உயிர் வளியேற்ற எதிர்ப்பொருட்கள் என்பவை, உள்மூலக்கூறு சேதாரக் கூறுகளின் காரணமாக செல்களில் ஏற்படுகின்ற சேதாரத்தைத் தடுக்கின்ற, அல்லது தாமதப்படுத்துகின்ற மூலக்கூறுகள் ஆகும். அவை இயற்கையாகவே நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளில் காணப்படுகின்றன, மேலும் அவை செயற்கையான பிற்சேர்க்கைப் பொருட்களிலும் கூடக் காணப்படுகின்றன.  அவை இயற்கை உணவுகளில் போதுமான அளவு கிடைக்கின்ற காரணத்தினால், ஒரு உணவுசார் பிற்சேர்க்கைப் பொருள் என்பது மிகவும் அரிதாகவே தேவைப்படுகின்ற ஒன்றாகும்.

பீட்டா-கெரட்டின், வைட்டமின் E மற்றும் வைட்டமின் C ஆகியவை நிறைந்த உணவுகள், உங்கள் உணவுமுறையில் நீங்கள் சேர்த்துக் கொள்ளத் தகுந்த உயிர் வளியேற்ற எதிர்ப்பொருட்களின் சிறந்த ஆதாரங்கள் ஆகும். இந்த ஆதாரங்கள் பற்றியும், கூடவே உயிர் வளியேற்ற எதிர்ப்பொருட்களின் நன்மைகள், பங்கு மற்றும் செயல்கள் ஆகியவை பற்றியும், இந்தக் கட்டுரையில் மிகவும் விரிவாக விவரிக்கப்பட்டு இருக்கிறது..

  1. உயிர் வளியேற்ற எதிர்ப்பொருட்கள் மற்றும் உள்மூலக்கூறு சேதாரக் கூறுகள் என்றால் என்ன - What are antioxidants and free radicals in Tamil
  2. உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள் உணவுகள் - Antioxidant foods in Tamil
  3. உயிர் வளியேற்ற எதிர்ப்பொருட்களின் நன்மைகள் - Antioxidants benefits in Tamil
  4. உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள் தேநீர் - Antioxidant tea in Tamil
  5. உயிர் வளியேற்ற எதிர்ப்பொருட்களின் பக்க விளைவுகள் - Side effects of antioxidants in Tamil

ஒரு உள்மூலக்கூறு சேதாரக் கூறு என்பது, ஒரு அதிகப்படியான ஜோடியற்ற, மற்றும் ஒரு ஜோடியை உருவாக்குவதற்காக, மிகவும் எதிர்வினை கொண்ட எலெக்ட்ரானைக் கொண்டிருக்கும் ஒரு மூலக்கூறு ஆகும். ஜோடியை அடைவதற்காக, அது உடல் செல்களுடன் தீவிரமாக எதிர்வினை புரிந்து, அவற்றுக்கு சேதத்தை ஏற்படுத்துகிறது. உயிர்வளியேற்ற சேதாரம் என அடிக்கடி அழைக்கப்படுகின்ற இந்த நிகழ்வானது, மனித உடலின் பல்வேறு உறுப்புகள், மற்றும் அமைப்புகளுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியது, மற்றும் பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்கான முக்கியமான ஒரு காரணமாகவும் இருக்கிறது.

உள்மூலக்கூறு சேதாரக் கூறுகள், உடலின் இயல்பான வளர்சிதை மாற்ற செயல்பாடுகளால், அல்லது சுற்றுச்சூழல் மாசுக்கள், வேதிப்பொருட்கள், பூச்சிக்கொல்லிகள், புகை, அல்லது யு.வி. கதிர்கள், எஸ்ரேக்கள், இன்ன பிற சேதம் உண்டாக்கும் கதிர்கள் ஆகியவை படுவதன் மூலம் ஏற்படுகின்றன. பதப்படுத்தப்பட்ட உணவுகள் அதிகப்படியாக அடங்கி உள்ள ஆரோக்கியமற்ற ஒரு உணவுமுறையின் விளைவாகவும் கூட, அவை அதிக அளவில் உருவாகின்றன.

அவை உடல் செல்களுடன், குறிப்பாக சருமத்தில் உள்ள செல்களுடன் தீவிரமாக எதிர் வினையாற்றி, சருமத்தில் சுருக்கங்கள், மற்றும் முன்கூட்டியே வயதான தோற்றம் ஆகியவை ஏற்படக் காரணமாகின்றன. உள்மூலக்கூறு சேதாரக் கூறுகள், முடிகளுக்கும் குறிப்பிடத்தக்க அளவில் பாதிப்பினை ஏற்படுத்துகின்றன. அந்த பாதிப்புகள், முடி நரைத்துப் போகுதல் மற்றும் வயது அதிகமாகும் பொழுது முடி உதிர்வு அதிகரித்தல் போன்றவாறு வெளிப்படக் கூடும்.

