ஓவ்வொரு பேணும் தாயாகும் கனவு காண்கிறாள். சிலரால் தாயக முடிகிறது, சிலருக்கு அது கனவாகவே இருந்து விடுகிறது. சில பெண்கள் எளிதில் கர்ப்பம் தரிக்கிறார்கள் ஆனால் சிலர் கர்ப்பம் தரிப்பதற்கு பல இன்னல்களை எதிர்கொள்கிறார்கள். கர்ப்பம் தரிப்பதில் உங்களுக்கு ஏதேனும் சிக்கல் இருந்தால், நாங்கள் பகிர்ந்துகொள்ளும் பின்வரும் தகவல்கள் உங்களுக்கு உதவலாம்

  1. ஒரு மகளிர் மருத்துவ வல்லுனரை சந்தியுங்கள் - Meet your gynecologist in Tamil
  2. கர்ப்பம் தரிக்கும் முன்ப்பு உங்கள் உடலை ஆரோக்யமாக வைத்து கொள்ளவும் - Make your body healthy before getting pregnant in Tamil
  3. உங்கள் பாலியல் ஆரோக்யத்தில் கவனம் செலுத்துங்கள் - Focus on your sexual health in Tamil
  4. கர்ப்பம் தரிக்க முயசிக்கும் பொது இதை தவிர்க்க வேண்டும் - What to stay away from when trying to get pregnant in Tamil
  5. கர்ப்பம் தரிக்க எவ்வாறு உடலுறவு கொள்வது - How to have sex to get pregnant in Tamil
  6. கர்ப்பம் தரிப்பதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் - How long does it take to get pregnant in Tamil
  7. உதவிக்கு அணுகும் முன் எவ்வளவு காலம் நாம் கர்ப்பம் தரிக்க முயற்ச்சி செய்யலாம் - How long to try to get pregnant before getting help in Tamil

கர்ப்பம் தரிப்பது என்பது அதிகமாக உங்கள் உடலை சார்ந்தது.கர்ப்பம் தரிக்கும் முன் ஒரு முறை மகளிர் மருத்துவ வல்லுனரை சந்தித்து முழுமையாக மற்றும் தெளிவாக கர்ப்பம் தரிப்பதின் பின்னணி மற்றும் செயல் பற்றி தெரிந்தது கொள்ளவும். அதற்க்கு தேவைப்படும்  ஒரு சில சோதனைகள் செய்ய வேண்டும். இந்த சோதனைகள் உங்கள் உடல் கர்ப்பம் தரிக்க தயார அல்லது இல்லையா என்று தெளிவு படுத்தும். உங்கள் உடலில் ஏதேனும் அசாதாரணத் தன்மை இருந்தால் அதற்க்கு  ஆரம்ப கட்டத்தில் சிகிச்சை எடுத்து சரி செய்தது விடலாம் 

Women Health Supplements
₹719  ₹799  10% OFF
BUY NOW

எந்த ஒரு வேலை செய்யும் முன் அதற்க்கு ஒரு திட்டத்தை உருவாக்குவது அவசியம். அதேபோல், உங்கள் உடலையும் மனதையும் கர்ப்பத்திற்கு முற்றிலும் கவனமாக திட்டமிட்டு தயார் படுத்த வேண்டும்  இதற்கு, நீங்கள் ஒரு சில முக்கிய விஷயங்கலிளுர்ந்து  தொடங்க வேண்டும். வற்றில் ஒன்று ஃபோலிக் அமிலத்தின்அ தொடந்து உட்கொள்ளல் ஆகும். ஒரு மாதத்திற்கு ஃபோலிக் அமிலம் (வைட்டமின் பி 9) கூடுதல் எடுத்துக்கொள்ள வேண்டும். வைட்டமின் B9 கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல சிக்கல்களை தடுக்கிறது. தவிர, ஒரு ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும் இது உதவுகிறது. திக உடல் எடையைக் இருந்தால்  உடலில் நிறைய நோய்கள் ஏற்படும். இதனால் தான் உடலை  ஆரோக்கியமாக வைத்திருப்பது முக்கியம் என்று கூறுகிறார்கள். உடல் ஆரோக்கியமாக வைத்து கொள்ள  சில வழிகள் பின்வருமாறு

தாரளமாக தண்ணீர் குடியுங்கல் - Drink plenty of water in Tamil

தண்ணீர் நம் உடல் ஆரோக்யத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. உடலில் நீர் வற்றினால்,அனைத்து உடல் பாகங்களும் அதன் செயல்பாட்டை இழக்கிறது.கருத்தரிக்க வேண்டும் என்றால் உடலின் அனைத்து பாகங்களும் சரிவர செயல்பட வேண்டியது அவசியம். போதுமான அளவு தண்ணீர் அருந்தினால் கர்ப்பப்பை ஆரோக்யமாக இருக்கும் . இது கர்ப்பப்பை வாய் திரவியத்தின்  உற்பத்தியை அதிகரிக்கிறது, இது விந்தணுக்களுக்கு ஒரு வழியை வழங்குவதோடு, முட்டைக்கு வந்து சேர உதவுகிறது  எனவே, கருத்தரிக்க, தினமும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம்

