கர்ப்ப சோதனையை மேற்கொள்வது என்பது ஒரு பெண்ணிற்கு ஆவலான மற்றும் பதற்றமான ஒரு தருணம் ஆகும். ஏனெனில் அதுவே ஒரு பெண்ணிற்கு கர்ப்பம் வேண்டுமா வேண்டாமா என்பதை தீர்மானிக்கும் தருணம் ஆகும். கர்ப்ப சோதனை தொகுப்புகள் மற்றும் கருவிகள் சிறியதாகவே இருப்பினும்கூட, அவற்றில் இருந்து வரும் முடிவுகள் வாழ்வை மாற்றக்கூடியதாகவே இருக்கும். அனைத்து கர்ப்ப சோதனை தொகுப்புகளும் கர்ப்ப கால சுரப்பியான மனித கோரியானிக் கொனடோடிராபின் அல்லது ஹெச்.சி.ஜீ என்னும் சுரப்பி பெண்ணின் உடலில் அதாவது இரத்திலோ அல்லது சிறுநீரிலோ உள்ளதா என்பதையே பரிசோதிக்கின்றன. பல விதமான கர்ப்ப சோதனைகள் சந்தையில் இருந்தாலும் கூட, அதன் செயல்முறையின் அடிப்படையில் அவற்றை மக்களும் சுகாதார தொழில்முறையாளர்களும் ஆராய்ந்து உபயோகிக்கின்றனர்.

சிறுநீர் கர்ப்ப சோதனையில், ஒரு துண்டு, கேசட், அல்லது ஒரு மிதவை சாதனம் பயன்படுத்தப்படுகிறது. பிறகு, உற்பத்தியாளர் வழிகாட்டுதல்களின்படி முடிவுகளின் விளக்கங்கள் அறியப்படுகிறது. நாம் சோதனை மேற்கொள்ளும்பொழுது ஏற்படுத்தும் சில தவறுகளால் நாம் எதிர்பார்த்த விளைவுகள் வராமல் போக வாய்ப்புகள் உள்ளன. கர்ப்ப சோதனைகளின் துல்லியம் நூறு சதவீதம் இல்லாத காரணத்தினால், உறுதிபடுத்துகிற கர்ப்ப சோதனை, சுகாதார வசதிக்கூடங்களில், மருத்துவர்களால் மேற்கொள்ளப்படுகிறது. இந்த சோதனைகளில் இரத்த மாதிரி அல்லது அல்ட்ராசவுண்ட் மூலம் முடிவுகளை அறிய முடிகிறது.

ஒரு கர்ப்ப சோதனையின் உள்ளடக்கம் என்ன ?

கர்ப்ப கால சுரப்பியான மனித கோரியானிக் கொனடோடிராபின் அல்லது ஹெச்.சி.ஜீ பெண்ணின் ரத்தத்திலோ அல்லது சிறுநீரிலோ உள்ளதா என கண்டறிதலே கர்ப்ப சோதனையின் அடிப்படைக் கொள்கை ஆகும். எனவே, கர்ப்ப சோதனை என்பது தவறான சொல்வழக்கு ஆகும். ஏனெனில் சோதனையில் கர்ப்ப கால சுரப்பி உள்ளதா என கண்டறியப்படுகிறதே தவிர கரு இருக்கிறதா என்பதை பரிசோதிப்பதில்லை. ஆரம்ப கருவானது கருப்பை உட்புறத்தில் ஒட்டிய பிறகு, நஞ்சுக்கொடி என்ற அமைப்பு சுரப்பதே இந்த கர்ப்ப கால சுரப்பியான மனித கோரியானிக் கொனடோடிராபின் அல்லது ஹெச்.சி.ஜீ ஆகும்.

இதுவே கர்ப்பத்தின் முதன்மை செயல் ஆகும். சிறுநீர் கர்ப்ப சோதனை இல்லாது சுகாதார வசதிக்கூடங்களில், இரத்த மாதிரியை கொண்டு ஹெச்.சி.ஜீ சுரப்பியின் இருத்தலை கண்டறிகின்றனர். மேலும் அல்ட்ராசவுண்ட் மூலம் கருவின் இருத்தலை கண்டறிகின்றனர்.

