ஆப்பிள், இந்த உலகத்தில் மிகவும் பிரபலமான, சுவை மிகுந்த மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்களில் ஒன்றாகும். இந்த பொலிவான சிவப்பு உணவில் ஒரு தனித்துவமான வசீகரமும் மற்றும் ஒரு மர்மமும் இருக்கின்றன. அது சாறு நிறைந்த ஒரு இனிப்பான தெய்வீக சுவையைக் கொண்டிருக்கிறது. ஒருவேளை அது தான் ஆதாம் மற்றும் ஏவாளை. நீதிக்கதையில் வரும் இந்த ஞானப் பழத்தை சுவைக்குமாறு தூண்டியிருக்கக் கூடும். மேலும் சுவாரஸ்யம் ஊட்டக் கூடிய ஒரு விஷயம் என்னவென்றால், மாலுஸ் என்ற வார்த்தை "ஆப்பிள்" அல்லது "பாவம்" என்ற அர்த்தத்தைக் கொண்டிருக்கிறது. 

உங்களுக்குத் தெரியுமா?

ஆப்பிள்களின் காட்டில் விளைகின்ற முன்னோர்களான மாலுஸ் சியவெர்ஸி, ஆப்பிள்கள் தோன்றிய பகுதியாக நம்பப்படும் மத்திய ஆசியாவில் இன்னமும் காணப்படுகின்றன. 

ஆப்பிள், அதன் தோல் உட்பட, முழுமையாக உண்ணத்தக்கது ஆகும். 7500 க்கும் அதிகமான ஆப்பிள் பயிர் வகைகள் இருக்கின்றன, மற்றும் அவை ஒவ்வொன்றும் மாறுபட்ட பயன்களைக் கொண்டு இருக்கின்றன. சிவப்பு நிற ஆப்பிள்கள், அவற்றை ஒரு மிகச் சிறந்த முதுமை - எதிர்ப்பு பழமாக ஆக்கக் கூடிய வகையில், ஆக்சிஜனேற்ற எதிர்ப்பிகளை அதிக அளவில் கொண்டிருக்கின்றன, மற்றும் பச்சை மற்றும் மஞ்சள் வண்ண ஆப்பிள்கள், ஒருவரின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிற குவார்செட்டின் என்ற உட்பொருளை ஏராளமான அளவு கொண்டிருக்கின்றன. ஆப்பிள், உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக, மாசற்று மற்றும் மென்மையாக வைத்திருக்க உதவுவதாகவும் அறியப்படுகிறது. இருந்தாலும், ஒருவேளை ஆப்பிள் விதைகளை சாப்பிட்டால், அது அபாயகரமானது என நம்பப்படுகிறது.

வணிகரீதியாக விற்பனைக்கு கிடைக்கின்ற ஆப்பிள்கள், வழக்கமாக மிருதுவானவை, ஆனால் மொறுமொறுப்பானவையாக இருக்கின்றன. அவற்றில் சில, பச்சையாக மற்றும் புதிதாக (இனிப்பு ஆப்பிள்கள்) அப்படியே சாப்பிடுவதற்காகப் பயிரிடப்படுகிற அதே வேளையில், வேறு சில வகை ஆப்பிள்கள், சமையலுக்குப் பயன்படுத்துவதற்காகவும் (சமையல் ஆப்பிள்கள்), மற்றும் வினிகர் தயாரிப்பதற்காகவும் பயிரிடப்படுகின்றன. 

ஆப்பிளின் சதைப்பாகம் மற்றும் தோல், ஒரு ஆப்பிளின் ஊட்டச்சத்துக்களின் முக்கிய ஆதாரத்தை வழங்குகின்ற, அந்தோசியானின்கள் மற்றும் டான்னின்களின், செறிவான ஒரு ஆதாரமாக இருக்கின்றன. இந்தப் பழம், அதன் பல்வேறு குணமளிக்கும் பண்புகளை செறிவாக்குகின்ற வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்களால் நிரம்பி உள்ளது.

ஆப்பிள்களை, உடலில் குறைந்த அளவு கொழுப்பு, இதய ஆரோக்கியத்தைப் பராமரித்தல் ஆகியவற்றுக்காகப் பயன்படுத்த முடியும் மற்றும் அவை பற்களுக்கு மிகவும் நல்லது. அவற்றை, புற்றுநோயைத் தடுக்கவும் மற்றும் நீரிழிவைக் கட்டுப்படுத்தவும் கூடப் பயன்படுத்த முடியும்.

"தினசரி ஒரு ஆப்பிள் மருத்துவரை நம்மிடமிருந்து தள்ளியே வைக்கும்" எனக் கூறப்படுவதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.