ஒரு ஆரோக்கியமான முறைபட்ட வழியை உருவாக்குங்கள் - Get a healthy routine in Tamil

ஒரு முறையான ஆரோக்யமான வழக்கம் பல நோய்களில் இருந்து பாதுகாக்கும் .வெற்றிகரமாக கர்ப்பம் தரிக்க உங்கள் தினசரி பழக்கவழக்கத்தை கீழே கூறப்பட்டுள்ளது போல மாற்றவும் :

போதுமான அளவிற்கு தூங்குங்கள் 

ஒரு ஒழுங்கான அழ்ந்த உறக்கம் அனைத்து உடல் பாகங்கள் மற்றும் உள்ளக உறுப்புகளுக்கு ஒழுங்காக மற்றும் திறம்பட  செய்யவதற்கு உதவும் . உடலில்  உள்ள ஹார்மோன்களை சமநிலை படுத்துவதற்கு உறக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. குறைந்த அளவு மெலடோனின் மற்றும் செரோடோனின் (தூக்கத்திற்கான முக்கியமான ஹார்மோன்களின்) கருமுட்டை வெளிவரும் சுழற்சி   மற்றும் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கும் லுடல் கட்டத்தின் கால அளவை குறைக்கிறது  

தொடந்த்து உடற்பயிற்சி செய்யுங்கள் 

தொடர்ந்து செய்யும் உடற்பயிற்சி எளிதாக கருத்தரிக்க உதவும். அதனால்தான் ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க வேண்டும். தினசரி உடற்பயிற்சி கருப்பையை ஆரோக்கியமாக செயல்பட்டு  வைத்திருக்கவும் உதவும். வழக்கமாக செய்யும் ஒரு  உடற்பயிற்சிக் உங்களுக்கு கர்ப்பம் தரிக்கும் வைப்பை தடுக்கும் நோயிலிருந்து மீட்டு எடுக்கலாம்.

மன அழுத்தம் இல்லாமல் இருங்கள்/ மன அழுத்தத்தை போக்குங்கள் 

மன அழுத்தம் கர்ப்பம் தரிப்பதை தவிர்ப்பதில் ஒரு முக்கிய காரணிகள் ஆகும் .யோகா அல்லது தானம் செய்து மான அழுத்தத்தில் இருந்து விடுபடலாம் 

புரதம் மிகுந்த உணவை எடுத்துக்கொள்ளவும் - Eat protein-rich food in Tamil

கருத்தரிப்பில் (கர்ப்பம் தரிப்பதில்) புரதங்கள் முக்கியம். து உடல் ஒரு முக்கியமான ஊட்டச்சத்தாக  கருதப்படுகிறது. அமெரிக்க மருத்துவ கல்லூரியின் மகப்பேறு மருத்துவக் கல்லூரி நடத்திய ஆராய்ச்சியில், செயற்கை கருத்தரித்தல் (IVF) நடைமுறைக்கு உட்படுத்தப்பட்ட பெண்களின் கருவுறுதலின் (இனப்பெருக்க திறனை) ,புரதச்சத்து நிறைந்த உணவை சாப்பிடுவது ஒரு சாதகமான விளைவைக் குடுப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, புரதச்சத்து நிறைந்த மற்றும் குறைந்த மவுசத்து கொண்ட  உணவு பெண்களின் கருமுட்டை தரத்தை மேம்படுத்துகிறது. எனவே, நீங்கள் கருத்தரிக்க திட்டமிட்டால் குறைந்தது மூன்று மாதங்களுக்கு புரதச்சத்து நிறைந்த மற்றும் மாவுசத்து குறைந்த உணவை சாப்பிடுவது நல்லது . நீங்கள் கோழி, முட்டை, குறைந்த கொழுப்பு இறைச்சி, மீன், பால் பொருட்கள், பீன்ஸ் மற்றும் உலர்ந்த பழங்கள் போன்ற பல்வேறு உணவு பொருட்களிலிருந்து புரதத்தை பெறலாம்.

உங்கள் உணவில் கொழுப்பை சேருங்கள் - Include fat in your diet in Tamil

நம் உடலில் கொழுப்பு, குறிப்பாக சுத்திகரிக்க படாத கொழுப்பு தேவை. அது உடலின் செயல்திறனை சரிவர செய்ய உதவுகிறது உடல் ஆரோக்கியமாக கருதப்படுகிறது.  இது நம் இரத்தத்தில் கேட்ட கொழுப்பு அளவு குறைக்கிறது (குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் அல்லது எல்டிஎல்). எல்டிஎல் அதிக அளவில் இருந்தால்  இதய நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. கால்சியம் உறிஞ்ஜி இந்த சுத்திகரிக்க படாத கொழுப்பு எலும்புகளை பல படுத்த உதவுகிறது. எலும்புகள் தவிர, நம் உடலின் மற்ற உறுப்புகளான  கல்லீரல், நுரையீரல், மூளை, நரம்புகள் மற்றும் நோய் எதிர்ப்பு அமைப்பு அனைத்திற்கும் இந்த கொழுப்பு அவசியம் ஆகிறது