  1. கர்ப்ப சோதனையின் வகைகள் - Types of pregnancy tests in Tamil
  2. கர்ப்ப சோதனையை எப்பொழுது மேற்கொள்ள வேண்டும்? - When to take a pregnancy test in Tamil
  3. வீட்டில் கர்ப்ப பரிசோதனை - Pregnancy test at home in Tamil
  4. கர்ப்ப சோதனை தொகுப்பை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? - How to use pregnancy test kit in Tamil
  5. கர்ப்ப சோதனை தொகுப்பின் முடிவுகள் - Pregnancy test kit results in Tamil
  6. கர்ப்ப சோதனைகள் எவ்வளவு துல்லியமானது - How accurate are pregnancy tests in Tamil
  7. வீட்டில் கர்ப்ப பரிசோதனை மேற்கொள்ளும் போது எடுத்துக்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கைகள் - Precautions while performing a pregnancy test at home in Tamil
  8. கர்ப்ப சோதனை தொகுப்பின் விலை - Pregnancy test kit price in Tamil
  9. மருத்துவமனையில் கர்ப்ப சோதனை - Pregnancy tests at clinics in Tamil
  10. மருத்துவமனையில் கர்ப்ப பரிசோதனைக்கான செலவு - Clinical pregnancy test cost in Tamil
கர்ப்ப சோதனை: வீட்டில் சோதனை செய்யும் தொகுப்பு, மருத்துவ பரிசோதனை, கட்டணம் மற்றும் முடிவுகள் டாக்டர்கள்

ஹெச்.சி.ஜீ மற்றும் அல்ட்ராசோனோகிராபி (யூஎஸ்ஜீ) அடிப்படையில் கர்ப்ப சோதனைகள் வகுக்கப்படும்:

ஹெச்.சி.ஜீ யின் அடிப்படையில்:

  • இரத்த பரிசோதனை:
    இரத்தத்தில் உள்ள சீரம் ஹெச்.சி.ஜீ ஐ கண்டறிவார். முந்தைய மாதவிடாய் நாளில் (எல்.எம்.பி) இருந்து மூன்று வாரங்கள் கடந்த பின்னர் இந்த சோதனையை மேற்கொள்வார்கள். ரத்த மாதிரிகளைக் கொண்டு மேற்கொள்ளப்படும் சோதனை என்பதால் இந்த சோதனை மருத்துவமனையில் மட்டுமே நடத்தப்படும்.
     
  • சிறுநீர் பரிசோதனை:
    பெண்ணின் சிறுநீரில் ஹெச்.சி.ஜீ சுரப்பி உள்ளதா என கண்டறிதல் இந்த சோதனை ஆகும். இதை முந்தைய மாதவிடாய் நாளில் (எல்.எம்.பி) இருந்து ஐந்து வாரங்கள் கடந்த பின்னர் மேற்கொள்வார்கள். சிறுநீர் கொண்டு மேற்கொள்ளப்படும் சோதனையில்  கீற்றுகள், துண்டுகள் மற்றும் சோதனை சாதனங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்பதால் இந்த சோதனை மருத்துவமனையில் அல்லது வீட்டிலும் மேற்கொள்ளலாம்.

யூஎஸ்ஜீயின் அடிப்படையில்:

பெண்மைப் பிணியியல் மருத்துவர், ஒலி அலைகளை அனுப்பும் மற்றும் பெறும் ஒரு ஆய்வை கொண்டு இந்த சோதனையை நடத்துவார்.

  • ட்ரான்ஸ்வஜைனல் :
    ட்ரான்ஸ்வஜைனல்  யூஎஸ்ஜீயில், ஆய்வை ஒரு பெண்ணின் பிறப்புறுப்பினுள் இரண்டு அல்லது மூன்று அங்குலங்கள் உட்புகுத்தி, உள் இனப்பெருக்க உறுப்புகளை ஆய்வார். இதை முந்தைய மாதவிடாய் நாளில் (எல்.எம்.பி) இருந்து ஐந்து வாரங்கள் கடந்த பின்னர் மேற்கொள்வார்கள். ஆரம்பகால கர்ப்பத்தை அறிய இந்த சோதனை உதவும். இருப்பினும் இந்த சோதனையை ஒன்றிற்கும் மேற்பட்ட முறை செய்தல் கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது.
     