ஆப்பிள்களைப் பற்றிய சில அடிப்படை விவரங்கள்:

  • தாவரவியல் பெயர்: மாலுஸ் டொமெஸ்டிக்கா/ மாலுஸ் புமிலா
  • குடும்பம்: ரோசசியயி
  • பொதுவான பெயர்கள்: ஆப்பிள், செப்
  • சமஸ்கிருதப் பெயர்: பாலப்பிரபேதா
  • பயன்படும் பாகங்கள்: தோல், சதைப்பகுதி
  • சொந்த பிராந்தியம் மற்றும் புவியியல் பரவுதல்: ஆப்பிள் உலகம் முழுவதும் பயிரிடப்படுகிறது, அவற்றில் சீனா மிகப்பெரிய உற்பத்தியாளராக இருக்கிறது. சீனா ஒவ்வொரு வருடமும் சுமார் 44 மில்லியன் டன்கள் ஆப்பிள் உற்பத்தி செய்கிறது. இந்தியாவில் ஆப்பிள், பெரும்பாலும் காஸ்மீர், உத்திரப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம், மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களின் மலைப்பகுதிகளில் விளைகிறது.
  • சுவாரஸ்யமான தகவல்கள்: ஒரு பிரபலமான மற்றும் ஆரோக்கியமான வகை வினிகரான, ஆப்பிள் வினிகரை 3.7 லிட்டர்கள் தயாரிக்க 36 ஆப்பிள்கள் எடுத்துக் கொள்கிறது
  1. ஆப்பிளின் ஊட்டச்சத்து விவரங்கள் - Apple nutrition facts in Tamil
  2. ஆப்பிளின் ஆரோக்கியமளிக்கும் நன்மைகள் - Apple health benefits in Tamil
  3. ஆப்பிளின் பக்க விளைவுகள் - Apple side effects in Tamil
  4. முக்கிய விவரங்கள் - Takeaway in Tamil

ஆப்பிள், ஆரோக்கியமளிக்கும் பழங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆப்பிளின் 86% வரை தண்ணீரினால் ஆனது. மேலும் அது, சுண்ணாம்பு சத்து, மெக்னீஷீயம், பாஸ்பரஸ், மற்றும் பொட்டாசியம் போன்ற பல்வேறு தாதுக்களையும் கொண்டிருக்கிறது. ஆப்பிள்களில், வைட்டமின் ஏ, சி மற்றும் கே ஆகியவை அதிக அளவில் நிறைந்து இருக்கிறது மற்றும் அவை குறைந்த அளவில் கொழுப்பு சத்தையும் கொண்டிருக்கின்றன.

யு.எஸ்.டி.ஏ ஊட்டச்சத்து தகவல்தளத்தின் அடிப்படையில், 100 கி ஆப்பிள் பின்வரும் மதிப்பீடுகளைக் கொண்டிருக்கிறது:

 

ஊட்டச்சத்து 100 கிராமில் உள்ள அளவு
தண்ணீர் 85.56 கி
ஆற்றல் 52 கலோரிகள்
புரதம் 0.26 கி
கொழுப்புச் சத்து 0.17 கி
கார்போஹைட்ரேட் 13.81 கி
நார்ச்சத்து 2.4 கி
சர்க்கரைகள் 10.39 கி
தாதுக்கள்  
சுண்ணாம்பு சத்து 6 மி.கி
இரும்புச் சத்து 0.12 மி.கி
மெக்னீஷியம் 5 மி.கி
பாஸ்பரஸ் 11 மி.கி
பொட்டாசியம் 107 மி.கி
சோடியம் 1 மி.கி
துத்தநாகம் 0.04 மி.கி
வைட்டமின்கள்  
வைட்டமின் ஏ 3 மி.கி
வைட்டமின் பி1 0.017 மி.கி
வைட்டமின் பி2 0.026 மி.கி
வைட்டமின் பி3 0.091 மி.கி
வைட்டமின் பி6 0.041 மி.கி
வைட்டமின் பி9 3 மி.கி
வைட்டமின் சி 4.6 மி.கி
வைட்டமின் இ 0.18 மி.கி
வைட்டமின் கே 2.2 மி.கி
கொழுப்புகள்/கொழுப்பு அமிலங்கள்  
செறிவுற்ற கொழுப்புகள் 0.028 கி
செறிவற்ற ஒற்றை கொழுப்புகள் 0.007 கி
செறிவற்ற பல தொகுதி கொழுப்புகள் 0.051 கி
myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Urjas Capsule by using 100% original and pure herbs of Ayurveda. This ayurvedic medicine has been recommended by our doctors to lakhs of people for sex problems with good results.
Long Time Capsule
₹712  ₹799  10% OFF
BUY NOW

ஆப்பிள்கள், உங்கள் ஆரோக்கியத்துக்குப் பலவித நன்மைகளை அளிக்கின்ற ஊட்டச்சத்து நிறைந்த பழங்கள் ஆகும். அவை, வாய் சுகாதாரம் மற்றும் உடலில் குறைந்த கொழுப்பு அளவுகளைப் பராமரிக்க உதவுகின்றன. ஆப்பிள் தோலில் உள்ள செறிவான நார்ச்சத்து மூலக்கூறுகள், அதனை வயிற்றுப் பிரச்சினைகள் மற்றும் எடை இழப்புக்கு ஒரு மிகச் சிறந்த நிவாரணியாக ஆக்குகின்றன. அறிவியல் பூர்வமாக நிருபிக்கப்பட்ட ஆப்பிளின் ஆரோக்கியமளிக்கும் நன்மைகளில், சிலவற்றை நாம் இப்பொழுது காணலாம்.