கர்ப்பிணிப் பெண்ணின் உடலிற்க்கு  கொழுப்பு அமிலங்கள் தேவைப்படுகின்றன. அவைகள்  ஹார்மோன்கள் சரியாக  செயல்பட  உதவுகின்றன  மற்றும் கருப்பை (குழந்தையை/கருவை  வைத்திருக்கும் ஒரு பேரிக்காய் வடிவம கொண்டது) இரத்த சுழற்சி மேம்படுத்தவும் உதவுகின்றது. இவை கருமுட்டை வெளிவரும் சுழற்சியை ஒழுங்குபடுத்துகின்றன மற்றும் கருப்பை வாயில் (பிறப்பு குழியின் ஒரு பகுதி) ஆரோக்கியமாக வைக்கவும் உதவுகின்றன. இதனால், விந்தணு செல்கள் வெற்றிகரமாக முட்டையுடன் இணைக்க உதவுகிறது. தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய், ஆலிவ் மற்றும் ஆலிவ் எண்ணெய், வெண்ணெய், முட்டை, வெண்ணெய், உலர்ந்த பழங்கள் ஆகியவையில் இயற்கையாக   சுத்திகரிக்கப்பட்ட கொழுப்பு கிடைக்கும் . சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயில் சமைக்கப்பட்ட உணவு நொறுக்கு உணவு உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எனவே, இயற்கையாக கிடைக்கும்  கொழுப்பு நிறைந்த உணவுகளை மட்டுமே உண்ணுதல் முக்கியம்.

மாவுசத்து எடுக்க துடங்குங்கள் - Start taking carbohydrates in Tamil

ஒரு குறிப்பிட்ட அளவு மாவு சத்து  நம் உடலுக்கு முக்கியம். மாவுசத்து கர்ப்பத்திற்கான முக்கிய ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது கர்ப்பத்திற்க்கு மட்டும்  முக்கியமானது என்று இல்லை , நமது உடலில் அடிப்படை வளர்சிதை மாற்றத்தின் (ஆற்றல் உற்பத்தி) செயல்முறைகளில் இது ஒரு முக்கிய பங்கு வகிக்கும். பதப்படுத்தப்பட்ட மற்றும் சீன உணவு போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மாவுசத்து  நிறைந்த உணவுகளை உட்கொள்வது உகந்தது அல்ல . அதற்கு பதிலாக, பச்சை காய்கறிகளையும் பழங்களையும் உண்ண வேண்டும். மாவுசத்தின் இயற்கையான ஆதாரங்கள் சர்க்கரைவள்ளிக் கிழங்கு, தரோ  வேர் ("அர்பி"), பயறுகள் , வாழைப்பழங்கள், மாம்பழங்கள், பீன்ஸ் மற்றும் பிற காய்கறிகள் போன்றவை (அனைத்துப் பழங்களும் மவுசத்து நிறைந்து  இருக்கின்றன.

முழுமையான உணவை எடுத்து கொள்ளுங்கள் - Take complete diet in Tamil

கர்ப்பம் தரிக்கும் முன்னால் உடலை ஆரோக்யமாக வைத்துகொள்வது மிகவும் முக்கியம் .

நீங்கள் சத்தான உணவு எடுத்துக்கொள்ளவில்லை என்றால் ,கர்ப்பம் தரித்திருக்கும் பொது சில சிக்கல்கள் அல்லது இடயுருகள் நிகழலாம் .அந்த சிக்கல்களை தவிர்பதர்க்கும் நீங்கள் அதிக அளவில் கொழுப்பும் புரதமும் நிறைந்த உணவை எடுத்துகொள்ள வேண்டும்.கர்ப்பம் தரிக்கும் முன்னால் உங்கள் இடை குறைக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் கொழுப்பு சத்து குறைவான மற்றும் நார்சத்து நிறைந்த உணவை எடுத்துக்கொள்ளவும்.இதை தவிர மாவு சத்து, புரதம், கொழுப்பு, வைட்டமின் மற்றும் தாதுக்கள் உணவில் சேர்த்து கொள்ளவேண்டும், இதனால் ஹார்மோன் அளவுகள் சமநிலை படுத்தி எளிதில் கர்ப்பம் தரிக்க உதவும்.

கர்ப்பிணி பெறுவதற்கு, உங்கள் துணைவர் மற்றும் உங்களது  பாலியல் ஆரோக்கியத்தை கவனிப்பது முக்கியம். இனப்பெருக்க அமைப்பில் ஏதேனும் சில்க்கல்கள் இருந்தால் கருத்தரிப்பதில் சிரமம் உண்டாகலாம் . அதனால்தான், அவர்கள் உடல் ரீதியாக, மன ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்

ஆண்கள் விந்தணுக்களின் ஆரோக்யத்தை மேம்படுத்த வேண்டும் - Men should boost sperm health in Tamil

ஒரு மனிதனின் விந்துவில் வெளியிடப்பட்ட விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரத்தை அதிகரித்தால் வெற்றிகரம்மாக கருத்தரித்து விடலாம் . உங்கள் விந்துகளில் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, உங்கள் தினசரிப் பழக்கத்தை மேம்படுத்துவது அவசியம். மேலும், கெட்ட பழக்கம் மற்றும் அடிமைத்தனத்திலிருந்து விலகி இருக்க வேண்டியது அவசியம். புகைபிடித்தல், புகைத்தல் மற்றும் மாடு அருந்துதல் ஆகியவை உங்கள் பாலின ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் , ஏனெனில் அவை விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கின்றன. இது தவிர, ஆண்கள் ஆரோக்கியமான எடையை பராமரிக்க வேண்டும்.

