உலகம் முழுவதும் உள்ள பல பெண்களுக்கு, கர்ப்பம் என்பது உலகின் சிறந்த உணர்ச்சிகளில் ஒன்றாகும், அவர்கள் கருத்தரித்த அந்த நிமிடத்தில் இருந்து, அவர்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ள விஷயங்களில் ஒன்று, கர்பத்தில் இருப்பது ஒரு பெண் குழந்தையா அல்லது ஆண் குழந்தையா என்பதே ஆகும்! இருப்பினும், பெற்றோர்களுக்கு, ஒவ்வொரு குழந்தையும் பாலினத்தை பொருட்படுத்தாமல் கடவுளிடமிருந்து வந்த பரிசு ஆகும். ஆனால், தங்கள் குழந்தையின் நாற்றங்காலில் ஊற்றுவதை ஆரம்பிக்க விரும்பும் பலருக்கு, அந்த ஒரு ஒன்பது மாத கால காத்திருப்பு நூற்றாண்டுகள் போல் உணரப்படுகிறது.

இந்தியாவில், கர்ப்ப காலத்தில் குழந்தையின் பாலினத்தை தெரியபடுத்துவது சட்டவிரோதமானது, மேலும் அது ஒரு தண்டிக்கக்கூடிய குற்றமாகும். பலர், கருவின் பாலினத்தை அடையாளம் காண்பதற்காக பாலினம் அறியும் பரிசோதனையை பயன்படுத்துகின்றனர், இது பல பெண் ஃபெடீசைட் களுக்கு (தாயின் வயிற்றிலேயே பெண் குழந்தைகளை கொல்வது) வழி வகுக்கிறது. பாலின தேர்ந்தெடுப்பது தொடர்ச்சியாக நடைமுறையில் இருப்பதால் இந்தியாவில் பாலின விகிதம் பாதிக்கப்படுகிறது (ஆயிரம் ஆண்களுக்குக்கான பெண்களின் எண்ணிக்கை). 

ப்ரீ-கன்சம்ஷன் அண்ட் ப்ரீ-நடல் டையக்னோஸ்டிக் டெக்னிக்ஸ் (PCPNDT) சட்டத்தின் படி, பாலின உறுதிப்பாடு மற்றும் தேர்வுக்கான தண்டனை; ரூபாய் ஐம்பது ஆயிரம் அபராதத்துடன் மூன்று வருட சிறைத்தண்டனை அல்லது ஒரு லட்ச ரூபாய் வரை நீட்டிக்கப்பட்ட அபராதத்துடன் ஐந்து வருட சிறைதண்டனை ஆகும். இது அவர்களின் குழந்தைகளின் பாலினத்தை அறிய முயற்சித்தவர்களுக்கு மட்டுமல்லாமல், பாலினத்தை அறியவதற்காக பரிசோதனை செய்யும் டாக்டருக்கும் பொருந்தும். எனவே, ஒரு பொறுப்புள்ள குடிமகனாகவும், பெற்றோராகவும், குழந்தை பிறக்க போவதாக நீங்கள் எதிர்பார்க்கும் அந்த பெரும் கட்டத்தில் பெற்றோருக்குரிய அந்த பெரும் ஆச்சரியத்தை அனுபவிப்பது முக்கியம். 

கர்ப்பம் தரித்த செய்தி குடும்பம் மற்றும் அக்கம் பக்கம் முழுவதும் ஒரு காட்டுத்தீ போல் பரவும் என்பதை நாம் எல்லோரும் பார்த்திருப்போம். நீங்கள் சுமந்து கொண்டிருப்பது ஒரு ஆண் குழந்தையா அல்லது பெண்ணா என்பதை பலர் முன்கூட்டியே கணிக்க முயற்சி செய்வார்கள். இருப்பினும், இந்த கணிப்புகளுக்கு விஞ்ஞான ரீதியிலான எந்தவொரு ஆதாரமும் இல்லை. குழந்தையின் பாலினத்தைப் பற்றி மக்களின் ஆர்வம் மற்றும் அவர்களின் பாரம்பரிய நம்பிக்கை ஆகியவற்றை சமாளிக்க மட்டுமே இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு ஆண் குழந்தையுடன் கர்ப்பமாக இருக்கிறீர்களா என்பதை தீர்மானிக்க பல்வேறு கலாச்சாரங்களில் தொடர்ந்து பின்பற்றப்படும் ஒரு சில பிரபலமான, தொன்மையான கட்டு கதைகள்  இங்கு விவாதிக்கப்படுகிறது.