  • இதயத்துக்கு நல்லது: ஆப்பிள்கள், இதய ஆரோக்கியத்துக்கு உதவக்கூடிய, கொழுப்பு குறைப்பு (கொழுப்பைக் குறைக்கிறது) மற்றும் ஆக்சிஜனேற்ற பண்புகளை வெளிப்படுத்துகின்றன. அது, இதயநாள நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைப்பது மட்டும் அல்லாமல், கூடவே ஆக்சிஜனேற்ற நச்சுத்தன்மையின் பாதிப்பையும் குறைக்கிறது மற்றும் இதயத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
  • வாய் சுகாதாரத்தை மேம்படுத்துகிறது: ஆப்பிள், தீங்கு விளைவிக்கக் கூடிய வாய் நுண்ணுயிரியைக் கொல்லக் கூடிய, நுண்ணுயிர் எதிர்ப்பு மூலக்கூறுகளால் நிரம்பிருக்கிறது. தினமும் ஆப்பிள் உட்கொள்வது உங்கள் வாய் சுகாதாரத்தை மேம்படுத்துவது மட்டும் அல்லாமல், கூடவே பற்காறைகள் மற்றும் சொத்தைகள் ஏற்படும் ஆபத்தையும் குறைக்கிறது.
  • நீரிழிவு நோய்க்கு நன்மை அளிக்கக் கூடியது: 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களைக் கொண்ட மருத்துவ ஆய்வுகள், தவறாமல் ஆப்பிள் எடுத்துக் கொள்வது, நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தை 18% அளவு குறைப்பதற்கு வழிவகுக்கிறது எனத் தெரிவிக்கிறது. ஆப்பிள், கணையத்தின் பீட்டா செல்களின் செயல்பாட்டை அதிகரிக்கின்ற, திடமான ஆக்சிஜனேற்ற பண்புகளை வெளிப்படுத்துகிறது. அது, இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்க வழிவகுக்கிறது.
  • செரிமான சக்தியை மேம்படுத்துகிறது: ஆப்பிள்கள், மலம் கழித்தல் செயல்பாடுகளை முறைப்படுத்தி, மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெற உதவுகின்ற, உணவுசார் நார்ச்சத்தினை அதிக அளவில் கொண்டிருக்கின்றன. மேலும் அது, குடல் எரிச்சல் நோய் போன்ற இரைப்பை பாதையில் ஏற்படக்கூடிய அழற்சி பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகின்ற, அழற்சி எதிர்ப்பு உட்பொருட்களையும் கொண்டிருக்கின்றன.
  • உடல் எடைக் குறைப்பை ஊக்குவிக்கிறது: ஆப்பிளில் உள்ள பாலிஃபினல்கள், மருத்துவ ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ள படி, உடல் பருமன் எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டிருக்கிறது. அது, குறைந்த ஆற்றல் அடர்த்தியின் காரணமாக, பி.எம்.ஐ மற்றும் ஒட்டுமொத்த உடல் எடையைக் குறைக்கிறது எனக் கண்டறியப்பட்டு உள்ளது.
  • முதுமை-எதிர்ப்பு: ஆக்சிஜனேற்ற எதிர்ப்பிகளின் ஒரு ராணுவத்தையே கொண்டிருப்பதால் ஆப்பிள், முதுமையை எதிர்க்க உதவுகின்ற சிறந்த உணவுகளில் ஒன்றாக இருக்கிறது. அது, உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது மற்றும் கரும்புள்ளிகள் மற்றும் தோல் சுருக்கங்கள் போன்ற முதுமைக்கான அறிகுறிகளைக் குறைக்கிறது.

வாய் சுகாதாரத்துக்காக ஆப்பிள் - Apples for oral health in Tamil

மோசமான வாய் சுகாதாரம், வாய் துர்நாற்றம் மற்றும் பல் ஈறு நோய், மற்றும் பற்சிதைவு போன்ற நோய்கள் ஏற்படக் காரணமாகக் கூடும். 20 நபர்களைக் கொண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வு, ஆப்பிள் உட்கொள்வது, உமிழ்நீரில் இருக்கின்ற நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை குறைவதற்கு காரணமாக இருக்கிறது எனக் காட்டியது. இந்த விளைவு, பல் துலக்கிய பிறகு காணக்கூடிய பயனோடு ஒத்ததாக இருந்தது.

மற்றொரு ஆய்வில் கூறப்பட்டுள்ளபடி, ஆப்பிள் உட்கொள்ளும் நபர்களுக்கு வாய் புற்றுநோய் வரும் அபாயம் குறைவாக இருக்கிறது. இது ஏனென்றால், ஆப்பிளில் இருக்கின்ற ஃபிளவோனோய்ட்களின் காரணமாக நடக்கிறது. அதற்கும் மேலாக, ஆப்பிளில் காணப்படும் ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு பண்புகள், பற்களில் ஏற்படும் நோயைத் தடுக்க உதவக் கூடியவை ஆகும்.