ளிக்கும்போது, ​​சூடான தண்ணீரைப் பயன்படுத்தி, விந்தணுக்களை அழிக்கவும், விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைத்து விடும் 

விந்தணுக்களின் எண்ணிக்கையை மேம்படுத்த, நீங்கள் உங்கள் உணவை மாற்றவும் மேம்படுத்தவும் வேண்டும் உங்கள் உணவில் துத்தநாகம், ஃபோலிக் அமிலம், வைட்டமின் சி நிறைந்த உணவு பொருட்கள் ஆகியவை இருக்க வேண்டும் . இந்த சத்துக்கள் விந்து எண்ணிக்கை அதிகரிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இருந்தும்  விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மூன்று மாதங்கள் வரை எடுக்கும்

வெற்றிகரமான கருத்தரிக்க  ஒரு பெண்ணின் பாலின ஆரோக்கியம் மட்டும் முக்கியம் அல்ல அவளது ஆணின் ஆரோக்யத்தையும் பொருத்தது  ஆகவே, ஆண்களுக்கு ஆரோக்கியமான உணவை உட்கொள்வது முக்கியம். விந்தணு உற்பத்தி மற்றும் தரத்தை மேம்படுத்தும் சில ஊட்டச்சத்துக்கள் பின்வருமாறு:

துத்தநாகம்
இது பூசணி மற்றும் கீரைகளில் காணப்படுகிறது. இது எண்ணிக்கை அதிகரிக்கிறது மற்றும் விந்தணுக்களின் இயக்கம் அதிகரிக்கிறது.
வைட்டமின்  சி
இலை காய்கறி மற்றும் சிட்ரஸ் பழங்கள் காணப்படுகின்றன. இது விந்தணுக்கள் ஒன்றாக குவிப்பதை தடுக்கிறது.
செலினியம் மற்றும் வைட்டமின் ஈ
இவை  பாதாம் மற்றும் சியா விதைகளில் உள்ளன ,இவை விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்தும் 
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்
இவை  மீன் எண்ணெய் மற்றும் சியா விதைகளில் காணப்படுகின்றன.இது விந்தணுக்களின் திறனை மேம்படுத்துகின்றன (வெற்றிகரமாக வேலை செய்யும் திறன்).
பால், டோஃபு மற்றும் எடமமை போன்ற சோயா சார்ந்த உணவு பொருட்கள், விந்தணுக்களின் இயல்பைக் குறைத்து, அவற்றில் விந்தணுவை  அழிக்கும் ஜெனிஸ்டீனைக் இருக்கின்றன  என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன
myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Prajnas Fertility Booster by using 100% original and pure herbs of Ayurveda. This ayurvedic medicine has been recommended by our doctors for lakhs of male and female infertility problems with good results.
Fertility Booster
₹892  ₹999  10% OFF
BUY NOW

உங்கள் கருத்தரிப்பு வாய்ப்புகளை அதிக்கரிக்க முயற்ச்சியுங்கள் - Try to improve your fertility in Tamil

உங்கள் உடல் மற்றும் இனபெருக்க ஆரோக்யத்தை மேம்படுத்த, அதிக அளவு பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துகொள்ளவும். எட்டு வருட கால ஆய்வை 18000 பெண்களின் உணவு மற்றும் வளத்தில் நடத்திய பொது கீழ் வரும் எட்டு பொருட்கள் கருத்தரிப்பு வாய்ப்புகளை வளம்பெற செய்யும் என கண்டறியப்பட்டுள்ளது

  • புரித கொழுப்பு எடுக்காத எண்ணெய்
    இது கோட்டைகளிலும், அப்ரிகோட், பாதாம், ஒலிவ் என்னை மற்றும் அவகாடோ எண்ணையில் உள்ளது. இது உடலின் செல்களின்  இன்சுலின் உணர்திறன் அதிகரிக்கிறது மற்றும் அழற்சியை குறைக்க உதவுகிறது. இந்த இரண்டு காரணிகள் உங்கள் கருவுறுதலை மேம்படுத்துவதில் முக்கியம்.

  • ஒரு தரமான இடத்திலிருந்து சால்மன் மற்றும் சார்டின் போன்ற மீன்களை வாங்குங்கள், ஏனெனில் அழுகிய மீன் சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கலாம்.

  • பீன்ஸ், பட்டாணி, மற்றும் கொட்டைகள் போன்ற காய்கறியில் உள்ள புரதங்களை சாப்பிடலாம்.

  • முழு தானியங்கள், காய்கறிகளையும், பழங்களையும் சாப்பிடுங்கள்.

  • முழு பால் மற்றும் முழு எடு உள்ள தயிர் அல்லது தயிர் எடுத்து கொள்ளுங்கள் .

  • ஃபோலிக் அமிலம் மற்றும் மல்டிவைட்டமின்கள் ஆகியவற்றை எடுத்துகொள்ளுங்கள்

  • முழு தானியம், பூசணி, கீரை, தக்காளி மற்றும் பீட்ரூட் போன்ற இரும்புச்சத்து நிறைந்த உணவை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது.

  • தாராளமாக  தண்ணீர் குடிக்கவும்.

