அவற்றின் தனித்துவமான சுவைக்காகவும் மற்றும் விசித்திரமான நிறத் தோற்றத்துக்கும் புகழப்படுகின்ற பிஸ்தாக்கள், உலகின் பழமையான பருப்பு வகைகளில் ஒன்றாக இருக்கின்றன. முந்திரி குடும்பத்தை சார்ந்த ஒரு உறுப்பினரான பிஸ்தா மரம், மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் தோன்றிய ஒரு சிறிய மரம் ஆகும். மத்திய கிழக்கு நாடுகளில் பல்லாயிரம் ஆண்டுகளாக பிஸ்தாக்கள் வளர்க்கப்படுவதாக நம்பப்படுகிறது. பிஸ்தாக்களின் வளமான வரலாற்றை எடுத்துக் காட்டும் விதமாக, ஒரு ஆசிர்வதிக்கப்பட்ட உணவாக பிஸ்தாக்களைப் பற்றிய குறிப்புகள் பைபிளின் பழைய ஏற்பாடு நூலில் காணப்படுகின்றன.
தொல்பொருள் ஆய்வுகள், பிஸ்தா பருப்புகள் கி.மு 6750 ஆம் ஆண்டுகளிலேயே ஒரு பொதுவான உணவாக இருந்ததை வெளிப்படுத்துகின்றன. அது, இத்தாலி மற்றும் ஹிஸ்பானியா நாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்படும் வரை, சிரியாவுக்கு மட்டுமே உரித்தான தனித்தன்மையுடையதாக இருந்தது. தொல்லியல் ஆய்வாளர்கள், அட்லாண்டிக் பகுதிகளில் பிஸ்தாக்களின் நுகர்வை சுட்டிக் காட்டுகின்ற ஆதாரங்களை, ஈராக்கின் வடகிழக்குப் பகுதிகளில் மேற்கொண்ட அகழ்வாய்வுகளில் இருந்து கண்டறிந்து இருக்கிறார்கள். நவீன பிஸ்தாவானது, சமீபத்திய உதாரணமாக உஸ்பெகிஸ்தான் இருக்கின்ற வேளையில், முதன் முதலில் பயிரிடப்பட்டது மத்திய ஆசியாவில் வெண்கல காலமாக இருக்கிறது. தற்போது, 1854 ஆம் ஆண்டு பிஸ்தாக்கள் அறிமுகம் செய்யப்பட்ட ஆங்கிலம் பேசும் நாடுகளான, ஆஸ்திரேலியாவுடன் கூடவே, அமெரிக்காவில் புது மெக்சிகோ, மற்றும் கலிபோர்னியா மாகாணங்கள் போன்ற பகுதிகளில் வியாபார நோக்கில் பயிரிடப்படுகின்றன. 2014 ஆம் ஆண்டு, அமெரிக்கா மற்றும் ஈரான் இரண்டு நாடுகளும் இணைந்து, உலகத்தின் மொத்த பிஸ்தா உற்பத்தியில் 76% அளவுக்கான பங்களிப்பை அளித்து, உலகின் மிகப்பெரிய பிஸ்தா உற்பத்தியாளர்களாக இருந்தனர்
ஒரு சுவையான நொறுக்குத் தீனியாக இருப்பதற்கும் மேலாக, அவற்றின் கவர்ச்சி என்பது, அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள், உயிர்வளியேற்ற எதிர்ப்பிகள் மற்றும் ஆரோக்கியமான புரதங்கள் ஆகியவையே ஆகும். அவை இதயம் மற்றும் மூளைக்கான ஆரோக்கியத்துக்கு மிகவும் சிறந்தது, மேலும் பிஸ்தாக்களில் இருக்கின்ற நார்ச்சத்துக்கள், உடல் எடைக்குறைப்பில் உதவக் கூடியவை ஆகும்.
பிஸ்தாக்கள் ஒரு நொறுக்குத் தீனியாக தனியாக, பச்சையாகவோ, வறுக்கப்பட்டோ அல்லது உப்பு தூவியோ, ஒரு காய்கறி கூட்டின் மேல்பகுதியில், உலர் பழங்களுடன் கலந்து, பேக்கரி உணவுகளில், அல்லது, மீன் அல்லது இறைச்சியின் மீது ஒரு மொறுமொறுப்பான பூச்சாக சாப்பிடக் கூடியவை ஆகும். இவற்றுடன் கூடவே பிஸ்தாக்கள், பிஸ்தா ஐஸ் க்ரீம், குல்ஃபி, பக்லவா, பிஸ்தா வெண்ணெய், அல்வா மற்றும் சாக்லேட் கூட தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
பிஸ்தாக்களைப் பற்றிய சில அடிப்படை விவரங்கள்:
- தாவரவியல் பெயர்: பிஸ்தாசியா வேர
- குடும்பப் பெயர்: முந்திரி குடும்பம் (அனகார்டியாசியயி).
- பொதுவான பெயர்கள்: பிஸ்தா, பிஸ்தா
- பயன்படும் பாகங்கள்: உண்மையில் நாம் சாப்பிடுபவை மற்றும் பயன்படுத்துபவை, பிஸ்தா பழத்தின் விதைகள் ஆகும்.
- சொந்த பிராந்தியம் மற்றும் புவியியல் பரவுதல்: ஈரான், துருக்கி, சீனா, அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், மற்றும் சிரியா
- சுவாரஸ்யமூட்டும் உண்மை: கி.மு. 700 ஆம் ஆண்டு காலத்தின் பொழுது பாபிலோனின் தொங்கும் தோட்டங்கள், பிஸ்தா மரங்களைக் கொண்டிருந்ததாகக் கூறப்பட்டு இருக்கிறது.