டாக்ஸோபிளாஸ்மோசிஸ் என்றால் என்ன?
டாக்ஸோபிளாஸ்மா கோன்டி என்ற ஒட்டுண்ணியின் காரணமாக ஏற்படும் தொற்று டாக்ஸோபிளாஸ்மோசிஸ் ஆகும். இந்த ஒட்டுண்ணி பல விலங்குகள் மற்றும் பறவைகளில், குறிப்பாக பூனைகளில் காணப்படுகிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
இந்த நோய்த்தொற்று எந்தவொரு அறிகுறிகளையும் உருவாக்காமல் இருக்கக்கூடும். எனினும், அறிகுறிகள் ஏற்பட்டால் அது பாதிக்கப்பட்ட நபரின் நோயெதிர்ப்பு திறனை பொறுத்து மாறுபடும். வலுவான நோய் எதிர்ப்பு திறனை கொண்ட நபர்களில், பின்வரும் அறிகுறிகள் தோன்றலாம்:
- தலைவலி.
- காய்ச்சல்.
- தசை வலி.
- தொண்டைப்புண்.
- கழுத்தில் இருக்கும் லிம்ப் நோடுகளின் வீக்கம்.
பலவீனமான நோய் எதிர்ப்பு திறனை கொண்ட நபர்களில், பின்வரும் அறிகுறிகள் தோன்றலாம்:
- வலிப்புத்தாக்கங்கள்.
- கடுமையான தலைவலி.
- பார்வைக் கோளாறுகள்.
- மனக் குழப்பம்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
பின்வரும் காரணங்களால் டாக்ஸோபிளாஸ்மோசிஸ் ஏற்படுகிறது:
- பல விலங்கு இனங்களில் இந்த ஒட்டுண்ணிகள் உள்ளன, எனவே சரியாக சமைக்கப்படாத இறைச்சியை உட்கொள்வது தொற்றுக்கு வழிவகுக்கும்.
- அசுத்தமான குடிநீர் மூலமும் இந்த ஒட்டுண்ணி உடலில் நுழையலாம்.
- நோய்த்தொற்றுடைய பூனையின் மலத்தை தொடுவதாலும் தொற்று ஏற்படலாம்.
- ஒரு சில சந்தர்ப்பங்களில், பாதிக்கப்பட்ட தாயிடமிருந்து கருவிலிருக்கும் குழந்தைக்கும் அல்லது நோய்த்தொற்றுடைய இரத்தம் வழியாகவும் நோய்த்தோற்று ஏற்படலாம்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?
டாக்ஸோபிளாஸ்மோசிஸ் நோயைக் கண்டறியும் பொருட்டு பின்வரும் சோதனைகள் நடத்தப்படலாம்:
- ஒட்டுண்ணிக்கு எதிரான ஆன்டிபாடிகள் இரத்ததில் உள்ளனவா என்று கண்டறிய இரத்த பரிசோதனைகள் செய்யப்படலாம்.
- சி.டி ஸ்கேன்.
- எம்.ஆர்.ஐ ஸ்கேன்.
- திசுப்பரிசோதனை.
- மலத்தில் ஒட்டுண்ணி உள்ளதா என்று அறிய பரிசோதனை.
நோயை உறுதிசெய்த பிறகு, மருத்துவர் அல்பெண்டசோல் போன்ற ஆண்டிஹெல்மின்திக்ஸ் என்று அழைக்கப்படும் மருந்துகளின் உதவியுடன் சிகிச்சையளிப்பார். இருப்பினும், பெரும்பாலான நபர்களில், எந்த சிகிச்சையும் இல்லாமலேயே அறிகுறிகள் சில வாரங்களுக்குள் மறைந்து விடும்.
பலவீனமான நோய் எதிர்ப்பு திறனை கொண்ட நபர்களுக்கு மருந்துகள் கட்டாயமாக தேவைப்படும். இந்நிலையினால் எந்தவொரு சிக்கல்களும் ஏற்படவில்லை என்றால் இந்த தொற்றுநோயை எளிதில் குணப்படுத்தலாம்.
பாதுகாப்பாக சமைத்த இறைச்சியைப் உண்பதும் பூனை மலத்தை கையாளும் போது சுகாதாரத்தை பராமரிப்பதும் இந்த தொற்றுநோய் பரவாமல் தடுக்க உதவுகின்றன. சமைக்கப்படாத இறைச்சியை கையாண்ட பிறகு சோப்பு மற்றும் தண்ணீருடன் கைகளை கழுவுவது அவசியம்.