கல்லீரல் இழைநார் வளர்ச்சி - Liver Cirrhosis in Tamil

Dr. Rajalakshmi VK (AIIMS)MBBS

April 24, 2019

March 06, 2020

கல்லீரல் இழைநார் வளர்ச்சி
கல்லீரல் இழைநார் வளர்ச்சி

கல்லீரல் இழைநார் வளர்ச்சி என்றால் என்ன?

கல்லீரல் சிரோஸிஸ் எனும் நிலை நீண்ட- கால கல்லீரல் சேதத்தினால் ஏற்படும் ஆழமான தாக்கத்தினால் விளையும் வடு ஆகும். இந்நிலையில் கல்லீரல் சுருங்குவதோடு கடினமானதாகிவிடும். எனவே, இக்காரணத்தினால் கல்லீரல் முறையாக செயல்படாததோடு இறுதியில் கல்லீரலை செயலிழக்க செய்கின்றது. இந்நிலை கல்லீரலுக்கு சப்ளையாகும் இரத்தத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்துவதோடு போர்டல் ஹைப்பர்டென்ஷன் எனப்படும் நிலை உருவாகவும் காரணமாக இருக்கின்றது.

சிரோசிஸ் என்பது முன்னேற்றமடையக்கூடிய நோய் ஆகும் மேலும் இது ஆரோக்கியமான திசுக்களை ஃபைப்ரஸ் பேண்ட்களைக் கொண்டு மாற்றியமைக்கிறது. இதற்கு பதிலளிக்கும் வகையில் தற்காப்புக்காக இயல்பாகவே, கல்லீரல் நொதில்கள் தூண்டுதலுக்கு எதிராக போராட தயாராகின்றது மேலும் ஆழமான தாக்கத்தினால் வடுவினை பெற்று கல்லீரலின் வெளிப்புற மேற்பரப்பை வடுவினால் முற்றிலுமாக மூடிவிடுகிறது. இந்த வடு திசுக்கள் கல்லீரலுக்கு சப்ளையாகும் இரத்தத்தை எடுத்துக்கொண்டு கல்லீரல் முற்றிலும் செயலிழக்கவோ அல்லது மரணத்தை நோக்கியோ நிலைமையை திசை மாற்றிவிடுகிறது.

இதை சார்ந்த முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?

இந்நிலையின் ஆரம்பக்கட்ட அறிகுறிகள் பின்வருமாறு:

இந்நிலையின் இறுதி கட்டத்தில் ஏற்படும் அறிகுறிகள் பின்வருமாறு:

அதன் முக்கிய காரணங்கள் என்ன?

கல்லீரல் இழைநார் வளர்ச்சிக்கான பொதுவான தூண்டுதல்கள் பின்வருமாறு:

  • ஹெப்படைடிஸ் பி, அல்லது சி போன்ற வைரல் தொற்றுகள்.
  • நீண்டநாள் இருக்கும் மதுப்பழக்கம்.
  • கொழுப்பு கல்லீரல் நோய் (மதுவினால் ஏற்படுவது அல்ல).
  • உடல்பருமன்.
  • சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ்.     
  • நாள்பட்ட ஹைப்பர்டென்ஷன்.
  • ஆட்டோ இம்யூன் நோய்கள் அதாவது ஹெப்படைடிஸ் போன்ற ஆட்டோ இம்யூன் நோய்கள்.
  • பித்தநீர் குழாய்களில் ஏற்படும் அடைப்பு.
  • மூலிகை செய்யும் போது கல்லீரலுக்கு ஏற்படும் பாதிப்பு.
  • இரசாயனத்தின் வெளிப்பாடு.
  • இதய செயலிழப்பு.
  • கல்லீரலில் ஏற்படும் ஃபங்கல் தொற்று.
  • மரபணு கல்லீரல் நோய்கள்.
  • உடலில் காப்பர் அல்லது அதிகமான இரும்பு இருத்தல்.

இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?

பின்வரும் முறைகளை பயன்படுத்துவதன் மூலம் மருத்துவரால் இந்நிலையை கண்டறியமுடிகிறது:

  • கல்லீரல் செயல்பாட்டை அடையாளம் காண இரத்த பரிசோதனைகள்.
  • கல்லீரல் திசுப்பரிசோதனை.
  • எம்ஆர்ஐ ஸ்கேன்.
  • மேல் செரிமான பாதைக்கான எண்டோஸ்கோபி.
  • சிடி ஸ்கேன்.
  • அல்ட்ராசவுண்ட்.

மேலே உள்ள சோதனைகள் இந்நிலையைச் சார்ந்த சிக்கல்களின் அளவை அடையாளம் காண உதவலாம். சைல்ட்ஸ்-பக் டெஸ்ட் ஸ்கோர் எனப்படும் ஸ்கேல் இந்நிலையை பின்வருமாறு வகைப்படுத்துகிறது:

  • கடுமையான.
  • மிதமான.
  • லேசான.

சிரோசிஸ் சேதத்தின் அளவை மதிப்பீடு செய்ய இழப்பீடு செய்யப்பட்ட இழைநார் அழற்சி அல்லது சீர்குலைந்த இழைநார் அழற்சி என வகையறுக்கப்பட்டிருக்கிறது. இழப்பீடு செய்யப்பட்ட இழைநார் அழற்சி என்றால் இழப்பீட்டு நிலையையும் பொருட்படுத்தாது கல்லீரல் தொடர்ந்து செயல்படும். சீர்குலைந்த இழைநார் அழற்சி என்பது பெரும்பாலும் கல்லீரல் நோயின் இறுதி நிலையாகும்.

மது உட்கொள்தலை நிறுத்துவதனாலோ அல்லது அடிப்படை வைரஸ் தொற்றினை தடுப்பதற்கான சிகிச்சையளிப்பதாலோ சிரோசிஸ் நிலையிலிருந்து மேம்படமுடியும். வழக்கமாக, இந்நிலைக்கான சிகிச்சையின் நோக்கம் வடு திசுவின் முன்னேற்றத்தை மெதுவாக குறைப்பதே. இந்நிலையின் சிகிச்சை முறைகள் பின்வருபவற்றை சார்ந்திருக்கிறது:

  • சமச்சீரான உணவு பழக்கம்.
  • அதிகளவு சோடியம் உட்கொள்வதை தவிர்த்தல்.
  • ஹெப்படைடிஸ் வைரஸ்கான சிகிச்சை.
  • இரும்பு மற்றும் காப்பர் அளவுகளை கட்டுப்படுத்துதல்.

கடுமையான பிரச்சினைகள் ஏற்படும் வழக்குகளில், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையே இறுதி தெரபியுடிக் தேர்வாகும். இருப்பினும், சிகிச்சை அளிக்க தவறிவிட்டால், இந்நிலை சிக்கலாக மாறி பின்வருபவைக்கு வழிவகுக்கக்கூடும்:



மேற்கோள்கள்

  1. National Health Service [Internet]. UK; Overview - Cirrhosis
  2. American liver Foundation. The Progression of Liver Disease. [Internet]
  3. Detlef Schuppan, Nezam H. Afdhal. Liver Cirrhosis. Lancet. Author manuscript; available in PMC 2009 Mar 8. PMID: 18328931
  4. The Johns Hopkins University. Chronic Liver Disease/Cirrhosis. [Internet]
  5. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Cirrhosis

கல்லீரல் இழைநார் வளர்ச்சி க்கான மருந்துகள்

Medicines listed below are available for கல்லீரல் இழைநார் வளர்ச்சி. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.