வயது தொடர்பான வழுக்கையும் (முடி உதிர்வு காரணமாக தலையில் ஏற்படும் வழுக்கை), உயிர் வளியேற்ற சேதாரத்தின் காரணமாக ஏற்படுகின்ற ஒன்று ஆகும். அதனால், முதுமை அடையும் செயல்பாட்டில், உயிர் வளியேற்ற சேதாரம் ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது என்று மிகவும் சரியாக சொல்லப்பட்டு இருக்கிறது.

(மேலும் படிக்க: வழுக்கைக்கான சிகிச்சை)

மனித உடலின் மீதான உள்மூலக்கூறு சேதாரக் கூறுகளின் மற்ற பாதிப்புகளில் பின்வருவன அடங்கும். 

உள்மூலக்கூறு சேதாரக் கூறுகள் உருவாவது தவிர்க்க இயலாத செயல்முறையாக இருக்கின்ற அதே வேளையில், உங்கள் உணவுமுறையில் உயிர் வளியேற்ற எதிர்ப்புப் பொருட்களின் அளவை அதிகரிப்பதன் மூலம், அவற்றுக்கான உடலின் எதிர்வினையை ஒருவர் மாற்றி அமைக்க முடியும்.

குறிப்பிட்ட உணவுகளில் காணப்படும் உயிர் வளியேற்ற எதிர்பொருட்கள், உள்மூலக்கூறு சேதாரக் கூறுகளுக்கு ஒரு அதிகப்படியான எலெக்ட்ரானை அளிப்பதன் மூலம், அவற்றின் வேதி சமநிலையின்மையைக் குறைக்கின்றன. இவ்வாறு, உயிர் வளியேற்ற எதிர்பொருட்கள், உள்மூலக்கூறு சேதாரக் கூறுகளின் செயல்பாட்டைக் குறைக்கின்ற, மற்றும் உடல் செல்களுக்கு ஏற்படுகின்ற சேதத்தைத் தடுக்கக் கூடிய திறனைக் கொண்டிருக்கின்றன. இந்தத் திறன், அவற்றை தினசரி உணவின் ஒரு இன்றியமையாத உட்கூறாக ஆக்குகின்றது. 

Cough Relief
₹716  ₹799  10% OFF
BUY NOW

பின்வரும் உணவுகளில், உயிர் வளியேற்ற எதிர்ப்பொருட்கள் போதுமான அளவுக்கு அதிக அளவில் காணப்படுகின்றன. அதிகபட்ச ஆரோக்கிய நன்மைகளைப் பெற, ஒருவர் அவற்றை எடுத்துக் கொள்ளும் அளவை அதிகரித்துக் கொள்ளலாம். இருப்பினும், உங்களுக்கான சரியான தேர்வை மேற்கொள்ள, உங்கள் ஊட்டச்சத்து நிபுணர், அல்லது மருத்துவரிடம் கலந்து ஆலோசனை செய்வது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

  • வைட்டமின் C செறிந்த உணவுகள்
  • வைட்டமின் E செறிந்த உணவுகள்
    • வஞ்சிரம்
    • முட்டைகள்
    • மீன் எண்ணெய்
    • கடல் உணவுகள்
    • இறைச்சி
    • மெல்லிய இறைச்சி
    • ஈரல்
       
  • வைட்டமின் E செறிந்த உணவுகள்
    • மஞ்சள், பச்சை மற்றும் சிவப்பு மிளகாய், அதே போன்று காரட் போன்ற நிறமுள்ள காய்கறிகள்
    • பசலைக் கீரை, பரட்டைக் கீரை, பூக்கோசு போன்ற பச்சை இலை காய்கறிகள் 
    • பப்பாளி
    • வாதுமைப் பழம்
    • பால் மற்றும் பால் பொருட்கள்( மேலும் படிக்க: வைட்டமின் A ஆதாரங்கள்)
       
  • உயிர் வளியேற்ற எதிர்ப்பொருட்களின் மற்ற ஆதாரங்கள்

உயிர் வளியேற்ற எதிர்ப்பொருட்கள், மனித ஆரோக்கியத்துக்கு, குறிப்பாக சரும ஆரோக்கியத்துக்கான நிரூபிக்கப்பட்ட நன்மைகளைக் கொண்டிருக்கின்றன. அவை, பல நோய்கள் மற்றும் ஆரோக்கியப் பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கின்ற வகையில், உயிர் வளியேற்ற சேதாரத்தைக் குறைக்க உதவுகின்றன. உயிர் வளியேற்ற எதிர்ப்பொருட்களின் மிகவும் முக்கியமான ஆரோக்கியம் சார்ந்த நன்மைகளில் சில கீழே விவரிக்கப்பட்டு உள்ளன:

  • சருமத்துக்கு: உயிர் வளியேற்ற எதிர்ப்பொருட்கள், சருமத்தில் சுருக்கங்கள் மற்றும் வரிகள் ஏற்படுதல், மற்றும் பிற முxxதுமைக்கான அறிகுறிகள் ஏற்படுவதைத் தாமதிக்க உதவுகின்ற வகையில், உங்கள் சருமத்துக்கான நிரூபிக்கப்பட்ட நன்மைகளைக் கொண்டிருக்கின்றன. மேலும் அவை ஒளிப்பாதுகாப்பு (சூரிய ஒளியில் இருந்து பாதுகாப்பு அளித்தல்), மற்றும் காயங்களைக் குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டவையாகவும் இருக்கின்றன.
  • முடிகளுக்கு: உயிர் வளியேற்ற எதிர்ப்பொருட்கள் உங்கள் முடிகளுக்கான மகத்தான நன்மைகளைக் கொண்டிருக்கின்றன. அவை, உங்கள் முடிகளை சேதத்தில் இருந்து பாதுகாப்பதன் மூலம், முடி உதிர்வு மற்றும் இளநரை ஏற்படுவதைத் தடுப்பதில் உதவுகின்றன.
  • கண்களுக்கு: உயிர் வளியேற்ற எதிர்ப்பொருட்கள், முதுமை தொடர்பான கருவிழி சிதைவு ஏற்படும் அபாயத்தை ஏறத்தாழ 25% அளவுக்கு குறைப்பதன் மூலம், உங்கள் கண்களுக்கு நன்மை அளிக்கும் விளைவுகளைக் கொண்டிருக்கின்றன. மேலும் அவை, கண்புரை ஏற்படும் அபாயத்தையும் குறைப்பதன் மூலம், வயது முதிர்ந்தவர்களுக்கு பார்வை இழப்பு ஏற்படும் அபாயத்தையும் குறைக்கின்றன.
  • மூளைக்கு: உயிர் வளியேற்ற எதிர்ப்பொருட்கள், வயது முதிர்ந்தவர்களுக்கு நரம்பு சிதைவு, மற்றும் ஞாபக மறதி ஏற்படக் காரணமான உயிர் வளியேற்ற சேதாரம் மற்றும் சேதத்தைக் குறைக்க உதவுகின்றன. உயிர் வளியேற்ற எதிர்ப்பொருட்கள், அல்சைமர் நோயை உருவாக்குவதோடு தொடர்புடைய பீட்டா-அமிலாய்டு புரதத்தின் அளவுகளைக் குறைத்து, அதன் மூலம் அல்சைமர் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கின்றன என ஆய்வுகள் வெளிப்படுத்தி இருக்கின்றன.
  • எடைக் குறைப்புக்கு: வளர்சிதை மாற்றத்தில் உதவுவதன் மூலம் உயிர் வளியேற்ற எதிர்ப்பொருட்கள், உணவுமுறையில் சேர்த்துக் கொள்ளப்படும் பொழுது, உடல் எடைக் குறைப்பு செயல்முறையில் உதவுகின்றன.
  • மற்ற நன்மைகள்: உயிர் வளியேற்ற எதிர்ப்பொருட்கள், உடல் உறுப்புகளின் சேதத்தைக் குறைப்பதன் மூலம், இதய இரத்தக் குழாய் தொடர்பான நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதில் உதவிகரமாக இருக்கக் கூடும். புற்றுநோய் ஏற்படாமல் தடுப்பதில் உயிர் வளியேற்ற எதிர்ப்பொருட்களின் பங்கும் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.

சருமத்துக்கான உயிர் வளியேற்ற எதிர்ப்பொருளின் நன்மைகள் - Antioxidant benefits for skin in Tamil

சருமத்தின் மீதான உயிர் வளியேற்ற எதிர்ப்பொருட்களின் நன்மைகள் மகத்தானவை ஆகும். அவை சருமத்தில் ஏற்படும் வரிகள், சுருக்கங்கள், மற்றும் பிற முதுமைக்கான அறிகுறிகளைக் குறைக்க, மற்றும் தாமதப்படுத்த உதவுகின்றன. உயிர் வளியேற்ற எதிர்ப்பொருட்களின் இந்த விளைவுகளை உருவாகும் செயல்முறையைத் தீர்மானிக்க, பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. அந்த ஆய்வுகளில், ஊட்டச்சத்து மிக்க உயிர் வளியேற்ற எதிர்ப்பொருட்கள், குறிப்பாக வைட்டமின் E, வைட்டமின் C மற்றும் கெரோட்டினாய்டுகள் ஆகியவை, சருமம் முதுமை அடைவதைத் தாமதப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருப்பதையும், மற்றும் ஒரு ஒளிப்பதுகாப்பு விளைவைக் (யு.வி. கதிர்களில் இருந்து பாதுகாக்கிறது) கொண்டிருக்கின்றன என்பதும் கண்டறியப்பட்டு இருக்கின்றன.