  • ட்ரான்ஸ்அப்டோமினல்:
    ட்ரான்ஸ்அப்டோமினல் யூஎஸ்ஜீயில், ஜெல்லியை அடிவயிற்றுப் பகுதியிலும், இடுப்புப் பகுதியிலும் இடுவார். இது ஒலி அலைகள் சரிவர அனுப்பவும், பெறவும் உதவும். ஒலி அலைகளை மருத்துவர் பெண்ணின் வயிற்றின் மீது அனுப்பும் பொழுது அவை குழந்தையின் மேல் பட்டு திரும்பும். அச்சமயத்தில் குழந்தையின் உருவத்தைத் திரையில் காணலாம். இதை முந்தைய மாதவிடாய் நாளில் (எல்.எம்.பி) இருந்து ஆறு வாரங்கள் கடந்த பின்னர் மேற்கொள்வார்கள்.
Women Health Supplements
₹719  ₹799  10% OFF
BUY NOW

கர்ப்ப சோதனையை எப்பொழுது மேற்கொள்ள வேண்டும் என்பதை அறிவதற்கு முன்பாக, ஒரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சியை பற்றி அறிதல் வேண்டும். மாதவிடாய் சுழற்சியில், முந்தைய சுழற்சியின் பதினான்காம் நாளில் இருந்து இரண்டு அல்லது மூன்று நாட்களில்  சினை முட்டையானது வெளியேற்றப்படும்.

இந்நாட்களை வளமான நாட்கள் என்று கூறுவர். இந்நாட்களில் உடலுறவு மேற்கொள்ளும் பொழுது, கரு  உருவாகுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

சினை முட்டை கருவுற்றால், அது கருப்பையின் உட்புறத்தில் ஒட்டிய ஒரு வாரத்திற்கு பிறகு, நஞ்சுக்கொடி என்ற அமைப்பு மனித கோரியானிக் கொனடோடிராபின் அல்லது ஹெச்.சி.ஜீ என்னும் கர்ப்ப கால சுரப்பியை சுரக்கும். ஒன்பதாம் நாளில் இருந்து இந்த சுரப்பியானது இரத்தத்திலும், சிறுநீரிலும் காணப்படும். மேலும் கர்ப்பம் ஏழாம் வாரம் அல்லது ஒன்பதாம் வாரம் ஆகும் பொழுது இந்த சுரப்பி அதிக அளவில் காணப்படும்.

எனவே, கர்ப்ப சோதனையை மேற்கொள்ள வேண்டுமாயின், முந்தைய மாதவிடாய் சுழற்சியில் இருந்து மூன்று வாரங்கள் கழித்து மேற்கொள்வதே சிறந்த நேரம் ஆகும். மேலும், பெண்மைப் பிணியியல் மருத்துவரை அணுகி அல்ட்ராசவுண்ட் செய்து முடிவுகளை பரிசோதித்துக் கொள்ளலாம்.

(மேலும் விவரங்களுக்கு - மாதவிடாய்க் கால வலியின் சிகிச்சை)

தற்பொழுது, மருந்துக் கடைகளில், தன்னிச்சையான (ஓ.டீ.சி) கர்ப்ப சோதனை தொகுப்புகள் மலிவு விலையில் கிடைக்கின்றன. தர அடையாளம் மற்றும் சோதனைகளின் எண்ணிக்கையைக் கொண்டு தொகுப்புகளின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவரின் விருப்பத்திற்கு ஏற்ப தொகுப்புகளை வாங்கி வீட்டில் இருந்தபடியே கர்ப்ப சோதனையை மேற்கொள்ளலாம்.

மூன்று முறையேனும் பரிசோதித்த பின்னரே முடிவினை உறுதி செய்து கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதிகாலையின் முதல் சிறுநீரில் ஹெச்.சி.ஜீ யின் அளவு அதிகமாக இருக்கும் என்பதால், அப்போது சோதனையை மேல்கொள்வதே சிறந்தது. ஏனெனில், அப்பொழுது தான் உண்மையான முடிவுகள் கிடைக்கும் என்று அறிவியல் வல்லுநர்கள் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் தெளிவாக விளக்குகின்றன,

(மேலும் விவரங்களுக்கு - சிறுநீர் கழிக்கும்பொழுது ஏற்படும் வலியிற்கு சிகிச்சை)