ஆய்வுக்கூட அடிப்படையிலான ஆய்வுகள், ஆப்பிளில் இருக்கின்ற குவார்செட்டின், பற்களின் மேல் நுண்ணுயிரிகள் ஒட்டிக் கொள்வதைத் தடை செய்கிறது. அதன் மூலம் பற்சிதைவு ஏற்படும் ஆபத்தைக் குறைக்கிறது.

இதயத்துக்கான ஆப்பிளின் நன்மைகள் - Apple benefits for heart in Tamil

இதயநாள நோய்கள் (சி.வி.டி) என்பவை, இதயம் மற்றும் இரத்தக் குழாய்களை பாதிக்கின்ற நோய்களின் ஒரு தொகுப்பைக் குறிப்பது ஆகும். பொதுவான சி.வி.டி- க்கள், இதய இரத்தக் குழாய் நோய், பக்கவாதம், இதய நிறுத்தம் மற்றும் புற தமனி நோய் ஆகியவற்றை உள்ளடக்கியவை ஆகும். ஆராய்ச்சிகள், ஆப்பிள் உட்கொள்வது சி.வி.டி- க்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கின்றது என சுட்டிக்காட்டுகின்றன. ஆப்பிள்கள் ஃபுளோவோனோய்ட்களை செறிவாகக் கொண்டவை. 40000 -க்கும் மேற்பட்ட பெண்களைக் கொண்டு நடத்தப்பட்ட ஒரு மருத்துவ ஆய்வில், ஃபுளோவோனோய்ட்களை தொடர்ந்து எடுத்துக் கொள்வதால் இதயநாள நோய்கள் ஏற்படுவது 35% அளவு குறைந்து இருப்பது கண்டறியப்பட்டது. ஒரு சமீபத்திய ஆய்வில், ஆப்பிளில் காணப்படும் கேட்டசின்கள் இதய ஆரோக்கியத்துடன், ஒரு நேர்மறையான தொடர்பைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டது.

மற்றொரு ஆய்வு, ஆப்பிள் தோலில் இருக்கின்ற பாலிஃபினல்கள், குறிப்பாக இதயநாள நோய்கள் ஏற்படுவதைத் தடுப்பதில் திறன்வாய்ந்த ஆக்சிஜனேற்றப் பண்புகளையும், மற்றும் கொழுப்பு அளவுகளைக் குறைக்கின்ற பண்புகளையும் கொண்டிருக்கிறது எனத் தெரிவிக்கிறது.

(மேலும் படிக்க: இதய நோய் வராமல் தடுத்தல்)

கொழுப்பு அளவுக்காக ஆப்பிள் - Apple for cholesterol in Tamil

கொழுப்பு என்பது, நமது உடலால் இயற்கையாகவே உற்பத்தி செய்யப்படும் மெழுகு போன்ற ஒரு பொருள் ஆகும். அது நமது உடலால், நாம் உண்ணும் உணவின் மூலமாகவும் கிரகித்துக் கொள்ளப்பட முடியும், மற்றும் அது பல்வேறு வளர்சிதை மாற்ற செயல்பாடுகளுக்கு தேவைப்படுகிற ஒன்றாக இருக்கிறது. இருந்தாலும் உயர் கொழுப்பு அளவுகள், தமனித் தடிப்பு, உடல் பருமன் மற்றும் பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கின்றன. ஆராய்ச்சி முடிவுகளின் படி, ஆப்பிள் உட்கொள்வது, உடலில் உள்ள கொழுப்பு அளவுகளின் மீது, ஒரு நன்மை அளிக்கும் விளைவைக் கொண்டிருக்கிறது.

ஒரு முன் மருத்துவ ஆய்வு, ஆப்பிளை உட்கொள்வது இரத்த பிளாஸ்மாவில் உள்ள கொழுப்பு அளவு மற்றும் கல்லீரலின் மொத்த கொழுப்பு அளவு ஆகியவற்றை குறைப்பதற்கு வழிவகுக்கிறது எனத் தெரிவித்து உள்ளது. மேலும் அது எச்.டி.எல் அளவுகளை அதிகரித்து, உணவில் இருந்து கிரகிக்கப்படும் கொழுப்பின் அளவைக் குறைக்கவும் வழிவகுக்கிறது. இந்த கொழுப்பு அளவைக் குறைக்கும் விளைவானது, ஆப்பிளில் இருக்கின்ற பெக்டின் மற்றும் பிற ஃபினாலிக் மூலக்கூறுகளின் காரணமாக ஏற்படக்கூடியதாக இருக்கக் கூடும்.