வைட்டமின் E ஒரு அழற்சி எதிர்ப்பு விளைவைக் கொண்டிருப்பதால், தோல் எரிச்சலைக் குறைப்பதற்காகப் பயன்படுத்தக் கூடியது ஆகும். அது சருமத்துக்கு இதமளிக்கும் விளைவுகளைக் கொண்டிருக்கிறது மற்றும் அது கொலாஜென் உற்பத்தியை அதிகரிக்கவும் கூடியது ஆகும். கொலாஜென் என்பது சருமத்தின் நெகிழ்தன்மையை அதிகரிக்க உதவுகின்ற மற்றும் காயம் ஏற்பட்டதை சரி செய்யும், மற்றும் குணமாக்கும் செயல்முறைகளோடு தொடர்புடைய, முக்கியமான அமைப்புரீதியான புரதம் ஆகும். உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள் உணவுகள், சரும ஆரோக்கியத்தை மிகவும் சிறப்பாக மேம்படுத்துகின்றன. எனவே, அவை நமது உணவுமுறையில் ஒரு முக்கியப் பகுதியாக இடம் பெற வேண்டும். 

வைட்டமின் C மற்றும் வைட்டமின் E ஆகிய இரண்டும் தனித்தனியாக அளிக்கும் விளைவுகளை விட, ஒன்றாக இணைந்து அளிக்கும் விளைவுகள் மிகவும் திறன்வாய்ந்ததாக இருக்கின்றன என ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டு இருக்கிறது. அதனால் தான் இரண்டும் இணைந்த கலவையைக் கொண்ட சருமக் களிம்பு பரிந்துரைக்கப்படுகிறது.

(மேலும் படிக்க: முகப்பரு சிகிச்சை)

முடிகளுக்காக உயிர் வளியேற்ற எதிர்ப்பொருட்கள் - Antioxidants for the hair in Tamil

முடியானது தினசரி அடிப்படையில், சூரியனில் இருந்து வெளிப்படும் புற ஊதாக் கதிர்கள், சுற்றுசூழல் மாசுக்கள், வேதிப்பொருட்கள் மற்றும் புகை போன்ற பல்வேறு வகையான சேதப்படுத்தும் காரணிகளால் பாதிக்கப்படுகின்றது. யு.வி.-ஏ சூரியக் கதிர்கள் உள்மூலக்கூறு சேதாரக் கூறுகளை அதிகரிக்கின்றன, மற்றும் யு.வி.-பி சூரியக் கதிர்கள் முடியில் உள்ள மெலனின் உட்பொருளைக் குறைக்கின்றன. மெலனின் என்பது முடிகள் மற்றும் சருமத்தின் நிறத்துக்குப் பொறுப்பான நிறமி ஆகும். இந்த இரண்டு விளைவுகளும் சேர்ந்து முடி நரைப்பதற்குக் காரணமாகின்றன.

பல்வேறு ஆய்வுகளின் மூலம், உயிர் வளியேற்ற எதிர்ப்பொருட்கள், சூரியனில் இருந்து வெளிப்படும் புற ஊதாக் கதிர்களினால் ஏற்படும் சேதத்தையும், மற்றும் முடி நரைத்தல் அல்லது முடி உதிர்வு போன்ற முதுமை தொடர்பான மாற்றங்களையும், குறைக்க உதவுகின்றன என்பது கண்டறியப்பட்டு இருக்கிறது. மேலும் அவை, முடிகளின் பொலிவையும் மற்றும் தோற்றத்தையும் மேம்படுத்துவதாகவும் கண்டறியப்பட்டு இருக்கிறது. அதனால், உங்கள் உணவு முறையில் உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள் நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்வது, பல்வேறு வழிகளில் நன்மை அளிக்கக் கூடியதாக இருப்பது நிரூபணமாகிறது. 

