டினெ வெர்சிகோலார் என்றால் என்ன?
டினெ வெர்சிகோலார், பிட்யரியாசிஸ் வெர்சிகோலர் என்றும் அழைக்கப்படுகிறது, இந்த நிலையில் மலாஸ்ஸெஜியா பூஞ்சை தொற்றானது பொதுவாக சருமத்தின் மேற்பரப்பில் கட்டுப்பாடின்றி வளர்ந்து சருமத்தை பாதிக்கிறது. இந்த நோய் பொதுவாக சருமம், கழுத்து பகுதி, நெஞ்சு பகுதி, முதுகின் பின்புறம், கைகள் போன்ற பகுதிகளில் லேசான அல்லது அடர்ந்த திட்டுகளை ஏற்படுத்துகின்றன. இது ஓரு தீங்கற்ற நோயாக இருந்தாலும் இதனை கட்டுப்படுத்த மற்றும் குணப்படுத்த மருந்துகள் தேவைப்படுகின்றன.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
டினெ வெர்சிகோலார்( தேமல்) நோயை உருவாக்கும் மிகவும் உறுதியான மற்றும் அறுதியான அறிகுறி சருமத்தில் காணப்படும் நிறமாற்ற திட்டுகளே ஆகும். இந்த திட்டுகள் சருமத்தின் நிறத்தை விட மங்கலாக நிறம்குன்றி காணப்படும் ஆனால் இது சில சமயங்களில் அடர்ந்த நிறமான, இளஞ்சிவப்பு, சிவப்பு அல்லது பழுப்பு நிறத்திலும் கூட இருக்கலாம். சில நோயாளிகளில் இந்த திட்டுகள் உலர்ந்து மற்றும் செதில்களாக காணப்படுவதால் இது அரிப்பினை ஏற்படுத்துகிறது. இந்த தொற்று பொதுவாக உடல் பாகங்கள் மீது ஏற்படுவதால் அது வயிறு-தொடையை இணைக்குமிடம், அக்குள், மார்பகதின் கீழ், வயிறு,தொடையின் உட்பகுதி, கழுத்து மற்றும் அதன் பின்பகுதி போன்ற சரும மடிப்புகள் கொண்ட உடல் பகுதிகளில் இந்த தொற்று பொதுவாக பரவுகிறது.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
இந்த டினெ வெர்சிகோலார் ( தேமல்) நோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணம் ஒருவரை சுற்றியுள்ள சுற்று சூழல் காரணிகள் மற்றும் உயிரியல் காரணிகள் ஆகும். அதிகமான வியர்வையை ஏற்படுத்தும் ஈரப்பதமான அல்லது சூடான காலநிலை போன்றவை இந்த டினெ வெர்சிகோலார் வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. இது ஏற்படுவதற்கான மற்ற காரணிகள் பின்வருமாறு:
- டினெ வெர்சிகோலார் (தேமல்) பாதிப்புள்ள குடும்ப வரலாறு.
- நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தும் முறைகேடான மருந்துகளின் பயன்பாடு.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
பாதிக்கப்பட்ட பகுதியில் உடல் பரிசோதனை செய்வது இந்நோய் ஏற்படுவதற்கான காரணத்தை கண்டறிய உதவுகிறது. எனினும், அரிதாக, உறுதியான காரணத்தை அறிய மருத்துவர் பல்வேறு சோதனைகளை பரிந்துரைக்கலாம்:
- பூஞ்சையின் வளர்ச்சியை அறிய சருமத்தை உரசி தேய்த்தல் சோதனை.
- வூட் லம்ப் சோதனை போன்ற பூஞ்சை வளர்ச்சியை நிர்ணயிப்பதற்கான ஆய்வகப் பரிசோதனை.
இந்நோயின் நிலைமையை கட்டுப்படுத்தவும் குணப்படுத்தவும், பூஞ்சை எதிர்ப்பு மருந்து மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு பொருட்களான பூஞ்சை எதிர்ப்பு லோஷன் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு ஷாம்பூ போன்றவற்றை மருத்துவர் பரிந்துரைக்கலாம். பொதுவாக இந்த பொருட்கள் கெட்டோகனசோல், பெர்மித்திரின் மற்றும் இதுபோன்ற பல மருந்துகளை கொண்டிருக்கின்றன. தளர்வான கதர் உடைகளை அணிதல், சோப்பு மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தி ஒரு நாளைக்கு இரண்டு முறை குளித்தல் , சருமத்தை உலர்வாக வைத்திருத்தல் போன்ற தனிப்பட்ட சுகாதார பராமரிப்பு முறைகள் இந்த டினெ வெர்சிகோலார் பிரச்சனையை விரைவாக குணப்படுத்துவதற்கும், மீண்டும் வராமல் தடுக்கவும் உதவும்.