தன்னிச்சையான (ஓ.டீ.சி) கர்ப்ப சோதனை தொகுப்புகள் பயன்படுத்துவதற்கு எளிதாக இருப்பதால் சுயமாக கண்டறிய உதவுகிறது. எனினும் சரியான முடிவுகளை அறிய, சரியான வழிமுறையை மேற்கொள்ள வேண்டும். அறை வெப்பநிலையில்தான் இந்த சோதனையை மேற்கொள்ள வேண்டும். தன்னிச்சையான கர்ப்ப சோதனை தொகுப்புகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் மற்றும் அவற்றில் இருந்து முடிவுகளை எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கான அறிவுறுத்தல்கள், தொகுப்புகளின் பின்புறத்தில் உற்பத்தியாளர்களால் கொடுக்கப்பட்டிருக்கும். அதனை முதலில் படித்து நன்கு புரிந்துகொண்டு பின்னர் இந்த சோதனையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த வழிமுறைகளை பின்பற்றவும்:

  • உங்கள் கைகளை சோப்பினால் கழுவவும், பிறகு தொகுப்பில் கொடுக்கப்பட்ட வழிமுறைகளைப் படிக்கவும்.
  • சிறுநீர் சேகரிக்க ஸ்டீரைல் கண்டைனரை வெளியே எடுக்கவும். நடுநிலை மாதிரியை (சிறுநீரகத்தின் நடுவில் எடுக்கப்பட்டது) பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். ஏனெனில் ஆரம்பத்தில் சிறுநீர் செறிவு அதிகமாக இருக்கும் என்பதால் தான்.
  • நிலையான மேற்பரப்பின் மீது கண்டைனரை வைக்கவும். தொகுப்பில் இருந்து கீற்றுகளை எடுத்து, அதன் வண்ண நிற முனையில் இருந்து அவற்றைப் பிடிக்கவும். அதன் மறு முனையே சோதனை தளம் என்பதால் அதை தொட  வேண்டாம்.
  • காலாண்டு அங்குலம் அளவிற்கு கீற்றுகளை கண்டைனரில் முடக்கவும். குறிப்பிடப்பட்டுள்ள நிறுத்த வரியிற்கு மேலே முடக்க கூடாது.
  • உற்பத்தியாளர் கூறியிருக்கும் நேரத்திற்கு பிறகு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.
  • சில தொகுப்புகளில், கீற்றுகளுக்கு பதில் சிறிய சாதனம் ஒன்று கொடுக்கப்பட்டிருக்கும். அதன் நடுவே உள்ள  இடத்தில், கொடுக்கப்பட்டுள்ள துளிசொட்டியை கொண்டு சிறுநீரை வைக்க வேண்டும். நிலையான மேற்பரப்பின் மீது இந்த சாதனத்தை வைக்க வேண்டும். உற்பத்தியாளர் கூறியிருக்கும் நேரத்திற்கு பிறகு, சாதனத்தின் மறுமுனையில் கோடுகள் தெரிவதைக் காணலாம்.
  • சில தொகுப்புகளில் கண்டைனரும், ட்ராப்பரும் கொடுக்கப்பட மாட்டாது. உறிஞ்சக்கூடிய திண்டு ஒரு முனையிலும், சோதனை சாளரம் (டெஸ்ட் விண்டோ) மறு முனையிலும் கொடுக்கப்பட்டிருக்கும். உறிஞ்சக்கூடிய திண்டின் மீது சிறுநீர் கழித்து, சில மணித்துளிகளுக்கு பிறகு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Prajnas Fertility Booster by using 100% original and pure herbs of Ayurveda. This ayurvedic medicine has been recommended by our doctors for lakhs of male and female infertility problems with good results.
Fertility Booster
₹892  ₹999  10% OFF
BUY NOW

ஒரு சில சோதனை தொகுப்பில் டிஜிட்டல் திரை இணைக்கப்பட்டிருக்கும் என்பதால், இந்த சோதனைகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்ற சந்தேகம் எழாது. மேலும், இந்த தொகுப்பை உபயோகிப்பவர்கள் எளிதில் உரிந்துகொள்ளும் வகையில் ஒரு திரை அமைக்கப்பட்டள்ளது. இந்த திரையில் 'கர்ப்பிணி' அல்லது 'கர்ப்பிணி இல்லை' என்ற வார்த்தைகள் காட்டப்படும். எனினும், பல சோதனை தொகுப்புகள் சுய விளக்கம் அளிப்பதாகவும், நேர்மறை, எதிர்மறை முடிவுகளை நாமே அறிந்து கொள்வதாகவும் இருக்கும். ஒரு சில நேரங்களில், மெல்லிய  கோடுகள் தெரிவதால் குழப்பம் ஏற்படும்.