கண்களுக்காக உயிர் வளியேற்ற எதிர்ப்பொருட்கள் - Antioxidants for the eye in Tamil

முதுமை தொடர்பான கருவிழி சிதைவு என்பது உலகம் முழுதும் ஏற்படும் பார்வை இழப்புக்கான முக்கியமான ஒரு காரணமாக இருக்கிறது. வைட்டமின் ஏ பற்றாக்குறையானது, முதுமை தொடர்பான கருவிழி சிதைவு (ஏ.எம்.டி) ஏற்படும் அபாயத்தை அதிகரிப்பதாக அறியப்படுகிறது. உயிர் வளியேற்ற எதிர்ப்பொருட்களை வைட்டமின்கள் மற்றும் தாதுக்களுடன் அதிக அளவில் எடுத்துக் கொள்வது, ஏ.எம்.டி ஏற்படுவதையும், அதன் காரணமாக ஏற்படும் பார்வை இழப்பையும் தடுக்கக் கூடியது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உயிர் வளியேற்ற எதிர்ப்பொருட்கள், ஏ.எம்.டி ஏற்படும் அபாயத்தை 25% அளவுக்குக் குறைப்பதாகக் கண்டறியப்பட்டு இருக்கிறது. இந்த அபாயத்தினைத் தவிர்க்க, ஒவ்வொரு நாள் உணவு முறையிலும் ஐந்து முறை பழங்கள் மற்றும் காய்கறிகளையும், மற்றும் இரண்டு முறை பருப்புகள் மற்றும் விதைகளையும் எடுத்துக் கொள்வது பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் இது, முதியவர்கள் மத்தியில் ஏற்படுகின்ற பார்வை இழப்புக்கு மற்றொரு காரணியான கண்புரை ஏற்படும் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

மூளைக்காக உயிர் வளியேற்ற எதிர்ப்பொருட்கள் - Antioxidants for the brain in Tamil

உள்மூலக்கூறு சேதாரக் கூறுகளும் உடலின் ஒரு முக்கிய உறுப்பான மூளையைப் பாதிக்கின்றன. வயது அதிகரிக்கின்ற போது உடலில் உள்ள உள்மூலைக்கூறு சேதாரக் கூறுகளின் சதவிகிதமும் படிப்படியாக அதிகரிக்கின்ற காரணத்தால், மனித உடலின் பாதுகாப்பு அமைப்புகள் செயலிழக்கின்றன. இந்த சேதாரக் கூறுகள் மூளையுடன் தீவிரமாக எதிர்வினை புரிந்து, நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் உட்பட, அதன் செயல்பாடுகளை பாதிக்கின்றன.

உயிர் வளியேற்ற நச்சுத்தன்மையை அதிகரிக்கக் கூடிய, உயிர் வளியேற்ற எதிர்ப்பு உணவுகளின் ஊட்டச்சத்து பற்றாக்குறை, குறிப்பாக வைட்டமின் E -யில் ஏற்படும் பற்றாக்குறை, முதுமை அடைந்த நபர்களுக்கு ஏற்படும் ஞாபக மறதி பிரச்சினையுடன் தொடர்புடையதாகக் கண்டறியப்பட்டு உள்ளது. உயிர் வளியேற்ற எதிர்ப்பொருட்கள், இந்த எதிர்வினை வளியேற்ற இனங்களுக்கு எதிரான விளைவுகளைக் கொண்டிருப்பதாகவும், மற்றும் மூளையின் மீது அவை ஏற்படுத்திய சேதார பாதிப்புகளை மறு சீரமைக்கக் கூடியவை எனவும் அறியப்படுகின்றன. இது, முதுமை அடைந்த நபர்களுக்கு ஏற்படும் ஞாபக மறதி பிரச்சினையைக் குறைக்க அல்லது தடுக்க உதவலாம்.

குறிப்பிட்ட உயிர் வளியேற்ற எதிர்ப்பொருட்கள், அல்சைமர் நோய் ஏற்படக் காரணமான மூலக்கூறான பீட்டா-அமிலாய்டு அளவுகளையும் கூடக் குறைப்பதாக அறியப்படுகிறது. எனவே, உயிர் வளியேற்ற எதிர்ப்புப்பொருட்கள் நிறைந்த உணவுகள் எடுத்துக் கொள்ளும் அளவை, குறிப்பாக முதுமை அடையும் பருவங்களில் அதிகரிப்பது அறிவுறுத்தப்படுகிறது.

இதயத்துக்காக உயிர் வளியேற்ற எதிர்ப்பொருட்கள் - Antioxidants for the heart in Tamil

உயிர் வளியேற்ற நச்சுத்தன்மையானது, தமனித் தடிப்பு மற்றும் பிற இதயநாளக் கோளாறுகளுக்கான ஒரு முக்கியமான காரணமாக இருக்கிறது. உயிர் வளியேற்ற எதிர்[ப்பொருட்கள் நிறைந்த உணவுகளைப் போதுமான அளவில் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது, இதயத்துக்கு சேதாரத்தை ஏற்படுத்துகின்ற இந்த நச்சுத்தன்மை ஏற்பட ஒரு காரணமாக உள்ளது என்பது கண்டறியப்பட்டு உள்ளது. வைட்டமின் E மற்றும் வைட்டமின் C ஆகியவற்றை போதுமான அளவு எடுத்துக் கொள்வது இதய இரத்தக்குழாய் நோய் ஏற்படாமல் தடுக்கிறது எனக் கண்டறியப்பட்டு உள்ளது. இருப்பினும், இந்தக் கண்டுபிடிப்புகளுக்கு ஆதரவு அளிக்க அடுத்த கட்ட விரிவான ஆய்வுகள் தேவைப்படுகின்றன. 

