மூக்கில் ஏற்படும் பரு என்றால் என்ன?
அடைக்கப்பட்ட சரும எண்ணைச் சுரப்பிகள் அல்லது நோய்த்தொற்றுடைய மயிர்க்கால்கள் காரணமாக உருவாகும் சிறிய கொப்புளம் பரு ஆகும்.மூக்கின் உள்பகுதியில் பல மயிர்க்கால்கள் உள்ளன.எனவே, இப்பகுதியில் பரு வருவதில் ஆச்சரியமில்லை.பார்வைக்கு அவமானகரமாக இருப்பதில்லை என்றாலும், இதன் வலி தீவிரமாக இருக்கும் என்பதே பாதிக்கப்பட்டோர் சொல்லும் சொல்லாகும்.
இதன் முக்கிய அடையாள-அறிகுறிகள் என்ன?
இந்த பருக்கள் வழக்கமாக சிறியவையாக இருக்கும்.மேலும் மூக்குக்கு உள்ளே இருக்கும் பரு சிறிய புடைப்பு போல உணரப்படும். இந்த பருக்கள் அடிக்கடி லேசான வலியை கொடுக்கக்கூடியவை.எனினும், ஒரு கூறிய கருவியைக் கொண்டு பரு குத்தப்பட்டால், அது சீழ்க்கொப்புளமாகவும் மற்றும் இறுதியாக, புண்ணாகவும் உருவாக வழிவகுக்கும்.இவ்வாறு உண்டாகும் சீழ்பிடித்த கட்டி மிகவும் வலி உடையதாக இருக்கும் மேலும் சீழ் போன்ற திரவம் வெளிவரவும் இது வழிவகுக்கும்.பாதிக்கப்பட்ட பகுதியில் அரிப்பு, சருமம் சிவத்தல் மற்றும் வெப்ப உணர்வு ஆகிய அறிகுறிகள் தென்படும்.
இதன் முக்கிய காரணங்கள் என்ன?
மயிர்க்கால் தொற்று, மூக்குப் பருவிற்கான பொதுவான காரணிகளில் ஒன்றாகும்.பாலிகுலைடிஸ் மற்றும் செல்லுலைடிஸ் என்றழைக்கப்படும் மயிர்க்கால் வீக்கம் இந்நிலைக்கான மற்ற காரணங்களில் அடங்கும், இது ஒர் நோய்த் தொற்று ஆகும்.சருமத்தின் உள்நோக்கி வளரும் முடியின் காரணமாகவும் பரு ஏற்படலாம்.
இது எப்படி கண்டறியப்படுகிறது மற்றும் சிகிச்சையளிக்கப்படுகிறது?
அறிகுறிகளை கொண்டும் மற்றும் நிபுணரால் செய்யப்படும் மூக்கின் உள்பகுதி பரிசோதனையை கொண்டும் இந்நிலையை உறுதிப்படுத்தலாம் பெரும்பாலான பருக்கள் தாமாகவே குணமாகிவிடுகின்றன.பருக்கள் குணமடைய 7 முதல் 10 நாட்கள் வரை ஆகும்.காய்ச்சல் ஏற்பட்டாலோ, அல்லது சீழ்ப்பிடித்தாலோ மருத்துவரை கலந்தாலோசிக்க வேண்டும்.ஆண்டிபயாடிக் சிகிச்சை 5 நாட்களுக்கு அளிக்கப்படும்.பெரும்பாலான நிலைகள் ஆண்டிபயாடிக் சிகிச்சையால் குணமாகிவிடுகின்றன.சில நிலைகளுக்கு சீழ் வடித்தல் தேவைப்படுகிறது.இந்நிலையால் இரத்த உறைவு ஏற்படலாம்.சில மூக்கு நாளங்கள் மூளையுடன் இணைந்துள்ளதால் சிகிச்சையளிக்கப்படாத மூக்குப்பருக்கள் ஆபத்தானது.சுய பாதுகாப்பு நடவடிக்கைகளாக அடிக்கடி மூக்கு குடைவதை தவிர்க்தல், நிபுணர் உதவியுடன் முடியை அகற்றுதல், வலி போக்க சூடான ஒத்தடங்களை பயன்படுத்துதல், மற்றும் உள்பக்கம் தேங்காய் எண்ணெய் தடவுதல் ஆகியவை நிவாரணம் வழங்குவதாக அறியப்படுகிறது.