மஞ்சள் காய்ச்சல் என்றால் என்ன?
இது ஒரு தீவிர வைரஸ் தொற்று நோயாகும். குறிப்பாக இந்த நோய் ஆடிஸ் ஏஜிப்டி என்று சொல்லப்படும் ஆப்பிரிக்க, மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் காணப்படுகிற கொசுவின் மூலம் பரவுகூடியது. இது மஞ்சள் ஜாக் அல்லது மஞ்சள் பிளேக் என்றும் அழைக்கப்படுகிறது. மஞ்சள் காய்ச்சல் வைரஸால் பாதிக்கப்பட்ட ஆடிஸ் ஏஜிப்டி கொசுக்கள் மட்டுமே மனிதர்களை கடித்த பிறகு மஞ்சள் காய்ச்சலை ஏற்படுத்துகிறது. சில நபர்களுக்கு இந்நோயின் அறிகுறிகள் மஞ்சள் காமாலை அறிகுறிகளை அதாவது தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறத்தில் இருப்பதால். இந்நோய்க்கு 'மஞ்சள் காய்ச்சல்' என்ற பெயர் வந்தது.
அதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் என்ன?
மஞ்சள் காய்ச்சல் ஒவ்வொரு கட்ட அறிகுறிகளின் அடிப்படையில் வகைப்படுத்தலாம்:
- பசியின்மை, காய்ச்சல், மஞ்சள் காமாலை, உடல் சிவந்து போதல், தலைவலி, மூட்டு வலி, தசை வலி, மற்றும் வாந்தியெடுத்தல் போன்ற பொதுவான அறிகுறிகள் நிலை 1-ல் ஏற்படும்.
- நிலை 1 அறிகுறிகள் மறைந்து, மற்றும் பெரும்பாலான நபர்கள் நலம் அடைவர். ஆனால் சில சந்தர்ப்பங்களில், 24 மணி நேரத்திற்குப் பிறகு அறிகுறிகள் மீண்டும் தோன்றும்.
- கல்லீரல், இதயம் மற்றும் சிறுநீரக பிரச்சினைகள்; இரத்தப்போக்கு கோளாறுகள்; கோமா; மலத்தில் இரத்தம்; சித்தப்பிரமை; கண், மூக்கு, மற்றும் வாயில் இரத்த கசிவு ஆகிய கடுமையான அறிகுறிகள் நிலை 3 ல் ஏற்படும்.
முக்கிய காரணங்கள் என்ன?
பாதிக்கப்பட்ட கொசுவின் கடியால் மஞ்சள் காய்ச்சல் ஏற்படுகிறது. அதன் அறிகுறிகள் ஒருவரை கடித்து மூன்று முதல் ஆறு நாட்களுக்குள் வெளிப்படும்.
இது எப்படி கண்டறியப்படுகிறது மற்றும் சிகிச்சையளிக்கப்படுகிறது?
நோய் கண்டறிதல் என்பது பொதுவாக அறிகுறிகள் இருப்பதை வைத்து உடல் பரிசோதனை செய்யப்படுகிறது. மஞ்சள் காய்ச்சலின் வேறு எந்த அறிகுறிகள் காணப்படுகிறதா என்பதை மருத்துவர் பல்வேறு கேள்விகள் கேட்டு அறிந்து கொள்வார். மஞ்சள் காய்ச்சல் இருப்பதாக மருத்துவர் சந்தேகிக்கிறார் என்றால், அவர் நோயறிதலை உறுதிப்படுத்த ஒரு இரத்த பரிசோதனையை மேற்கொள்ள சொல்வார். இரத்த பரிசோதனை கல்லீரல் மற்றும் சிறுநீரகம் போன்ற உறுப்புகளின் செயலிழப்பையும் வெளிப்படுத்தக்கூடும்.
இதற்கென்று குறிப்பிட்ட சிகிச்சை கிடையாது, ஆனால் பொதுவான அறிகுறிகளை வைத்து சிகிச்சை முறைகள் பரிந்துரைக்கப்படுகின்றன:
- கடுமையான இரத்தப்போக்கு ஏற்பட்டால் இரத்தம் மற்றும் இரத்த விளைபொருள் மாற்றுதல் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
- சிறுநீரகம் செயலிழப்பில் டயாலசிஸ் மேற்கொள்ளப்படுகிறது.
- அதிக நீர் போக்கு ஏற்பட்டால் அதை தடுக்கும் நோக்கில் நரம்பு வழி திரவம் அல்லது திரவ இழப்பை ஈடுசெய்யும் திரவங்கள் அளிக்கப்படுகின்றன.
மஞ்சள் காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்னர் தடுப்பூசி போட்டு மஞ்சள் காய்ச்சலை தடுப்பது நல்லது.