மேலும், ஆப்பிளில் காணப்படும் நார்ச்சத்து, ஒரு திறன்மிக்க கொழுப்பு குறைப்பு (கொழுப்பு அளவுகளைக் குறைக்கின்ற) பாதிப்புகளை வெளிப்படுத்துகிறது எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

நீரிழிவுக்காக ஆப்பிள் - Apple for diabetes in Tamil

நீரிழிவு என்பது, இரத்தத்தில் சர்க்கரை அளவுகள் அதிகரித்து இருப்பதைக் கொண்டு குறிப்பிடப்படும் ஒரு பிரச்சினை ஆகும்.  2 ஆம் வகை நீரிழிவானது மிகவும் பொதுவான நீரிழிவு வகை ஆகும். இந்தப் பிரச்சினை, உடல் இன்சுலினை முறையாகப் பயன்படுத்த இயலாமல் போகும் பொழுது ஏற்படுகிறது. ஆய்வுகள், ஆப்பிள்கள் உட்கொள்வதற்கும், 2 ஆம் வகை நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்துக்கும் இடையே ஒரு தலைகீழான தொடர்பு இருப்பதாகத் தெரிவிக்கின்றன. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு மருத்துவரீதியிலான ஆய்வு, தொடர்ச்சியாக ஆப்பிள் எடுத்துக் கொள்வது காரணமாக, 18% அளவுக்கு 2ஆம் வகை நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் குறைகிறது என்பதை நிரூபித்து இருக்கிறது.

மேலும் அந்த ஆய்வு, ஆப்பிளில் இருக்கின்ற கேட்டசின்கள், நீரிழிவு நோய்க்கு எதிரான பாதுகாப்பு விளைவுகளைக் கொண்டிருக்கக் கூடும் என்பதை சுட்டிக் காட்டியது. இது, ஒரு ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு விளைவின் மூலம் நடைபெறலாம். இந்த ஆக்சிஜனேற்ற எதிர்ப்பிகள், திசுக்களின் சேதத்தை சரி செய்கின்றன. அதன் விளைவாக பீட்டா செல்களின் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன. பீட்டா செல்கள் என்பவை கணையத்தில் இருக்கின்ற, இன்சுலின் உற்பத்திக்கான பொறுப்பைக் கொண்ட செல்கள் ஆகும்.

ஆப்பிளின் புற்றுநோய்க்கு எதிரான பண்புகள் - Apple anticancer properties in Tamil

பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள், ஆப்பிள் கீமோ பாதுகாப்பு பண்புகளைக் கொண்டிருப்பதாகக் கூறுகின்றன. மனிதர்களுக்கு ஏற்படும் ப்ரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோய் பற்றி மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு, ஆப்பிள் தோல்கள், புற்றுநோய் செல்களின் வளர்ச்சி மற்றும் உயிர் வாழ்தலைத் தடுக்கின்றன என சுட்டிக் காட்டுகிறது. மேலும் ஆப்பிள் தோல்கள், உடலின் மற்ற பாகங்களுக்கு புற்றுநோய் பரவுவதைத் தடை செய்கிற ஒரு வகைப் புரதமான மாஸ்பின் அதிகரிப்புக்கும் வழிவகுக்கின்றன.

ஒரு ஆய்வுக் கட்டுரையில் கூறியுள்ள படி ஆப்பிள்கள், புற்றுநோய் செல்களின் வளர்ச்சி மற்றும் பரவுதலைத் தடுக்கும் திறன் உடைய ஒலிகோமெரிக் புரோசியானிடின்களை (ஒரு வகை புளோவோனாய்ட்கள்), அதிக அளவில் கொண்டிருக்கின்றன. மேலும் அவை புற்றுநோய் செல்களின் இறப்புக்குக் (செல்களின் சுய இறப்பு) காரணமாகவும் இருக்கின்றன.  

இதற்கும் மேலாக, ஆப்பிள் தோல்கள், அவற்றின் புற்று நோய் எதிர்ப்பு பண்புகளின் முக்கியமான பங்களிப்பை அளிக்கக் கூடியவற்றில் ஒன்றாகக் கண்டறியப்பட்டுள்ள, பல்வேறு வகையான டிரிட்டர்பெனோய்ட்களைக் கொண்டிருக்கின்றன.

சுவாச மணடலத்துக்கான ஆப்பிளின் நன்மைகள் - Apple benefits for respiratory system in Tamil

நுரையீரல் குறைபாடுகள், புகைப்பிடிப்பவர்கள் அல்லது சுற்றுச்சூழல் மாசடைந்த நகரங்களில் வசிப்பவர்கள் மத்தியில் மிகவும் வழக்கமானவை ஆகும். ஆய்வுகளின் படி, ஆப்பிள் உட்கொள்வது நுரையீரல்களுக்கு நன்மை அளிக்கக் கூடியதாகும். 2500 க்கும் மேற்பட்ட நபர்களைக் கொண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வு, ஆப்பிளில் இருக்கின்ற வைட்டமின் சி மற்றும் வைட்டமின் இ இரண்டும் நுரையீரல்களின் செயல்பாட்டில் ஒரு மேம்பாட்டுக்கு வழிவகுக்கிறது எனத் தெரிவிக்கிறது       

மற்றொரு ஆய்வு, ஆப்பிளைத் தொடர்ந்து உட்கொண்டு வருவது, புகைப்பிடிப்பதை நிறுத்தி விட்ட நபர்களின் நுரையீரல் செயல்பாடுகளை, பழைய நிலைக்குக் கொண்டு வர உதவுகிறது என சுட்டிக் காட்டுகிறது. நுரையீரல் செயல்பாட்டில் ஏற்படும் இந்த முன்னேற்றம், ஆப்பிளில் இருக்கக் கூடிய குவார்செட்டின் மற்றும் கேட்டசின் போன்ற சில குறிப்பிட்ட மூலக்கூறுகளின் காரணமாக நடைபெறுகிறது. மேலும் இந்த மூலக்கூறுகள், நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுப்பதிலும் திறன் வாய்ந்தவையாக இருக்கின்றன.