  • 20-24 என்ற பிஎம்ஐ (உடல் நிறை குறியீட்டுடன்) பராமரிப்பது ஆரோக்கியமான எடையை குறிக்கும். BMI என்பது உங்கள் எடை மற்றும் உயரத்தின் விகிதத்தை கணக்கிடும் ஒரு எண் ஆகும். அதிக எடையுடன் இருத்தல் சீரற்ற மாதவிடாய் சுழற்சிகளுக்கு உருவாக்கும் .மேலும் அண்டவிடுப்பின் செயல்பாட்டை பாதிக்கலாம். ஆகையால், சுறுசுறுப்பாக இருக்கவேண்டும் மற்றும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும்

  • மேலும் மகளிர் மருத்துவ வல்லுனரிடம்  உங்கள் விரிவான மருத்துவ வரலாற்றை வழங்குங்கள். உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, பி.சி.ஓ.எஸ் (பாலிசிஸ்டிக் கருவுணர் நோய்க்குறி), தைராய்டு பிரச்சினைகள் போன்ற நோய்களுக்கான மருந்து எடுத்து கொண்டு இருந்தாலோ அல்லது  முந்தைய கர்ப்பம் அல்லது கருக்கலைப்பு ஏதாவது இருந்தாலோ, உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும். தவிர உணவு மற்றும் வாழ்க்கை முறை பற்றியும் தெரிவித்து ஆலோசனை பெறவும்

கர்ப்பத்தைத் திட்டமிடுவதற்கு முன், உணவுப் பழக்கவழக்கங்களையும் வாழ்க்கை முறையையும் பெண்கள் மாற்றுவது முக்கியம். கர்ப்பத்திற்காக நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டிய அல்லது நிறுத்த வேண்டிய  பழக்கவழக்கங்களை கீழ் உள்ளவை :

பிறப்பு கட்டுப்பாடு மாத்திரைகள் நிறுத்துங்கள் - Stop taking contraceptive pills in Tamil

நீங்கள் ஏதேனும்  பிறப்பு கட்டுப்பாடு மாத்திரைகள் பயன்படுத்தினால், கர்ப்பம் தரிப்பதற்கு முன் அவற்றை நிறுத்த வேண்டும். சில நேரங்களில், கர்ப்பம் தரிக்க உதவும்வகையில் கருத்தடை முறையின் அமையும் , கருத்தடைகளை நிறுத்துவதன் பின்னர் உங்கள் உடல் கர்ப்பம் பொருந்தக்கூடியதாக இருக்கும் . நீங்கள் பிறப்பு கட்டுப்பாட்டிற்கு  காப்பர் டி பயன்படுத்துகிறீர்கள் என்றால், அதை நீக்க பிறகு உங்கள் உடல் கருத்தரிக்க தயாராக இருக்கும். ஆனால், நீங்கள் பிறப்பு கட்டுப்பாட்டை ஹார்மோன் மாத்திரைகள் பயன்படுத்தி வந்தால் , உங்கள் உடல் கர்ப்பம் தரிக்க தயார் படுத்தி கொள்ள சிறிது நேரம் எடுக்கும். பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள் மிக நீண்ட காலமாகப் பயன்படுத்திக் கொண்ட பெண்கள் கருத்தரிக்க நீண்ட காலம் எடுக்கலாம். பொதுவாக, மாத்திரைகளை நிறுத்திவிட்டால் , உங்கள் உடலுக்கு கர்ப்பம் அடைய 6-8 வாரங்கள் தேவைப்படும்

உடலுறவு கொள்ளும் போது ஆணுறை பயன்படுத்த வேண்டாம். நீங்கள் கர்ப்பமாக விரும்பினால், நீங்கள் எந்த வகையான பிறப்பு கட்டுப்பாட்டு முறையை உடனடியாக நிறுத்த வேண்டும்

கர்ப்பம் தரிப்பதற்கு திட்டம் இடும் பொது எதை தவிர்க்க வேண்டும் ? - What to avoid when trying to get pregnant in Tamil

அறிவியல் ஆய்வுகளின் படி மது குடிப்பதனால் பெண்களுக்கு கருத்தரிப்பு வாய்ப்புகளை குறைக்கிறது. ஆய்வாளர்களின் படி ஒரு பெண் மது அருந்தினால், வளமான காலத்தில் உடலுறவு கொண்டால் கூட அவள் கர்ப்பம் தரிக்கும் வைப்புக்கள் குறைவாகவே உள்ளது 

உண்மையில், ஒரு வாரத்திற்கு ஐந்து நாட்களுக்கு மதுபானம் குடித்தால், குழந்தை உருவாகும் வாய்ப்புகளை குறைந்து போகும். இது கடினமாக இருக்கலாம், ஆனால் நீங்கள் ஒரு குழந்தை பெற விரும்பினால் நீங்கள் மற்றும் உங்கள் துணைவர் இருவரும் மது, விஸ்கி, ஸ்கோட்ச் அல்லது மது வகை சார்ந்த பானங்கள் ஆகியவற்றிலிருந்து விலகி இருக்க வேண்டும். அவரது விந்து தரத்தை குறைக்க வேண்டாம் என்று கருதினால் அதிகமாக மது அருந்த கூடாது என்று உங்கள் துணைவரிடம் எடுத்துரைக்கவும். அதிக மது குடிப்பதால் இரத்த ஓட்டத்தில் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரிக்கிறது, இது விந்தணு திரவியம் மற்றும் விந்தணுக்களின் குறைத்து விடும். அதிகப்படியான குடிப்பழக்கம் உங்கள் உடலுறவு செயல்திறனை பாதிக்கும். இது தவிர, உங்கள் துணைவர் மற்றும் நீங்கள் காபி குடிப்பது மற்றும் புகைபிடித்தலை குறைக்க வேண்டும்.