  • நேர்மறை கர்ப்ப சோதனை:
    சோதனை சாதனத்தில் ஒரு கோடு தெரிந்தால், சோதனை சரியாக நடைபெற்றது என்பதை குறிக்கும். மேலும் இரண்டு கோடுகள் தெரிந்தால், அந்த பெண் கருவுற்றதாக அர்த்தம். இதில் முதல் கோடினை கண்ட்ரோல் எனவும் இரண்டாம் கோடை டெஸ்ட் எனவும் அழைப்பர். பொதுவாக இந்த கோடுகள் நீலம், பச்சை, சிவப்பு என பிரகாசமான வண்ணங்களை கொண்டதாக இருக்கும்.
     
  • எதிர்மறை கர்ப்ப சோதனை:
    சோதனை சாதனத்தில் முதல் கோடு அல்லது கண்ட்ரோல் கோடு மட்டும் தெரிந்தால், சோதனையின் முடிவு எதிர்மறை ஆகும். அதாவது அப்பெண் கர்ப்பம் இல்லை என்பது அர்த்தமாகும். இதற்கு காரணம் கர்ப்பமாக இல்லாத பெண்ணின் சிறுநீரிலோ ரத்திலோ ஹெச்.சி.ஜீ  சுரப்பி இருக்காது. இந்த தொகுப்புகள் அனைத்தும் உடலில் ஹெச்.சி.ஜீ  உள்ளதா என்பதை மட்டுமே கண்டறியும் என்பதால், இந்த சுரப்பியானது இல்லையெனில் ஒரு கொடு மட்டுமே காணப்படும்.
     
  • மெல்லிய கோடு:
    சில நேரங்களில்,சோதனை சாதனத்தில் ஒரு கன்ட்ரோல் கோடும் அதோடு ஒரு மெல்லிய கோடும் தெரிவதை கண்டு பெண்கள் குழப்பம் அடைவர். ஆனால், உற்பத்தியாளர் கூறுவது யாதெனில் - சிறுநீரில் இருக்கும் ஹெச்.சி.ஜீ யின் அளவு குறைவாக இருக்கும்பொழுது கோடுகள் மெல்லியதாக காட்சி அளிக்கும். இருப்பினும் அப்பெண் கர்ப்பமாக இருப்பதே இதற்கு அர்த்தமாகும்.

(மேலும் விவரங்களுக்கு: எப்படி கற்பமாகலாம்)

சுய பரிசோதனையின் முடிவுகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள சில காரணிகளைக் கொண்டு மாறும் வாய்ப்பு உள்ளது:

  • எவ்வாறு சோதனை மேற்கொள்ளப்பட்டது
  • கீற்றுகள் / மாதிரி சாதனங்கள் / உறிஞ்சக்கூடிய திண்டு - இவை அசுத்தமானதால்
  • தவறான டிஜிட்டல் திரை
  • உபயோகப்படுத்திய  சிறுநீரின் அளவு
  • முடிவுகளைக் கண்டறியும் முன் காத்திருக்கும் நேரம்
  • தொகுப்பானது சரியா தவறா என்ற தனிப்பட்ட சார்பு

எனவே மூன்று முறையேனும் சோதனையை மேற்கொண்ட பிறகு முடிவுகளை தீர்மானிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். மேலும் மருத்துவரிடம் சென்று ஒரு முறை பரிசோதித்து கர்ப்பிணியா இல்லையா என்பதனை உறுதி செய்துகொள்ள வேண்டும். நாம் எடுத்துக்கொண்ட சோதனையின் முடிவுகள் உண்மையா பொய்யா என்பது பற்றியும், சோதனையின் முடிவுகளின் தனித்தன்மை மற்றும் உணர்திறன் பற்றியும் மருத்துவர் விளக்கம் அளிப்பார்.

  • உண்மையான எதிர்மறை விளைவு:
    ஒரு பெண் கர்ப்பிணி இல்லை என்பதையும், மேற்கொண்ட சோதனை  எதிர்மறை முடிவுகளை தந்தது என்பதையும் குறிப்பதே உண்மையான எதிர்மறை விளைவு ஆகும்.
     