வயிற்றுக்கான ஆப்பிளின் நன்மைகள் - Apple benefits for stomach in Tamil

செரிமான மண்டலம், நாம் உண்கின்ற உணவுகளை செரிமானம் செய்கின்ற பொறுப்பைக் கொண்டிருக்கிறது . மேலும் அது, உடலின் மூலம் ஊட்டச்சத்துக்கள் எடுத்துக் கொள்ளப்படுவதற்கும் உதவி புரிகிறது. ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை மற்றும் துரித உணவுகளைத் தொடர்ந்து உட்கொள்வது ஆகியவை, வயிற்றுப்போக்கு, குடல் எரிச்சல் நோய் (ஐ.பி.எஸ்), மலச்சிக்கல் மற்றும் வயிற்று வலி போன்ற பல்வேறு செரிமான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கக் கூடும்.

ஒரு ஆராய்ச்சியின் படி, உலர்ந்த ஆப்பிள் தோலின் பொடியில் இருக்கின்ற பாலிஃபெனோல்கள், வயிற்றில் ஏற்படுகின்ற அழற்சியைத் தடுப்பதில் உதவிகரமாக இருக்கக் கூடும். விலங்கு மாதிரிகளின் மீது செய்யப்பட்ட ஒரு ஆய்வு, உலர்ந்த ஆப்பிள் தோலின் பொடியில் இருக்கின்ற பாலிஃபெனோல்கள், அழற்சிக்கு உள்ளான ப்ரோஸ்டாகிளாண்டின் பாதிப்பைத் தடுக்கவும் மற்றும் குடல்களில் ஏற்படும் செல் சேதாரத்தைக் குறைப்பதிலும் உதவுகின்ற, திடமான ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை வெளிப்படுத்தியதாகத் தெரிவிக்கிறது. இந்த முடிவு, ஐ.பி.எஸ்- க்கு சிகிச்சை அளிப்பதில் ஆப்பிளின் சக்திவாய்ந்த பயன்பாட்டினை சுட்டிக்காட்டுகிறது.

விட்ரோ மற்றும் விவோ (விலங்குகள் அடிப்படையிலானது) ஆய்வுகளில், ஆப்பிளின் இரைப்பையைப் பாதுகாக்கின்ற செயல்பாடு, அதில் ஆக்சிஜனேற்ற பாலிஃபெனோல்கள் இருக்கின்ற காரணத்தினால் ஏற்படுகிறது என வெளிப்பட்டிருக்கிறது.

மேலும் ஆப்பிள், மலத்தினை மொத்தமாக்கி, அது பெருங்குடலில் பயணிக்கும் நேரத்தைக் குறைத்து, அதன் மூலம் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கக் கூடிய நார்ச்சத்துக்கான, ஒரு நல்ல ஆதாரம் ஆகும். வேறு சில நார்ச்சத்து செறிவான பழங்கள் அல்லது கோதுமை உமிகளில் இருக்கின்ற அளவுக்கு, இந்த செயல்பாடு இல்லாத போதும், அது ஒரு கணிசமான அளவுக்கு பயனுடையதாக இருக்கிறது எனக் கண்டறியப்பட்டு இருக்கிறது.

சருமத்துக்கான ஆப்பிளின் நன்மைகள் - Apple benefits for skin in Tamil

பல்வேறு சரும வகைகளுக்கான பல்வேறு சரும பராமரிப்பு பொருட்களுக்காவே அர்ப்பணிக்கப்பட்ட முழுமையான சந்தை ஒன்று இருக்கிறது. ஆப்பிள்கள், ஆக்சிஜனேற்ற பண்புகளைக் கொண்ட வைட்டமின் சி மற்றும் பாலிஃபெனோல்களை செறிவாகக் கொண்டவை ஆகும். ஆராய்ச்சிகள் இந்த மூலக்கூறுகள், சருமம் மூப்படைவதைத் தடுப்பதில் உதவ இயலும் எனத் தெரிவிக்கின்றன. மேலும் அது, ஆரோக்கியத்தை அதிகரிக்கும் பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்டிருக்கிறது. இதற்கு என்ன அர்த்தம் என்றால், அது தோல் சுருக்கங்கள் மற்றும் கரும்புள்ளிகளைக் குறைப்பது மட்டும் அல்லாமல், கூடவே ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான ஒரு சருமத்தை அடைய உங்களுக்கு உதவுகிறது என்பதாகும். பிறகு யார் தான் அதை விரும்ப மாட்டார்கள்?