கர்ப்பம் தரிக்க நீங்கள் திட்டம் இட்டு இருந்தால் அதற்க்கு சில தவிர்க்க படவேண்டிய உணவுகள் உள்ளன. அவை:.

சர்க்கரை
வல்லுனர்களின் படி சர்க்கரையில் இருக்கும் மாவுசத்து உடலுக்கு தீங்கு விளைவிக்கும். இதனால் உடலில் இன்சுலின் அளவை சரி படுத்துவது. அதனால் கர்பிணி பெண்கள் அதிகமான சர்க்கரை எடுத்துகொள்ள கூடாது. அதனால் சுத்திகரிக்கப்பட்ட பின்பு சர்க்கரை கொண்ட உணவு பொருட்களிலுருந்து விலகி இருப்பது நல்லது

பாதரசம்-மெர்குரி

மீன்கள் புரத சத்து நிறைந்தவை ஆனால் சில சமயம் அதில் அதிக அளவு பாதரசம் காணப்படும். பாதரசம் அதிக அளவில் இரத்தத்தில் கரைந்துவிட்டால் உங்கள் வளமையை அது பாதிக்கலாம். கர்ப்பம் தரிக்கும் முன்னால் அல்லது கர்ப்பம் தரித்திருக்கும் பொது அதிக அளவில் பாதரசம் கொண்ட உணவை நீங்கள் எடுத்து கொண்டீர்கள் என்றால், கருவில் இருக்கும் குழந்தையின் மூளை மற்றும் நரம்பியல் அமைப்பை அது பதித்து விடும் .

கர்ப்பம் தரிப்பதற்கு இந்த மாத்திரைகள் எடுத்துகொள்வதை தவிர்க்கவும் - Stop taking these medicines to get pregnant in Tamil

ஒரு சில மருந்துகள் கருத்தரிப்பில் தீங்கு விளைவுகளை ஏற்படுத்துகின்றன. நீங்கள் பின் வறும் மருந்துகள் ஏதேனும் எடுத்துகொண்டிருந்தால் , கருத்தரிக்க திட்டம் இடும் முன்  முன் உங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.

  • எதிர்ப்பு அழற்சி மருந்துகள்
    இவை இப்யூபுரூஃபன் அல்லது ஆஸ்பிரின் போன்ற சிட்டை இல்லாமல் கிடைக்கும்

  • கீமோதெரபி
    புற்றுநோய்க்கான சிகிச்சையில் கீமோதெரபி செய்யும்போது பயன்படுத்தப்படும் மருந்துகள் நிரந்தர கருப்பை சிதைவு  ஏற்படுத்தும்.
  • நரம்பியல் மருந்துகள்
    இவை உங்கள் மாதவிடாய் காலங்களில் (மாதவிடாய் சுழற்சிகள்) தடுக்கக்கூடிய ஆன்டிசைகோடிக் மருந்துகள் ஆகும் இதனால்  மற்றும் மலத்டுதன்ம்மை  ஏற்படலாம். 
  • ஸ்பைரோனோலாக்டோன்
    இந்த மருந்து உடலில் திரவம் தக்கவைப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.இந்த மருந்தின் விளைவுகள் நிரந்தரமல்ல மாற்றி ,இத்தை நிறுத்திய பிறகு சில மாதங்களில் கருவுற்று விடலாம்  

  • வலி நிவார்ணிகள்

  • மனசோர்வை குறைக்கும் மருந்துகள்

உங்கள் துணைவர் பின்வரும் மருந்துகளில் ஏதேனும் ஒன்றை எடுத்துக் கொண்டால்,  அதனை சரிபார்த்து மருத்துவரை அணுகவும் வேண்டும்:
  • டெஸ்டோஸ்டிரோன்
    இயற்க்கைக்கு பதிலாக செயற்கை டெஸ்டோஸ்டிரோன் (கம்ப்லேமேண்டரி டெஸ்டோஸ்டிரோன் என்றும் அழைக்கப்படுகிறது) இயற்கை டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி பாதிக்கிறது,  இதையொட்டி,  விந்து உற்பத்தி குறைகிறது .
  • அனபோலிக் ஸ்டெராய்டுகள்
    இது தசை வளர்ச்சி அதிகரிக்க மற்றும் உடல் கொழுப்பு குறைக்க பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்த மருந்தைப் பயன்படுத்துவது கருத்தரிப்பையும் பாதிக்கலாம். எனவே, உங்கள் துணைவர் ஒரு பாடிபில்டர் என்றால், அவர் உடல் கட்டமைப்பை முயற்சிகள் நிறுத்த வேண்டும்.
  • மனச்சோர்வு மற்றும் ஆன்டினேசிட்டி மருந்துகள்
    மன சோர்வு மற்றும் மன அழுத்தத்தின் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் சில மருந்துகள் இனப்பெருக்கத்தின் வழியை தடுக்கலாம் மற்றும் விந்தைகள் இயக்கத்தை குறைக்கலாம் 
  • பூஞ்சாண தடுப்பு  மருந்துகள்
    கெஸ்டோகனசோல் எனபட்டும் பூஞ்சான் தடுப்பு மறுத்து வாய்வழி மாத்திரையாகப் எடுத்துகொண்டால் , டெஸ்டோஸ்டிரோன் மற்றும் விந்து உற்பத்தியை பாதிக்கலாம்.

