சுருக்கம்
வயிற்றில் வாயு என்பது இரைப்பையில் வாயு சேறும் ஒரு நிலை ஆகும். இது ப்லேடஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இதனால் ஏப்பம், வயிறு வீக்கம், வாயு வெளியேற்றம் மற்றும் அடிவயிற்றில் வலி போன்றவை ஏற்படுகின்றன. வாயு வெளியேற்றம் ஆசன வாய் வழியே வாயு பிரிதல் என்று குறிப்பிடப்படுகிறது (ப்லாடுலென்ஸ்). பொதுவாக நாம் சாப்பிடும் போதும் பேசும் போதும் வாய் வழியாக வாயில் வாயு நுழைகிறது. பெரிய குடலில் உள்ள பாக்டீரியா உணவுகளை செரிப்பதற்காக உடைக்கிறது, இது வாயு உற்பத்திக்கு வழிவகுக்கிறது. வாய் வழியாகவும் ஆசன வாய் வழியாகவும் வாயுவை வெளியேற்றுவது இயல்பானது. இதனால் எளிய அஜீரணத்திலிருந்து மிகவும் சிக்கலான பெருங்குடல் புண் போன்ற நிலைமைகளும் கூட வரக்கூடும். வழக்கமாக இந்த நோயை மருத்துவ அறிகுறிகளைக் கொண்டு அறியலாம். கடுமையான சந்தர்ப்பங்களில், அடிவயிற்று எக்ஸ்ரே, அல்ட்ராசவுண்ட், எண்டோஸ்கோபி அல்லது இரத்த பரிசோதனைகள் போன்ற சோதனைகளை அடிப்படை நிலைகளை உறுதிப்படுத்த உங்கள் மருத்துவர் உங்களிடம் எடுக்க கூறலாம். கடுமையான அசௌகரியம் அல்லது சமூகத்தில் சங்கடத்தை ஏற்படுத்தாத வரை குடல் வாயு சிகிச்சை தேவைப்படாது. அடிப்படை காரணத்தைக் கருத்தில் கொண்டு சிகிச்சை அளிப்பது நிவாரணம் அளிக்கிறது. குடல் வாயுவை உற்பத்தி செய்யும் சில உணவுகளை தவிர்ப்பது கூட உதவக்கூடும். குடல் வாயு சிக்கல்கள் அரிதாகவே ஏற்படுகிறது. மேலும் உடனடியாக சிகிச்சை பெறுதல் மற்றும் உணவு மாற்றம் மூலம் பெரிய அளவில் நன்மையை பெறலாம்.