  1. ஒரு ஆண் குழந்தையாக இருக்கும் பட்சத்தில் குறைவான ஆழ்ந்த காலை நோய் (மார்னிங் சிக்னஸ்) - Less intense morning sickness in case of a baby boy in Tamil
  2. கருவுற்றிருக்கும் தாயின் சருமம் பளபளப்பாக இருந்தால், அந்த கர்பத்தில் இருப்பது ஒரு ஆண் குழந்தையா? - Glowing skin, is it a baby boy? in Tamil
  3. ஆண் கருவிற்கு வேகமான இதய துடிப்பு உண்டு - Boy foetus have a faster heart beat in Tamil
  4. குறைந்த குழந்தை பம்ப் நிலை கரு ஒரு ஆண் குழந்தையாக இருப்பதற்கான ஒரு அறிகுறியாகும் - Low baby bump position is a sign that you're having a boy in Tamil
  5. ஸேவரி உணவு அதிகம் சாப்பிடுவது ஒரு ஆண் குழந்தைக்கான அறிகுறியாகும் - Eating more of savory food is a symptom of having a boy in Tamil
  6. இடது பக்க தூக்க நிலை ஒரு ஆண் சிசுவின் அறிகுறி ஆகும் - Left sleep position is a boy fetus symptom in Tamil
  7. கர்ப்பிணி பெண்களுக்கு முடி நீளமாக இருப்பதற்கு, அது ஒரு ஆண் குழந்தை என்று அர்த்தமா? - Long hair in pregnant women, does it mean it's a baby boy? in Tamil
  8. ஒரு ஆண் குழந்தை வயிற்றில் இருப்பது உங்கள் சருமத்தை வறண்டு போக செய்கிறது - Having a baby boy gives you a dry skin in Tamil
  9. எடை அதிகரிக்காமல் இருப்பது ஒரு ஆண் குழந்தையுடன் கர்பம் தரித்திருப்பதற்கான ஒரு அறிகுறி ஆகும் - No weight gain is a symptom of conceiving baby boy in Tamil
  10. தீவிரமான பசி ஒரு ஆண் குழந்தையை எதிர்பார்க்க கூடிய ஒரு அறிகுறியாகும் - Intense cravings are a symptom of expecting a baby boy in Tamil
  11. குழந்தையின் கர்ப்பத்தின் அறிகுறிகளில் மார்பக வளர்ச்சியும் அடங்கும் - Signs of baby boy pregnancy include breast growth in Tamil
  12. கர்ப்ப கோடு அல்லது லினியா நிக்ரா என்பது ஆண் குழந்தைக்கான ஒரு அறிகுறி ஆகும் - Pregnancy line or linea nigra is a symptom of baby boy in Tamil
  13. ஆண் குழந்தைக்கான கர்ப கால அறிகுறிகள் ஜில்லென்ற கைகள் மற்றும் கால்களை உள்ளடக்கியது - Baby boy in womb symptoms include cold hands and feet in Tamil
  14. கர்ப்ப காலத்தில் முகப்பரு, ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா? - Acne during pregnancy, baby boy or girl? in Tamil
  15. சிறுநீரின் நிறம் ஆண் குழந்தைக்கான ஒரு அறிகுறி ஆகும் - Urine colour is a sign of a baby boy in Tamil

கட்டுக்கதை

காலையில் உடம்பு சரியில்லாதவாரான உணர்வு கர்ப்ப காலத்தில் மிகவும் பொதுவான ஒரு அறிகுறியாகும். ஒரு பெண் குழந்தையை நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தால், நீங்கள் அதை அடிக்கடி அனுபவிப்பீர்கள், மேலும் அதன் தீவிரம் அதிகமாக இருக்கும் என்று பலர் நம்புகிறார்கள். மறுபுறம், அது ஒரு ஆண் குழந்தையாக இருந்தால் அந்த தொந்தரவு குறைவாக இருக்கும் என்று நம்பபடுகிறது.