முதியவர்களுக்கான உயிர் வளியேற்ற எதிர்ப்பொருட்களின் நன்மைகள் - Antioxidant benefits for the elderly in Tamil

உள்மூலக்கூறு சேதாரக் கூறுகள், செல்கள் மட்டத்தில் சேதாரத்தை, மற்றும் டி.என்.ஏ மாற்றங்களைக் கூட ஏற்படுத்தக் கூடிய திறனைக் கொண்டிருக்கின்றன. உடலில் உள்ள உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள் நொதிகள், உள்மூலக்கூறு சேதாரக் கூறுகளினால் ஏற்படுகின்ற அதிகப்படியான சேதத்தை எதிர்த்துப் போராடுகின்ற வேளையில், முதியவர்களின் உடலில் உள்ள உள்மூலக்கூறு சேதாரக் கூறுகளின் அளவானது அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. 

இது, வயது அதிகரிப்பதன் காரணமாக பாதுகாப்பு நொதிகள் மற்றும் பாதுகாப்பு அமைப்பில் ஏற்படுகின்ற குறைவின் காரணமாக ஏற்படுகிறது. இந்த செயல்முறையை எதிர்த்துப் போராட, உணவு முறையில் உயிர் வளியேற்ற எதிர்ப்பொருட்களை எடுத்துக் கொள்ளும் அளவினை அதிகரிக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது. அது, சுருக்கங்கள் போன்ற முதுமை தொடர்பான, பார்வையில் தெரியக்கூடிய பாதிப்புகளின் மீது ஒரு சாதகமான விளைவை வெளிப்படுத்தக் கூடும்.

உயிர் வளியேற்ற எதிர்ப்பொருட்கள் புற்றுநோயைக் குறைக்கின்றன - Antioxidants reduce cancer in Tamil

உயிர் வளியேற்ற எதிர்ப்பொருட்கள், உள்மூலக்கூறு சேதாரக் கூறுகளினால் ஏற்படும் உயிர் வளியேற்ற நச்சுத்தன்மையைக் குரைக்கின்றன. உள்மூலக்கூறு சேதாரக் கூறுகள் போன்ற எதிர்வினை உயிர் வளியேற்ற இனங்கள், தோல் புற்றுநோய், சிறுநீர்ப்பை புற்றுநோய், மூளைக் கட்டி, கல்லீரல் புற்றுநோய், வாய் புற்றுநோய் மற்றும் இரத்தப் புற்றுநோய் போன்ற பல்வேறு வகை புற்றுநோய்களோடு தொடர்புடைய உயிர் வளியேற்ற நச்சுத்தன்மை ஏற்படக் காரணமாகின்றன. இந்த புற்றுநோய்களின் ஒவ்வொரு வகையும் ஏற்படும் சாத்தியக்கூறுகள் மாறுபட்டவை ஆகும். இருப்பினும், உயிர் வளியேற்ற நச்சுத்தன்மையானது, ஒரு சாதாரணமான செல்லை ஒரு புற்றுநோய் செல்லாக மாற்றும் நடைமுறையுடன் தொடர்புடையதாகவே தோன்றுகிறது. 

உயிர் வளியேற்ற எதிர்ப்பொருட்கள், எதிர்வினை உயிர் வளியேற்ற இனங்களின் அளவுகளைக் குறைக்கின்ற காரணத்தினால், அவை புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதில் ஒரு பங்கு வகிக்கின்றன. வைட்டமின் C மற்றும் வைட்டமின் E போன்ற உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள் வைட்டமின்களின் புற்றுநோய் தடுப்பு விளைவுகள், ஆய்வு சான்றுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டு இருக்கின்றன. இருப்பினும், கலவையான முடிவுகள் பெறப்பட்டு இருக்கின்றன மற்றும் ஒரு தீர்க்கமான முடிவு நிறுவப்பட முடியவில்லை. இருந்த போதிலும், புத்தம் புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள் பொதுவாகவே புற்று நோய் தடுப்பு பண்புகளைக் கொண்டிருப்பதால், அவற்றை உங்கள் உணவுமுறையில் அதிக அளவில் சேர்த்துக் கொள்வது ஒரு நல்ல யோசனை ஆகும்.

எடைக் குறைப்புக்காக உயிர் வளியேற்ற எதிர்ப்பொருட்கள் - Antioxidants for weight loss in Tamil

உடல் பருமன், இந்திய மக்கள் தொகையில் 5% அளவு மக்களைப் பாதித்திருக்கின்ற ஒரு மிகப் பெரிய பிரச்சினை ஆகும். உடல் பருமன் ஏற்படுத்தும் முக்கியமான அபாய காரணிகளாக ஆரோக்கியமற்ற உணவுமுறை, மற்றும் உடல் உழைப்பு இன்மை ஆகியவை உள்ளன. உடல் பருமன் ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கின்ற அதே வேளையில், அதுவே பல்வேறு இதயநாளக் கோளாறுகள், மற்றும் நீரிழிவு நோயை ஏற்படுத்தும், ஒரு நன்கு அறியப்பட்ட அபாய காரணியாகவும் இருக்கிறது.