(மேலும் படிக்க: ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு நிறைந்த உணவு ஆதாரங்கள்)

உடல் எடைக் குறைப்புக்காக ஆப்பிள் - Apple for weight loss in Tamil

உடல் பருமன் என்பது, உடல் சார்ந்த செயல்பாடுகள் அதிகம் இல்லாத நபர்கள் அல்லது அளவுக்கு அதிகமாக சாப்பிடுகின்ற நபர்கள் ஆகியோரிடைய காணப்படும் ஒரு பொதுவான பிரச்சினை ஆகும். உடல் பருமன், காலப்போக்கில் இதய பிரச்சினைகள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு ஆகியவற்றுக்குக் காரணமாகக் கூடும். எனவே, உடல் எடையைப் பராமரிப்பது மிகவும் அவசியமானது ஆகும். ஆய்வுகள், ஆப்பிள்களை உட்கொள்வது, அந்த கூடுதலான எடையைப் போக்க உதவக் கூடியது என சுட்டிக்காட்டுகின்றன. 411 நபர்களிடையே நடத்தப்பட்ட ஒரு மருத்துவ ஆய்வு, ஒரு நாளுக்கு மூன்று ஆப்பிள்கள் சாப்பிடுவது, அதன் குறை ஆற்றல் அடர்த்தியின் காரணமாக உடல் எடைக் குறைப்புக்கு வழிவகுக்கும் என வெளிப்படுத்தி உள்ளது.

ஊட்டச்சத்துக்கான அமெரிக்க கல்லூரியின் நாளேட்டில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையின் படி, ஆப்பிளில் உள்ள பாலிஃபெனோல்கள், உடல் பருமனுக்கு எதிரான விளைவுகளைக் கொண்டிருக்கின்றன. இது, ஆக்சிஜனேற்ற நச்சுத்தன்மையைக் குறைப்பது, மற்றும் கொழுப்புத் திசுக்களுடைய செல்களின் வளர்சிதை மாற்றத்தில் குறுக்கிடுவதன் மூலமாக முதன்மையாக நடைபெறுகிறது. மேலும் அந்தக் கட்டுரை, ஆப்பிள்களைத் தொடர்ந்து உட்கொண்டு வருவது, ஒட்டுமொத்த உடல் எடை மற்றும் உடல் நிறை குறியீட்டெண் (பி.எம்.ஐ) ஆகியவற்றைக் கணிசமான அளவுக்கு குறைப்பதை வெளிப்படுத்துகின்ற, சில முன் மருத்துவ மற்றும் மருத்துவ ஆய்வுகளையும் குறிப்பிடுகிறது. இருந்தாலும், இந்தப் பழத்தின் அதிகபட்ச நன்மைகளைப் பெற, சாப்பிட வேண்டிய சரியான அளவு மற்றும் சாப்பிடுகின்ற கால இடைவெளி ஆகியவற்றைக் கண்டறிய மேலும் அதிக ஆய்வுகள் தேவைப்படுகின்றன.

(மேலும் படிக்க: உடல் எடைக் குறைப்புக்கான உணவுப்பழக்க அட்டவணை)

இந்த அற்புதமான பழம், பல்வேறு ஆரோக்கியமளிக்கும் நன்மைகளைக் கொண்டு வந்தாலும், அளவுக்கு அதிகமாக ஆப்பிள் உட்கொள்வது ஆரோக்கிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கக் கூடும். பக்க விளைவுகள் சிறியவையாக மற்றும் அரிதானவையாக இருந்தாலும் கூட, இந்தப் பழத்தின் அதிகபட்ச நன்மைகளைப் பெற, ஒரு சீரான உணவுடன் ஆப்பிளை மிதமான அளவில் எடுத்துக் கொள்வது அறிவுறுத்தப்படுகிறது.

  • ஆப்பிள்கள் பயிரிடுகையில் அதிகமான அளவு பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவதால், நாம் தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்களால் பாதிக்கப்படுகிறோம். ஆப்பிளை சாப்பிடும் முன்னர் அதன் தோலை உரித்து விடுவது இந்த ஆபத்தை நீக்கி விடுகிறது. இருந்தாலும், பெரும்பாலான நார்ச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் ஆப்பிளின் தோலில் தான் இருக்கின்றன. எனவே, ஆப்பிளின் தோலை உரித்து விடுவது ஊட்டச்சத்துக்களில் ஒரு குறைவைக் கொடுக்கக் கூடும். இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட ஆப்பிள்களை வாங்குவது, இந்த ஆபத்தை நீக்க மற்றும் ஒரு வழி ஆகும்.
  • ஆப்பிள் விதைகள், ஒரு குறிப்பிடத்தக்க அளவில், சியனோஜெனிக் கிளைகோசைட் என வகைப்படுத்தப்படும் ஒரு     நச்சுத்தன்மை அமைக்டலினைக் கொண்டிருக்கின்றன. அமைக்டலினை தொடர்ந்து உட்கொள்வது, ஆபத்தானது மற்றும் அடிப்படை உடலியல் செயல்பாடுகளைப் பாதிக்கக் கூடியது, மற்றும் செல்களால் ஆக்சிஜனைப் பயன்படுத்த இயலாதவாறு செய்யக் கூடியது எனக் கருதப்படுகிறது.
  • ஆப்பிள் சாறு அருந்தியதால், நீடித்த காரணமற்ற வயிற்றுப்போக்கு (சி.என்.எஸ்.டி) ஏற்பட்டதாக ஒரு சில பிரச்சினைகள் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றன.
myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Kesh Art Hair Oil by using 100% original and pure herbs of Ayurveda. This Ayurvedic medicine has been recommended by our doctors to more than 1 lakh people for multiple hair problems (hair fall, gray hair, and dandruff) with good results.
Bhringraj Hair Oil
₹546  ₹850  35% OFF
BUY NOW