உண்மை

ஒவ்வொரு பெண்ணும் மற்றும் ஒவ்வொரு கர்ப்பமும் வேறுபட்டது என்று டாக்டர்கள் நம்புகிறார்கள். ஒரு ஆய்வு படி, கர்ப்பத்தில் "குமட்டல் மற்றும் வாந்தி ", கொழுப்பு நிறைந்த உணவு, தாயின் மரபியல், மற்றும் நச்சு உணவுகளில் இருந்து கருவை பாதுகாப்பதற்கான ஒரு தகவமைப்பு நுட்பம் போன்ற காரணங்களால் ஏற்படுகிறது. மார்னிங் சிக்னஸ் மற்றும் குழந்தையின் பாலினம் ஆகியவற்றிற்கு இடையில் தொடர்பு இருக்கிறது என்பதற்கு அதிகமான அறிவியல் சான்றுகள் இல்லை.

Women Health Supplements
₹719  ₹799  10% OFF
BUY NOW

கட்டுக்கதை

சிலர் கருவில் இருப்பது ஒரு பெண் குழந்தை என்று நினைத்தால், அந்த தாய் தன் மகளுக்கு தன் அழகு முழுவதையும் தருகிறார், அதனால் கர்ப்ப காலம் முழுவதிலும் தோல் பிரச்சனையை பெற்று அவரது சறுமம் பொலிவு இழந்து தோற்றமளிக்க கூடும் என்று நம்பபடுகிறது. எனினும், உங்கள் பம்ப் ஒரு ஆண் குழந்தையின் காரணமானது என்றால், வழக்கமாக அவ்வாறு இல்லை.

(மேலும் வாசிக்க - தோல் பிரச்சனைகளுக்கான சிகிச்சை)

உண்மை

ஹார்மோன்களின் ஏற்ற இறக்கங்களே இந்த தோல் மாற்றங்களுக்குப் பின்னால் இருக்கும் ஒரு முக்கிய குற்றவாளியாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இதற்கும் குழந்தைகளின் பாலினத்திற்கும் சம்மந்தம் இருக்கிறது என்பது இன்னும் நிரூபிக்கப்படவில்லை.

(மேலும் வாசிக்க - ஹார்மோன் சமநிலையின்மைக்கான சிகிச்சை)

கட்டுக்கதை

தாயின் வயிற்றில் வளரும் குழந்தையின் இதயத்துடிப்பு மற்றும் அதன் பாலினத்துடனான தொடர்பைப் பற்றி ஒரு பழமையான நம்பிக்கை இருக்கிறது. ஒரு பெண் குழந்தையுடன் ஒப்பிடுகையில், ஒரு ஆண் குழந்தையின் இதயம் வேகமாக துடிக்கிறது என்றும் நம்பிக்கை அந்த சிசுவின் பாலினம் என்னவென்று சொல்கிறது என்று சில மக்கள் கூறுகின்றனர்.

உண்மை

ப்ரீனாடல் மெடிசின் பத்திரிக்கையின் படி, கருவின் இதயம் கர்ப்பத்தின் நான்காவது வாரத்தில் உருவாகி பிறகு துடிக்கத் துவங்குகிறது. கருவின் இதய துடிப்பின் விகிதம் ஐந்தாம் வாரத்தில் 110 பிபிஎம் (ஒரு நிமிடத்திற்கு துடிக்கிறது) ஆக இருக்கும், ஒன்பதாவது வாரத்தில் 170 ஆக இருக்கும், பின்னர் 13 வது வாரத்தில் படிப்படியாக 150 பிபிஎம் வரை குறையும். எனவே, கருவின் இதயத்துடிப்புகளில் ஏற்படும் மாற்றமானது, குழந்தையின் உடலை வளர செய்ய தேவையான இதயத்தில் ஏற்படும் பல மாற்றங்களைக் காரணமாக கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

கட்டுக்கதை

குழந்தையின் பாலினம் மற்றும் கருப்பையில் குழந்தை சுமக்கப்படும் அளவையும் பற்றிய மற்றொரு பிரபலமான நம்பிக்கை உள்ளது. தாயின் வயிறு கீழே இருந்தது என்றால் அது ஒரு ஆண் குழந்தை மேலும் தாயின் வயிறு மேலேயே இருந்தது என்றால் அது ஒரு பெண் குழந்தை என்று மக்கள் நம்பிகின்றனர்.