வைட்டமின் C செறிவான உணவுகளைப் போன்ற குறிப்பிட்ட சில உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள் உணவுகள், கொழுப்புகளை வளர்சிதை மாற்றம் செய்யும் செயல்முறையில் உதவுகின்ற காரணத்தினால், அவை உடல் எடைப் பராமரிப்பில் திறன்மிக்கதாக இருப்பதாகக் கண்டறியப்பட்டு உள்ளது. மேலும் இந்த உணவுகள், உடல் எடைக் குறைப்பு செயல்முறையின் வேகத்தை அதிகரிக்கின்ற வகையில் வளர்சிதை மாற்ற செயல்முறையை மேம்படுத்தவும் உதவுகின்றன.

வைட்டமின் C செறிவான உணவுகள் தவிர, வைட்டமின் E, பசுமைத் தேநீர், இலவங்கப்பட்டை போன்ற மற்ற பல்வேறு உயிர் வளியேற்ற எதிர்ப்பொருட்களின் பங்களிப்பும், உடல் எடைக் குறைப்பில் திறன்மிக்கதாக உள்ளன. ஒரு சீரான உணவு மற்றும் போதுமான அளவில் உடல் செயல்பாடுகளுடன் உங்கள் உணவுமுறையில் இந்த உணவுகளை சேர்த்துக் கொள்வது, விரும்பிய எடைக் குறைப்பு இலக்குகளை அடைய உதவக் கூடியதாக இருக்கலாம்.

(மேலும் படிக்க: எடைக்குறைப்பு உணவுமுறை விளக்கப்படம்)

குறிப்பிட்ட வகை தேநீர்கள், உயிர் வளியேற்ற எதிர்ப்பு பண்புகளை அதிக அளவில் கொண்டிருக்கும் ஃபுளோவோனாய்டுகளைக் கொண்டிருக்கின்றன. இந்த வகைத் தேநீர்களைத் தொடர்ந்து அருந்தி வருவது, உள்மூலக்கூறு சேதாரக் கூறுகளினால் ஏற்படுகின்ற உயிர் வளியேற்ற நச்சுத்தன்மையைக் குறைக்கின்றன. வெள்ளை தேநீர், பசுமைத் தேநீர், கருப்பு மற்றும் ஊலாங் தேநீர் என அழைக்கப்படும் நான்கு வகையான தேநீர்கள் மிகவும் நன்மை அளிக்கக் கூடியவை ஆகும்.

வெள்ளைத் தேநீர், புதிய இளமையான தேயிலைகளைக் கொண்டு தயாரிக்கப்படுகின்ற வேளையில், ஊலாங் மற்றும் கருப்பு தேநீர்கள், சிறிதளவு பக்குவப்படுத்தப்பட்டு வெப்பம் மற்றும் ஒளியில் வைக்கப்படுகின்றன. பசுமைத் தேநீரானது, சார்பு-உயிர் வளியேற்றப் பொருட்கள் மற்றும் உயிர் வளியேற்ற எதிர்ப்பொருட்களைக் கொண்டிருக்கிறது, மற்றும் உள்மூலக்கூறு சேதாரக் கூறுகளுக்கு எதிரான ஒரு பாதுகாக்கும் பண்பைக் கொண்டிருக்கக் கூடும்.

பசுமைத் தேநீர் தயாரிப்பதற்கு, கேட்டசின்களின் நச்சுத்தன்மை ஏற்படுவதற்குள் தேயிலைகள் விரைவாகக் கொதிக்க வைக்கப்பட, அல்லது சூடு படுத்தப்பட வேண்டும். சூடான கொதிக்கின்ற தண்ணீரில் 1 தேக்கரண்டி தேயிலையை மட்டும் நீங்கள் போட்டு, அதை வடிகட்டி அருந்துவதற்கு முன்னர், இரண்டு மூன்று நிமிடங்களுக்கு கொதிக்க விட வேண்டும்.

Tulsi Drops
₹286  ₹320  10% OFF
BUY NOW

உயிர் வளியேற்ற எதிர்பொருட்களின் நன்மைகள் ஏராளமாக இருக்கின்ற அதே வேளையில், அதிக அளவில் எடுத்துக் கொள்ளப்படும் பொழுது, அல்லது செயற்கையான பிற்சேர்க்கை பொருட்கள் மூலமாக எடுத்துக் கொள்ளப்படும் பொழுது, அவை தீங்கு விளைவிக்கவும் கூடும். உங்கள் உணவுமுறையில் எந்த ஒரு மாற்றங்களை செய்வதற்கு முன்னர், அல்லது பிற்சேர்க்கைப் பொருட்களை சேர்த்துக் கொள்ளும் முன்னர், உங்கள் மருத்துவரிடம் ஆலோசிப்பது அறிவுறுத்தப்படுகிறது. 