ஆப்பிள், ஆரோக்கியமளிக்கும் பழங்களில் ஒன்றாகும்: அது பல்வேறு புளோவோனாய்டுகள் மற்றும் பாலிபெனோல்களை செறிவான அளவில் கொண்டு இருக்கிறது. ஆப்பிளில் இருக்கின்ற குவார்செட்டின் மற்றும் கேட்டசின் ஆகியவை, ஆரோக்கியம் அளிக்கும் பல்வேறு நன்மைகளைக் கொண்டு இருக்கின்றன. அது, உடல் எடைக் குறைப்பில் உதவக்கூடியது, அதன் ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு பண்புகள், புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது, அது நீரிழிவைக் கட்டுப்படுத்துவதில் மற்றும் கொழுப்பு அளவுகளைக் குறைப்பதில் உதவுகிறது. ஆப்பிள்கள் குறிப்பிடத்தக்க எந்த பக்க விளைவையும் கொண்டிருக்கவில்லை. இது, அந்தப் பழத்தை அனைருக்கும் ஏற்ற தேர்வாக ஆக்குகிறது.


Medicines / Products that contain Apple

மேற்கோள்கள்

  1. United States Department of Agriculture Agricultural Research Service. Basic Report: 09003, Apples, raw, with skin (Includes foods for USDA's Food Distribution Program). National Nutrient Database for Standard Reference Legacy Release [Internet]
  2. Sesso HD, Gaziano JM, Liu S, Buring JE. Flavonoid intake and the risk of cardiovascular disease in women. Am J Clin Nutr. 2003 Jun;77(6):1400-8. PMID: 12791616
  3. Arts IC, Jacobs DR Jr, Harnack LJ, Gross M, Folsom AR. Dietary catechins in relation to coronary heart disease death among postmenopausal women. . Epidemiology. 2001 Nov;12(6):668-75. PMID: 11679795
  4. Guo XF, Yang B, Tang J, Jiang JJ, Li D. Apple and pear consumption and type 2 diabetes mellitus risk: a meta-analysis of prospective cohort studies. Food Funct. 2017 Mar 22;8(3):927-934. PMID: 28186516
  5. Dianne A. Hyson. A Comprehensive Review of Apples and Apple Components and Their Relationship to Human Health. Adv Nutr. 2011 Sep; 2(5): 408–420. PMID: 22332082
  6. Reagan-Shaw S, Eggert D, Mukhtar H, Ahmad N. Antiproliferative effects of apple peel extract against cancer cells. Nutr Cancer. 2010;62(4):517-24. PMID: 20432173
  7. Gerhauser C. Cancer chemopreventive potential of apples, apple juice, and apple components. Planta Med. 2008 Oct;74(13):1608-24. PMID: 18855307
  8. He X, Liu RH. Triterpenoids isolated from apple peels have potent antiproliferative activity and may be partially responsible for apple's anticancer activity. J Agric Food Chem. 2007 May 30;55(11):4366-70. Epub 2007 May 8. PMID: 17488026
  9. Butland BK, Fehily AM, Elwood PC. Diet, lung function, and lung function decline in a cohort of 2512 middle aged men. Butland BK1, Fehily AM, Elwood PC. PMID: 10639525
  10. Jeanelle Boyer, Rui Hai Liu. Apple phytochemicals and their health benefits. Nutr J. 2004; 3: 5. PMID: 15140261
  11. G Graziani et al. Apple polyphenol extracts prevent damage to human gastric epithelial cells in vitro and to rat gastric mucosa in vivo. Gut. 2005 Feb; 54(2): 193–200. PMID: 15647180
  12. Vanessa Palermo et al. Apple Can Act as Anti-Aging on Yeast Cells. Oxid Med Cell Longev. 2012; 2012: 491759. PMID: 22970337
  13. Conceição de Oliveira M, Sichieri R, Sanchez Moura A. Weight loss associated with a daily intake of three apples or three pears among overweight women. Nutrition. 2003 Mar;19(3):253-6. PMID: 12620529
  14. Asgary S, Rastqar A, Keshvari M. Weight Loss Associated With Consumption of Apples: A Review. J Am Coll Nutr. 2018 Sep-Oct;37(7):627-639. PMID: 29630462
  15. Hyams JS, Leichtner AM. Apple juice. An unappreciated cause of chronic diarrhea. Am J Dis Child. 1985 May;139(5):503-5. PMID: 3984976
  16. Bolarinwa IF, Orfila C, Morgan MR. Determination of amygdalin in apple seeds, fresh apples and processed apple juices. Food Chem. 2015 Mar 1;170:437-42. PMID: 25306368
Read on app