உண்மை

"நஞ்சுக்கொடி இருக்கும் இடம் மற்றும் அதனால் கருப்பையில் கருவின் நிலை நிர்ணயிக்கபடுதல்" என்பது பற்றிய ஒரு ஆய்வில், நஞ்சுக்கொடி கருப்பையுடன் இணைந்திருக்கும் நிலை, கருப்பையில் கருவின் நிலையை தீர்மானிக்கிறது என்று தெரிவிக்கிறது. எப்படி வயிற்றில் குழந்தை சுமக்கபடுகிறது என்பது பாலினத்திற்கான ஒரு அடையாளம் அல்ல.

myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Prajnas Fertility Booster by using 100% original and pure herbs of Ayurveda. This ayurvedic medicine has been recommended by our doctors for lakhs of male and female infertility problems with good results.
Fertility Booster
₹892  ₹999  10% OFF
BUY NOW

கட்டுக்கதை

உப்பான மற்றும் காரமான உணவுகளை விரும்பி சாப்பிடுகிற பெண்கள் பெரும்பாலும் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுப்பார்கள் என்று கூறப்படுகிறது, அதே நேரத்தில் சர்க்கரை மற்றும் இனிப்பு உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்கள், ஒரு பெண் குழந்தையை எதிர்பார்க்கலாம் என்று நம்பப்படுகிறது.

உண்மை

பெண்கள் அதிகம் சாப்பிடும் உணவுகள் அவர்களின் உணவு விருப்பம் மற்றும் தேர்வுகள் சம்பந்தப்பட்டதாக இருக்கும் என ஆராய்ச்சி கூறுகிறது. பல்வேறு விதமான உணவிற்கான பெண்களின் தேர்வு, அவர்களின் உணவு பழக்கவழக்கங்களை முற்றிலும் சார்ந்ததாக இருக்கிறது, மேலும் அது கருவின் பாலினத்தை பொருத்தது அல்ல.

கட்டுக்கதை

பெரும்பாலும் இடது பக்கத்தில் தூங்கும் பெண்கள் ஒரு ஆண் குழந்தையை சுமக்கிறார்கள் என நம்பப்படுகிறது, அதே நேரத்தில் ஒரு பெண் குழந்தையை சுமப்பவர்கள் தங்கள் வலதுபக்கமாக தூங்க விரும்புவார்கள்.

உண்மை

மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆய்வுகள், இடது பக்கமாக தூங்குவது மிகவும் வசதியாக இருக்கிறது. மேலும் அதற்கு கருவின் பாலினத்துடன் எந்த தொடர்பும் விஞ்ஞான அடிப்படையில் இல்லை என காட்டுகின்றன.

கட்டுக்கதை

கர்ப்பிணி பெண்களில் முடி வளர்ச்சிக்கு மற்றொரு மூட நம்பிக்கை உள்ளது, இது மக்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது. கர்ப்பிணிப் பெண்ணின் உச்சந்தலையின் கூந்தல் வளர்ந்து, பளபளப்பான தோற்றம் ஏற்படுவது, அவள் வயிற்றில் ஒரு ஆண் சிசுவை அவள் சுமந்து கொண்டு இருப்பதற்கான ஒரு அறிகுறியாகும்.

உண்மை

"மகளிர் தோல் நோய் பற்றிய சர்வதேச பத்திரிகை" படி, கர்ப்பகாலத்தின் போது, மயிர்க்கால்கள் அனஜென் (மாதத்திற்கு ஒரு சென்டிமீட்டர் வரை வளரும் வகையில் சுறுசுறுப்பான முடி வளர்ச்சியின் ஒரு கட்டம்) நிலையிலேயே  இருக்கும். குழந்தையின் பாலினத்துடனான அதன் தொடர்பு இன்னும் ஒரு மர்மமாகவே உள்ளது.

Ashokarishta
₹359  ₹400  10% OFF
BUY NOW

கட்டுக்கதை

கர்ப காலத்தில் வறண்ட சறுமத்தை கொண்ட ஒரு பெண் தன் வயிற்றில் ஒரு ஆண் குழந்தையை வைத்திருப்பார் என்பது ஒரு பொதுவான நம்பிக்கை ஆகும்.