எடுத்துக் கொள்ளப்பட்ட உயிர் வளியேற்ற எதிர்ப்பொருளினைப் பொறுத்து, பக்க விளைவுகள் மாறுபட்டதாக இருக்கும். பின்வரும் பக்க விளைவுகளில் ஏதேனும் உங்களுக்கு ஏற்பட்டால், ஒரு மருத்துவரை ஆலோசிக்குமாறும் நீங்கள் அறிவுறுத்தப்படுகிறீர்கள்:


Medicines / Products that contain Antioxidants

மேற்கோள்கள்

  1. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Antioxidants
  2. Ralph M Trüeb. Oxidative Stress in Ageing of Hair. Int J Trichology. 2009 Jan-Jun; 1(1): 6–14. PMID: 20805969
  3. V. Lobo, A. Patil, A. Phatak, N. Chandra. Free radicals, antioxidants and functional foods: Impact on human health. Pharmacogn Rev. 2010 Jul-Dec; 4(8): 118–126. PMID: 22228951
  4. Better health channel. Department of Health and Human Services [internet]. State government of Victoria; Antioxidants
  5. Masaki H. Role of antioxidants in the skin: anti-aging effects.. J Dermatol Sci. 2010 May;58(2):85-90. PMID: 20399614
  6. Ruta Ganceviciene et al. Skin anti-aging strategies. Dermatoendocrinol. 2012 Jul 1; 4(3): 308–319. PMID: 23467476
  7. Silke K. Schagen, Vasiliki A. Zampeli, Evgenia Makrantonaki, Christos C. Zouboulis. Discovering the link between nutrition and skin aging. Dermatoendocrinol. 2012 Jul 1; 4(3): 298–307. PMID: 23467449
  8. Ralph M Trüeb. Pharmacologic interventions in aging hair. Clin Interv Aging. 2006 Jun; 1(2): 121–129. PMID: 18044109
  9. Fernández E, Martínez-Teipel B, Armengol R, Barba C, Coderch L. Efficacy of antioxidants in human hair. J Photochem Photobiol B. 2012 Dec 5;117:146-56. PMID: 23123594
  10. BE Prie et al. Oxidative stress in androgenetic alopecia. J Med Life. 2016 Jan-Mar; 9(1): 79–83. PMID: 27974920
  11. American Optometric Association, St. Louis. [Internet] Antioxidants & Age-Related Eye Disease
  12. Christen WG Jr. Antioxidants and eye disease. Am J Med. 1994 Sep 26;97(3A):14S-17S; discussion 22S-28S. PMID: 8085581
  13. Fernando Gómez-Pinilla. Brain foods: the effects of nutrients on brain function. Nat Rev Neurosci. 2008 Jul; 9(7): 568–578. PMID: 18568016
  14. Jane A. Leopold. Antioxidants and Coronary Artery Disease: From Pathophysiology to Preventive Therapy. Coron Artery Dis. 2015 Mar; 26(2): 176–183. PMID: 25369999
  15. Am Fam Physician. 1999 Sep 1;60(3):895-902. Antioxidant Vitamins and the Prevention of Coronary Heart Disease. American Academy of Family Physicians. [Internet]
  16. Simone Reuter, Subash C. Gupta, Madan M. Chaturvedi, Bharat B. Aggarwal. Oxidative stress, inflammation, and cancer: How are they linked? Free Radic Biol Med. 2010 Dec 1; 49(11): 1603–1616. PMID: 20840865
  17. Terry D. Oberley. Oxidative Damage and Cancer. Am J Pathol. 2002 Feb; 160(2): 403–408. PMID: 11839558
  18. Patterson RE, White E, Kristal AR, Neuhouser ML, Potter JD. Vitamin supplements and cancer risk: the epidemiologic evidence. Cancer Causes Control. 1997 Sep;8(5):786-802. PMID: 9328202
  19. National Cancer Institute [Internet]. Bethesda (MD): U.S. Department of Health and Human Services; Antioxidants and Cancer Prevention
  20. Abdali D, Samson SE, Grover AK. How effective are antioxidant supplements in obesity and diabetes? Med Princ Pract. 2015;24(3):201-15. PMID: 25791371
  21. Better health channel. Department of Health and Human Services [internet]. State government of Victoria; Tea leaves and health
  22. SARAH C. FORESTER, JOSHUA D. LAMBERT. Antioxidant effects of green tea. Mol Nutr Food Res. 2011 Jun; 55(6): 844–854. PMID: 21538850
Read on app