடம், அக்குள், காதுகளின் பின்பகுதி அல்லது மூட்டுகள், தலையின் பின்பகுதி) மற்றும் பிகாரிடின் போன்ற பூச்சி விலக்கி அல்லது நீளமான கைகள் உடைய சட்டை மற்றும் அகன்ற விளிம்பு கொண்ட தொப்பிகள் அணிவதன் மூலம் இவற்றை சமாளிக்கலாம்.
- இதற்கு தடுப்பூசி இல்லாததால் நோய்த்தொற்றின் வீரியத்தையும் பாதிக்கப்படும் காலத்தையும் குறைக்க டெட்ராசைக்ளின் அல்லது டாக்சிசைக்ளின் போன்ற நுண்மக்கொல்லி மருந்துவகை பரிந்துரைக்கப்படுகின்றன.
- பொது இடங்களில் இருந்து பாதிக்கப்பட்டவரை தனிமைப்படுத்துதல்.