உண்மை

பெண்களின் ஆரோக்கியத்திற்கான சர்வதேச பத்திரிகை படி, கர்ப்ப காலத்தில், தோல் திசு விரைவான வளர்ச்சி மற்றும் நீட்சிக்கு உட்படுகிறது. இது தோல் சுரப்பிகள் மூலம் எண்ணெய் உற்பத்தி குறைப்புக்கு வழிவகுக்கிறது. இதன் விளைவாக, அந்தச் சருமம் வறண்டு போகிறது.

கட்டுக்கதை

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு எடை அதிகரிப்பது வழக்கமாகவே உள்ளது. தொடை, இடுப்பு மற்றும் முகம் ஆகிய பகுதிகளில் எடை அதிகரிக்கும் ஒரு பெண்ணுக்கு பெண் குழந்தை பிறக்கும் என்றும், அதே சமயம் வயிற்றில் மட்டுமே எடை அதிகரிக்கும் ஒரு பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்றும் பல தலைமுறையாக நம்பிக்கை இருந்து வருகிறது. 

உண்மை

பல்வேறு பெண்களுக்கு உடலில் உள்ள கொழுப்பு செல்கள் படியும் இடங்களில் வேறுபட்ட தன்மையும், உடலின் வளர்சிதை மாற்றத்தில் ஒரு வித்தியாசமும் இருக்கிறது என்பதே விஞ்ஞான உண்மை. சில பெண்களுக்கு தொடை, இடுப்பு, வயிறு, மற்றும் முகத்தில் அதிகபடியாக கொழுப்பு செல்கள் இருக்கலாம், அதே நேரத்தில் மற்றவர்களுடைய உடலில் கொழுப்பு செல்கள்  சமமாக சென்று படியலாம். மேலும், கர்ப்ப காலத்தில் சுறுசுறுப்பாக வேலைகளில் ஈடுபடுகின்ற பெண்களும், அதிக உணவு உட்கொள்ளாமல் இருக்கும் பெண்களும் மற்றவர்களை விட குறைவாகவே எடை அதிகரிக்கலாம். உணவில் மிகவும் அதிக அளவு சர்க்கரை அல்லது உப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால், தாயின் உடலின் சில பகுதிகளில் நீர் கோர்த்து கொண்டு உடல் எடை அதிகரிக்கலாம். கர்ப்ப காலத்தில் உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு பொறுப்பான தைராய்டு ஹார்மோன்களின் அளவு குறையும் போது மேலும் எடை அதிகரிக்கும்.

(மேலும் வாசிக்க - தைராய்டு பிரச்சினைகள்)

கட்டுக்கதை

கர்ப்ப காலத்தில் உண்ணப்படும் உணவு என்பது மக்களிடையே மிகவும் பேசப்படும் ஒரு விஷயம் ஆகும். கர்ப்ப காலத்தில் அதிகமாக உணவு பசி கொண்ட பெண்கள் கர்ப்பத்தில் ஒரு ஆண் குழந்தையை கொண்டிருக்கலாம் என்பது இது சம்பந்தமான ஒரு பாரம்பரிய நம்பிக்கை ஆகும்.

உண்மை

"ஊறுகாய் மற்றும் கிரீம்! ஆய்வின் படி, கர்ப்பத்தில் உணவு முறைகள்: கூற முடியாதது, பூர்வாங்க ஆதாரங்கள் மற்றும் எதிர்கால ஆராய்ச்சிக்கான திசைகள் ", கர்ப்பிணிப் பெண்கள் அதிகபடியாக சாப்பிடஆசைபடுவது மிகவும் பொதுவானவை. இருப்பினும், கர்ப்பிணிப் பெண்களுக்கு இத்தகைய அனுபவம் எதுவும் இல்லாத சூழல்களும் இருக்கின்றன. உணவு தாகங்களுக்கான முக்கிய காரணம் ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள், கர்ப்பிணிப் தாய் மற்றும் கருவின் ஊட்டச்சத்து தேவைகள், கருவிற்கு நச்சான பொருட்களை அகற்றுவதற்கான ஒரு தூண்டுதல், மற்றும் கலாச்சார நெறிகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. இதுவரை, குழந்தையின் பாலினத்திற்கும் உணவு தாகத்திற்கும் இடையேயான தொடர்புக்கு ஒரு திடமான அறிவியல் ஆதாரம் காணப்படவில்லை.