கர்ப்பம் தரிக்க உடலுறவு கொள்வது அவசியம்  . இது கர்ப்பத்தின் அடித்தளம் / அஸ்திவாரம் என கருதப்படுகிறது. நீங்கள் மற்றும் உங்கள் துணைவர் இருவரும்  உடலுறவு கொண்டால் மட்டுமே கர்ப்பம் சாத்தியமாகும். ஆனால், நீங்கள் எளிதில் கர்ப்பமாக, அதை சரியான முறையில் செய்ய வேண்டும். கர்ப்பமாக பெறுவதற்கான சரியான நேரம் ,உடலுறவு, கருவுறுதல் காலம், கருமுட்டை வெளிவரும் சுழற்சி, பாலின நிலைகள் ஆகியவற்றை விவரிப்பது கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

லூப்ரிகன்ட்பயன் படுத்துவதை தவிருங்கள் - Do not use a lubricant in Tamil

உடலுறவு கொள்ளும் பொது லூப்ரிகன்ட் பயன்பாட்டை தவிர்க்கவும் ,அது விந்தணுக்களின் திறனை குறைத்து விடுகிறது. லூப்ரிகன்ட் என்பது வெளிப்புறமாக அல்லது மேற்பூச்சுக்கு பயன்படுத்தும் பசைகள் , இதில் விந்தணுக்களை அழிக்கக்கூடிய சில இரசாயனங்கள் உள்ளன. பல ஆய்வுகள் உடலுறவு கொள்ளும்போது லூப்ரிகன்ட் பயன்படுத்தி விந்துக்களின் செயல்திறனை குறைக்கிறது என்பதைக் காட்டுகிறது. லூப்ரிகன்ட் ஒரு உடலுறவுக்கு முன்பு பயன்படுத்தலாம், ஆனால் நீங்கள் கர்ப்பமாக பெற விரும்பினால், நீங்கள் அதை பயன்படுத்தி கூடாது

சரியான நேரத்தில் உடலுறவு கொள்ளுங்கள் - Have sex at the right time in Tamil

கருமுட்டை வெளிவரும் சுழற்சியை நீங்கள்  முழுவதுமாக புரிந்து கொண்டால், அந்த காலத்தில் உடலுறவு கொள்ள  வேண்டும். விந்தணு முட்டையுடன் சேரும் போது , ​​கர்ப்ப காலம் அந்த நாளிலிருந்து தொடங்குகிறது. கருமுட்டை வெளிவரும் காலத்தில் கர்ப்பம்  பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, அந்த காலகட்டத்தில் பெண் கருதுகின்ற என்று முயற்சியில் இருவரும் இறங்க வேண்டும்.

கர்ப்பம் தரிக்க உடலுரவுக்கு பின் இதை செய்யாதீர்கள் - To get pregnant do not do this after having sex in Tamil

பெரும்பாலும் ,பெண்கள் அறியாமல் சில தவறுகள் செய்து விடுகிறார்கள், இதனால் கர்ப்பம் தரிப்பதில் தடை உண்டாகிறது. உடலுறவு கொண்ட பின் செய்ய கூடாதவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது :

உடலுறவு கொண்ட பின் உடனே எழுந்து நிற்பதது

சில பெண்கள் உடலுறவு கொண்ட பின் உடனே எழுந்து நிற்ப்பார்கள், இதனால் விந்தணுக்கள் மேலே ஏறி உடலினுள் செல்லம்மால் வெளியேறும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன. அதனால் உடலுறவு கொள்ளும் போதும் அதன் பிறகும் மல்லாந்து படுக்கவும், அப்போது உடலில் விந்தணு சென்று கருமுட்டையை சந்திக்க ஒரு வாய்ப்பு உண்டாகும்.

உடலுறவு கொண்ட பின் உடனே தன்னை சுத்த படுத்தி கொள்வது

சில பெண்கள் தொற்றுநோயைத் தவிர்ப்பதற்குப் உடலுறவு கொண்ட பின் உடனே அவர்களின் பெண்ணுறுப்பை சுத்தம் செய்வார்கள். .தண்ணீரினால் பெண்ணுறுப்பை சுத்தம் செய்யும் போது, ​​விந்தணுக்கள் அவற்றின் உடலில் இருந்து வெளியே வருகின்றன, இதனால் கர்ப்பம் தரிக்க இயலாமல் போகும் எனவே, கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்க, உடலுறவுக்குப் பிறகு தங்களை சுத்தம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

கர்ப்பம் தரிக்கக சரியான உடலுறவு கோணத்தை தேர்வு செய்யவும் - Choose the right sex position to get pregnant in Tamil

நீங்கள் கருத்தரிப்பதற்கு ஒரு குறிப்பிட்ட கோணம் சாதகம்மாக இருக்கும் என்று எந்த விஞ்ஞான ஆதாரமும் இல்லை ஆனால், புவிஈர்ப்பு எதிர்த்து நிற்கும்போது அல்லது பெண் மேல் இருக்கும் பொத்து விந்தணுக்கள் மேல் நோக்கி போவதில் தடங்கல் உண்டாகலாம். அதனால் மிஷனரி கோணத்தில் உடலுறவு கொள்வது சாதகமாக கூறபடுகிறது .பின் வழியே நுழைவதோ அல்லது நாய் போன்ற வடிவத்திலும் முயற்ச்சி செய்யலாம். உடலுறவு கொண்ட பின் குறைந்த பட்சம் 15-20 நிமிடங்கள் படுத்திருக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது, இதனால் விந்தணுக்கள் பயணம் செய்தது கர்பப்பைக்கு சென்று விடும்

உங்கள் கருமுட்டை வெளியேறும் (ஓவ்யுலேஷன்) சுழற்சியை அறிந்துகொள்ளுங்கள் - Know your ovulation cycle in Tamil

கருமுட்டை வெளியேறுவது  (ஓவ்யுலேஷன்)  மற்றும் கருத்தரித்தல் என்றால் என்ன?

