பல் ஈறு வீக்கம் (ஜிங்கிவிட்டிஸ்) என்றால் என்ன?
ஜிங்கிவிட்டிஸ் என்பது ஈறுகளில் ஏற்படும் அழற்சி நோய் ஆகும், இது டென்டல் பிளேக் திரண்டிருக்கும் காரணத்தினால் ஏற்படுகின்றது. பிளேக் என்பது இயல்பாகவே நிறமற்றதாக ஏற்படக்கூடியது, ஓட்டும் தன்மைகொண்ட திரையை உடையது (உயிர்த்திரை). பிளேக் என்பது பற்களின் இடையேயும் திரண்டிருக்கக்கூடியது. முறையான பராமரிப்பு இல்லையெனில், இந்நிலை ஈறுகளுக்கு கடுமையான சேதம் மற்றும் பல் இழப்பு ஆகியவற்றிற்கு வழிவகுக்கும்.
இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?
பின்வரும் அறிகுறிகளை நீங்கள் எதிர்கொண்டால் உங்களுக்கு பல் ஈறு வீக்கம் ஏற்படலாம்:
- சிவந்த மற்றும் அழற்சியுடைய ஈறுகள்.
- இரத்த கசிவுடைய ஈறுகள்.
- புண்பட்ட ஈறுகள்.
- சுவாசிக்கும் போது ஏற்படும் ஃபவுல் வாசனை (மேலும் படிக்க: மோசமான சுவாசத்திற்கான காரணங்கள்).
- குளிரான அல்லது சூடான உணவு பொருட்கள் மற்றும் பானங்களை உட்கொள்ளும் போது ஏற்படும் உணர்திறன். (மேலும் படிக்க: பல் உணர்திறன் சிகிச்சை).
- பற்கள் தளர்வடைதல்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
பல் ஈறு வீக்கதிற்கான முக்கியமான காரணம் பிளேக் உருவாகமே ஆகும். பிளேக்கில் இருக்கும் பாக்டீரியாக்கள் ஈறுகளில் பாதிபேற்படுத்துவதோடு அழற்சி மற்றும் இரத்தக்கசிவினையும் ஏற்படுத்துகிறது. இந்த பிளேக்கினால் கடினமாக மாறவும் டார்ட்டர் என்று அழைக்கப்படும் பொருளை உருவாக்கவும் முடியும், இது பிளேக்குகளை விட உறுதியானது.
பின்வரும் காரணிகளால் பல் ஈறு வீக்கத்திற்கான ஆபத்துகளை அதிகரிக்கக்கூடியது:
- மோசமான பராமரிப்பைக்கொண்ட வாய் துப்புரவு.
- புகைபிடித்தல் அல்லது புகையிலை பயன்படுத்துதல்.
- கர்ப்பம்.
- ஊட்டச்சத்தின்மை.
- மனஅழுத்தம்.
- நீரிழிவு, மனித நோய்த்தாக்குதல் வைரஸ் (எச்.ஐ.வி)தொற்று மட்டும் புற்றுநோய் போன்ற நோய்கள்.
- வலிப்பு நோய் எதிர்ப்பு மருந்துகள், புற்றுநோய் மருந்துகள், வாய்வழியாக பயன்படுத்தும் கருத்தடை மாத்திரைகளை மற்றும் ஸ்டீராய்ட் மருந்துகளை உட்கொள்வதாலும் பல் ஈறு வீக்கம் ஏற்படுகிறது.
இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை ?
பல் மருத்துவரிடம் அடிக்கடி சென்று பற்களை பரிசோதித்து பார்த்தல் பல் ஈறு வீக்கத்தினை ஆரம்பத்திலேயே அடையாளம் காண உதவுகிறது, பொதுவாக இந்நிலை வழியற்றதாக இருப்பதால் இம்முறையினை பின்பற்றுதல் சாலச்சிறந்தது. சிகிச்சை முறையில் இடம்பெறுபவை சிறப்பாக சுத்தம் செய்யும் உபகரணங்களை வைத்து பற்களில் உள்ள பிளேக்கை நீக்குதல் ஆகும்.
நீங்கள் வலியை உணர்ந்தால், உங்கள் பல் மருத்துவர் உங்கள் பற்களின் வலியை குறைக்க வலி நிவாரணிகளை பரிந்துரைப்பார். சில வழக்குகளில், ஆண்டிபயாடிக்களும் பரிந்துரைக்கப்படலாம். உங்கள் பல்லில் ஏற்பட்டிருக்கும் தொற்று மிக தீவிரமாக இருந்தால் பல்லை நீக்குதல் அவசியம்.
கீழ்காணும் சுய பாதுகாப்பு குறிப்புகளை பின்பற்றி பல் ஈறு வீக்கத்தை நீங்கள் தடுக்கலாம்:
- உங்கள் பற்களை தினமும் இருமுறை துலக்குதல்.
- ஒரு நாளைக்கு ஒரு முறையாவது முறையாக வாயை கொப்பளித்தல்.
- வாய்கழுவியை தொடர்ந்து பயன்படுத்துதல்.
- உங்கள் ஈறுகளில் ஏதேனும் நிறமாற்றம் ஏற்பட்டிருக்கிறதா என வழக்கமான பரிசோதனை செய்தல்.
- வழக்கமான டென்டல் பரிசோதனை செய்தல்.