கட்டுக்கதை

கர்ப்பத்தை பற்றிய கட்டுக்கதைகளின் பட்டியலும் கர்ப்ப காலத்தில் மார்பகங்களின் வளர்ச்சியில் வித்தியாசம் உள்ளது எனக் கூறுகிறது. ஒரு மார்பகம் மற்றொன்றை விட அளவில் பெரியதாக வளர்கிறது. இதை பொருத்து கர்பத்தில் இருக்கும் சிசு ஆணா அல்லது பெண்ணா என்பதனை ஊகிக்க முடியும். வலது மார்பகம் இடதுபுறத்தை விட பெரியதாக வளர்ந்துவிட்டால், அது ஒரு ஆண் குழந்தையின் அறிகுறியாகும் என நம்பப்படுகிறது.

(மேலும் வாசிக்க - மார்பக வலி ஏற்படுவதற்கான காரணங்கள்)

உண்மை

கர்ப்ப காலத்தில் மார்பக வளர்ச்சி ஒவ்வொரு மார்பிலும் வேறுபடுகிறது, மேலும் அது ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் திசுக்களின் கட்டமைப்பு மற்றும் வரிசையை சார்ந்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். கர்ப்ப காலத்தில், மார்பக சுரப்பிகள் ஹார்மோன்கள் மற்றும் மரபணு காரணிகளின் தலையீட்டின் கீழ் வளரும். கர்ப்பிணித் தாயின் உடலை பாலூட்டுவதற்கு தயார் செய்வதற்கு இது ஒரு இயற்கையான உடல் செயல்முறை ஆகும். இரண்டு தனிப்பட்ட மார்பகங்களின் வளர்ச்சியிலும் கணிசமான மாறுபாடுகள் இருக்கலாம்.  அதுவே மார்பகங்கள் அளவில் வேறுபட்டதாக இருக்க வழிவகுக்கின்றன. கர்ப்பிணி பெண்களில் மார்பக வளர்ச்சியால் குழந்தையின் பாலினம் தீர்மானிக்கப்பட 

கட்டுக்கதை

குழந்தை பம்ப் ன் மையத்தில் ஒரு இருண்ட கோடு இருப்பது, ஒரு ஆண் குழந்தையை கொண்டிருப்பதற்கான அறிகுறி என்பது அடிக்கடி கூறப்படும் ஒரு கதை ஆகும்.

உண்மை

மருத்துவ தேசிய சங்க இதழின் படி, நிக்ரா என்பது கர்ப்ப காலத்தில் ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் காரணமாக ஏற்படக்கூடிய குழந்தை பம்ப் ன் நடுப்பகுதியிலான ஒரு மெல்லிய கருத்த கோடு ஆகும். இது கர்ப்பம் தொடர்பான ஒரு சாதாரண அறிகுறி ஆகும், எனினும், இந்த அனுபவம் அனைத்து பெண்களுக்கும் ஏற்படுவது இல்லை.

(மேலும் வாசிக்க: பிக்மென்டேஷன்-னுக்கான வீட்டு வைத்தியம்)

கட்டுக்கதை

பம்ப் ல் ஒரு ஆண் குழந்தை இருப்பது அந்த கர்ப்பிணி தாயின் கைகள் மற்றும் கால்களை ஜில்லென்று ஆக செய்கிறது. இது நிறைய கலாச்சாரங்களில் உண்மை என்று பொதுவாக நம்பப்படுகிற கட்டுக்கதைகளில் ஒன்று ஆகும். கர்பத்தில் ஒரு பெண் குழந்தை இருக்கும் போது, அந்த தாய்க்கு இந்த அறிகுறிகள் ஏற்படாது.

உண்மை

ஆராய்ச்சி ஆய்வுகள் படி, கைகள் மற்றும் கால்களில் குளிர்ந்த உணர்வு இரத்த ஓட்டம் குறைவதால் ஏற்படுகிறது. கர்ப்ப காலத்தில் சில லேசான பயிற்சிகளை செய்வது பொதுவாக இந்த அறிகுறியை விடுவிக்கிறது.

கட்டுக்கதை

முக பருக்கள் கர்ப்ப காலத்தில் ஏற்படுவது பல பெண்கள் அனுபவிக்கும் இன்னொரு அறிகுறியாகும். பல மக்ககள் கர்ப காலத்தில் முக பருக்கள் தோன்றினால், கர்பத்தில் பெண் குழந்தை இருக்கிறது என நம்புகிறார்கள்.