ஒவ்வொரு மாதமும், உங்கள் கருப்பைகள் ஒரு முட்டையை வெளியிடுகின்றன, ஒரே  ஒரு முட்டை. இந்த செயல்முறை கருமுட்டை வெளியேறுவது  (ஓவ்யுலேஷன்)  என அறியப்படுகிறது. பின்னர் இந்த முட்டை பால்லோப்பியன் குழாயின் வழியே பயணம் செய்து  விந்தணுக்களுடன் சேர்ந்து கரு உருவாகிறது . இந்த செயல்முறை கருத்தரித்தல் என அறியப்படுகிறது. இந்த சமயத்தில் உங்கள் கருமுட்டை வெளியேறுவதன் சுழற்சியை கண்காணிப்பது அவசியம் , ஏனெனில் உங்கள் வளமான காலம் ஐந்து நாட்களுக்கு மட்டுமே நீடிக்கிறது. உங்கள் கருவில் உள்ள விந்தணுக்களின் ஐந்து நாட்களுக்கு மட்டுமே வாழும், மேலும் உங்கள் முட்டை 12-24 மணிநேரம் மட்டுமே கருவுற்றுவதற்கு தயாராக இருக்கும்.


கருமுட்டை வெளியேறும் சுழற்சியின்  கண்காணிப்பு

ஒவ்வொரு பெண்ணின் கருமுட்டை வெளியேறும் சுழற்சியின்  காலம் அவளது மாதவிடாய் சுழற்சியை பொருத்தது. வழக்கமாக, உங்கள் மாதவிடாய் சுழற்சியின் 12 முதல் 16 நாள் வரையிலான காலப்பகுதி உங்கள் மிக வளமான காலமாக இருப்பதாக கணையியல் நிபுணர் குறிப்பிடுகிறார். 28 நாள் மாதவிடாய் சுழற்சியின் 14 வது நாளில் அண்டவிடுப்பின் நடைபெறுகிறது. இந்த நேரத்தில் உடலுறவு கொண்டால் (செக்ஸ்) கர்ப்பமாகிவிடும் வாய்ப்பு அதிகரிக்கும். எடுத்துக்காட்டாக, உங்கள் மாதவிடாய் சுழற்சியானது மாதத்தின் 30 ஆம் தேதி  தொடங்கினால் அடுத்த மாதம் 14 முதல் 18 ஆம் திகதி வரை உங்கள் அண்டவிடுப்பின் காலம் ஆகும்

நீங்கள் இளம் வயதிநாராக இருந்தா , உங்கள் மாதவிடாய் சுழற்சிகளும், கருமுட்டை வெளிவரும் சுழற்ச்சி  முறை சீராக  இருந்தால், கருத்தரிக்க நீண்ட காலம் எடுக்காது. ஆனால், உங்கள் வயது அதிகரிக்கும்போது, ​​ கர்ப்பத்தில் தாமதம் ஏற்படும். எவ்வாறாயினும், சரியான கன்னக்கோ அல்லது எண்களோ கூறமுடியாது. ஆனால் சில வல்லுனர்கள் 35 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு கர்ப்பம் தரில்க்க நீண்ட காலம் ஆகும் என்கிறார்கள் அத்தகைய பெண்கள் ஆறு மாதங்களுக்கு முயன்றபோதும் கர்ப்பமாக முடியாவிட்டால் ஒரு மருத்துவரை அணுக வேண்டும்.

Ashokarishta
₹359  ₹400  10% OFF
BUY NOW

35 வயதிற்குட்பட்ட பெண்கள், ஒரு வருடம் முயற்சி செய்த பிறகு கூட கருத்தரிக்காத போது ஒரு மருத்துவரை அணுக வேண்டும். 35 வயதிற்கு மேலானவர்கள் ஆறு மாதங்களுக்கு பிறகு கூட கர்ப்பம் தரிக்கவில்லை என்றால் தங்கள் மருத்துவரை அணுகி கர்ப்பம் ஆகாததற்கு காரணங்களை அறிந்து கொள்ள வேண்டும்.

மேற்கோள்கள்

  1. National Health Service [Internet]. UK; Your pregnancy and baby guide.
  2. healthdirect Australia. Getting pregnant. Australian government: Department of Health
  3. Office on Women's Health [Internet] U.S. Department of Health and Human Services; Trying to conceive.
  4. Office on Women's Health [Internet] U.S. Department of Health and Human Services; Preconception health.
  5. Office of Population Affairs. Female Infertility. U.S. Department of Health & Human Services [Internet]
  6. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Pregnancy - identifying fertile days
  7. Better health channel. Department of Health and Human Services [internet]. State government of Victoria; Age and fertility
Read on app