உண்மை

"மகளிர் தோல் நோய் சர்வதேச பத்திரிகை" படி, செபாசியஸ் சுரப்பிகளின் (எண்ணெய் சுரப்பிகள்) செயல்பாடு அதிகரிப்பதே பெண்களின் கர்ப்ப காலத்தில் அவர்களது தோல் பளபளப்பாக இருப்பதற்கான காரணம் ஆகும். எனினும், பல பெண்கள் இந்த சுரப்பியின் அதிகப்படியான ஒரு செயல்திறன் காரணமாக முகப்பருவால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். பருக்கள் மற்றும் கருவின் பாலினத்திற்கும் இடையேயான தொடர்புக்கு எந்த ஆதாரமும் இல்லை. முகப்பரு பிரச்சனைக்கு உங்கள் மருத்துவரை ஆலோசிக்கவும், மேலும் உங்கள் முகத்தை சுத்தமாக வைத்திருக்கவும்.

கட்டுக்கதை

குழந்தையின் பாலினத்தை பொறுத்து சிறுநீரின் நிறம் மாறுகிறது என்று மற்றொரு பிரபலமான மூட நம்பிக்கை உள்ளது. ஒரு பெண் இருண்ட நிறத்தில் சிறுநீர் கழித்தால், அவளது கர்பத்தில் ஆண் சிசு இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று மக்கள் சொல்கிறார்கள். எனினும், சிறுநீர் வெளிர் நிறத்தில் இருந்தால், அது தாயின் வயிற்றில் ஒரு பெண் குழந்தை இருப்பதற்கான ஒரு அறிகுறியாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

உண்மை

2017 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் படி, "கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களில் சிறுநீரின் நிறம் சிறுநீர் செறிவினை காட்டுகிறது ". கர்ப்பத்தின் போது சிறுநீரின் நிறத்தில் ஏற்படும் மாற்றங்கள் அந்த பெண் குடிக்கும் தண்ணீரின் அளவு, ஹார்மோன் மாற்றங்கள், சிறுநீரில் புரதங்களின் வெளியேற்றம், போன்ற காரணங்களால் இருக்கலாம். எனவே, கர்ப்ப காலத்தில் குறைவான தண்ணீரை உட்கொள்ளும் ஒரு பெண்ணில் சிறுநீரில் ஹார்மோன்களின் அல்லது புரதங்களின் செறிவானது அதிக அளவில் இருக்கும். இதனால் அந்த பெண்ணின் சிறுநீரின் நிறம் இருண்டதாக இருக்கும். குழந்தையின் பாலினத்துடனான அதன் தொடர்பு இன்னும் அறியப்படவில்லை.

மேற்கோள்கள்

  1. Noel M. Lee, Sumona Saha. Nausea and Vomiting of Pregnancy. Gastroenterol Clin North Am. 2011 Jun; 40(2): 309–vii. PMID: 21601782
  2. Catherine C. Motosko et al. Physiologic changes of pregnancy: A review of the literature. Int J Womens Dermatol. 2017 Dec; 3(4): 219–224. PMID: 29234716
  3. Oriana Valenti et al. Fetal cardiac function during the first trimester of pregnancy. J Prenat Med. 2011 Jul-Sep; 5(3): 59–62. PMID: 22439077
  4. Amy L. McKenzie et al. Urine color as an indicator of urine concentration in pregnant and lactating women. Eur J Nutr. 2017; 56(1): 355–362. PMID: 26572890
  5. Antônio Arildo Reginaldo de Holanda et al. Ultrasound findings of the physiological changes and most common breast diseases during pregnancy and lactation. Radiol Bras. 2016 Nov-Dec; 49(6): 389–396. PMID: 28057965
  6. Natalia C. Orloff, Julia M. Hormes. Pickles and ice cream! Food cravings in pregnancy: hypotheses, preliminary evidence, and directions for future research. Front Psychol. 2014; 5: 1076. PMID: 25295023
  7. Filipov E, Borisov I, Kolarov G. [Placental location and its influence on the position of the fetus in the uterus]. Akush Ginekol (Sofiia). 2000;40(4):11-2. PMID: 11288622
  8. Priya Soma-Pillay et al. Physiological changes in pregnancy. Cardiovasc J Afr. 2016 Mar-Apr; 27(2): 89–94. PMID: 27213856
Read on app