  • தவறான நேர்மறை விளைவு:
    ஒரு பெண் கர்ப்பிணி இல்லை என்பதையும், ஆனால் அவள் மேற்கொண்ட சோதனை  நேர்மறை முடிவுகளை தந்தது என்பதையும் குறிப்பதே தவறான நேர்மறை விளைவு ஆகும். சமீபத்திய கருச்சிதைவு அல்லது ஆரம்ப கர்ப்ப காலத்தில் கருக்கலைப்பு (கர்ப்ப கால சுரப்பியானது ஆறு வாரங்கள் வரை இரத்தத்தில் காணப்படும்) ஆகிய காரணங்களினால் இத்தகைய விளைவுகளை காணலாம். மேலும் விளைவை தவறாக புரிதல் (ஒரு முற்றிலும் நிறமற்ற கோடை ஒரு நேர்மறையான விளைவாக விளக்கப்படுவது), மன அழுத்தம், மனநல பிரச்சினைகள், வலிப்புத் தாக்கங்கள், உயர் இரத்த அழுத்தம், மற்றும் பார்கின்சன் நோய் ஆகியவற்றிற்காக எடுத்துக்கொள்ளும் மருந்தின் விளைவாகவும் இத்தகைய தவறான நேர்மறை விளைவுகளைக் காணலாம். ஒரு நோய்க்கான மருந்தை எடுத்துக்கொள்ளும்பொழுது அவை உடலில் பல மாற்றங்களை உருவாக்கும். இதன் காரணமாக சில சுரப்பிகளின் அளவுகள் கூடவும் குறையவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே, அச்சமயங்களில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் சரியான விளைவுகளை ஏற்படுத்தாது. மேலும் யூடீஐ (சிறுநீர் பாதையில் நோய்த்தொற்றுகள்), சிறுநீரக நோய்கள், புற்றுநோய், மற்றும் கருப்பை பிரச்சினைகள் போன்ற ஒரு சில மருத்துவ நிலை காரணமாகவும் இவ்வாறு விளைவுகள் காணப்படும்.
     
  • உண்மையான நேர்மறை விளைவு:
    ஒரு பெண் கர்ப்பிணி என்பதையும், மேற்கொண்ட சோதனை  நேர்மறை முடிவுகளை தந்தது என்பதையும் குறிப்பதே உண்மையான நேர்மறை விளைவு ஆகும்.
     
  • தவறான எதிர்மறை விளைவு:
    தவறான எதிர்மறை விளைவு யாதெனில் ஒருபெண் உண்மையில் கர்ப்பிணி, ஆனால் அவள் மேற்கொண்ட சோதனையின் முடிவுகள் எதிர்மறையாக இருத்தல். கருவானது கருப்பையோடு  இணைக்கப்படுவதற்கு முன்பாக உங்களை சோதித்துப் பார்க்கும்பொழுது அல்லது காலாவதியான சோதனை தொகுப்பை உபயோகிக்கும்பொழுது அல்லது குறைந்த தரத்திலான சோதனை கீற்றுகள் பயன்படுத்தும்பொழுது அல்லது காலை எழுந்தவுடன் அல்லாது தாமதமாக சோதனை மேற்கொள்ளும்போது இத்தகைய தவறான எதிர்மறை விளைவுகள் காணப்படும்.

சில நேரங்களில், எத்தனை முன்னெச்சரிக்கைகள் மேற்கொண்டாலும், வீட்டில் கர்ப்ப பரிசோதனை மேற்கொள்ளும் போது தவறான விளைவுகள் வர வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஒரு சோதனையை எடுத்துக்கொள்வதற்கு முன் கவனிக்க வேண்டிய சில முக்கிய குறிப்புகள்:

  • ஒரு கர்ப்ப சோதனை தொகுப்பை வாங்குவதற்கு முன் அதை பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டும். மேலும், எந்த ஒரு தொகுப்பு உண்மையான விளைவுகளைத் தருகிறதோ அதை மட்டுமே வாங்கவும்.
  • காலாவதியாகும் தேதியை சரி பார்க்கவும்.
  • சோதனையை துவங்கும் முன் தொகுப்பை அறையின் வெப்பநிலைக்கு கொண்டுவரவும்.
  • அதிகாலை எழுந்தவுடன் இந்த சோதனையை மேற்கொள்ளவதே சிறந்தது. ஏனென்றால் அப்பொழுது தான் சிறுநீரில் உள்ள ஹெச்.சி.ஜீ யின் அளவு அதிகமாக இருக்கும்.
  • அழுக்கு கைகளால் சிறுநீர் மாதிரியை தொட வேண்டாம். சோதனையை மேற்கொள்ளும் முன் கையை சுத்தமாக கழுவ வேண்டும் என்று அறிவுறுகின்றனர்.
  • நடுநிலையான  மாதிரியை மட்டுமே எடுத்துக்கொள்ளவும்.
  • கீற்றுகளை சொல்லப்பட்ட அளவிற்கு அதிகமாக நனைக்கக் கூடாது.
  • மாதிரிக் குழியில் அளவுக்கு அதிகமான சிறுநீர் எடுக்கக் கூடாது.
  • சொல்லப்பட்டுள்ள நேரம் வரை காத்திருக்கவும்.
  • சந்தேகம் எழும்பொழுது, சோதனையை மீண்டும் ஒரு முறை மேற்கொள்ளலாம்.
Ashokarishta
₹359  ₹400  10% OFF
BUY NOW

பரவலாக உபயோகிக்கப்படும் தொகுப்பின் விலையானது மலிவாகத்தான் இருக்கும். ஒரு தொகுப்பின் சராசரி விலை 50 ரூபாய் ஆகும். மேலும், தொகுப்பில் உள்ள சோதனையின் எண்ணிக்கை மற்றும் தர அடையாளத்தைக் கொண்டு ஒரு தொகுப்பின் விலை 45 -300 ரூபாய் வரையில் கிடைக்கும்.

மேலே கூறியது போல, வீட்டில் எடுக்கப்படும் கர்ப்ப சோதனையானது நூறு சதவீதம் துல்லியமான முடிவுகளை தராது என்பதால், மருத்துவமனை சென்று பெண்மைப் பிணியியல் மருத்துவரை அணுகி பரிசோதித்துக் கொள்வதே சிறந்தது. ஆரம்பத்திலேயே கர்ப்பத்தை அறிந்துகொள்வது மட்டுமல்லாது இடம் மாறிய கர்ப்பத்தையும் (அசாதாரண இடங்களில் அதாவது - கருப்பை இணைப்புக்குழல் அல்லது கருப்பையில் கரு வளர்ச்சியுடன் இணைக்கப்படுவது) முன்பே அறிய உதவி புரிகிறது.

மருத்துவர் இரத்த பரிசோதனை அல்லது அல்ட்ராசவுண்டை பரிந்துரைப்பார். அவரின் பரிந்துரைப்படி, இரத்த மாதிரி எடுப்பார் அல்லது ட்ரான்ஸ்வஜைனல்  அல்லது ட்ரான்ஸ்அப்டோமினல் அல்ட்ராசவுண்டை எடுப்பார். இரத்த மாதிரியின் முடிவுகளை அறிய மூன்று நாட்களில் இருந்து ஒரு வாரம் வரை ஆகும். ரத்த மாதிரியை கொண்டு பரிசோதனை செய்யும் பொழுது, பெண்ணின் ரத்தத்தில் ஹெச்.சி.ஜீ  சுரப்பி உள்ளதா என்பதை மட்டும் அறிய மாட்டார்கள். ஒரு பெண்ணின் ஆரோக்கியம் எந்த நிலைமையில் உள்ளது. கருவை வளர்ப்பதற்கு தேவையான சத்துக்கள் அப்பெண்ணின் உடலில் உள்ளதா என்பதையும் பரிசோதிப்பார்கள். இந்த பரிசோதனையின் முடிவின்படி அந்த பெண்ணிற்கு தேவையான சத்து மாத்திரைகளும் மருந்துகளும் பரிந்துரைக்கப்படும். ஆனால் அல்ட்ராசவுண்டின் முடிவுகள் அவ்வாறு இல்லை. அவற்றின் முடிவின் கரு வயிற்றில் உள்ளதா என்பது உடனே தெரிந்துவிடும்.

மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் ஹெச்.சி.ஜீ கர்ப்ப சோதனை வகையைப் (இரத்தம் அல்லது சிறுநீர்) பொறுத்து, சோதனையின் செலவும் 200 - 500  ரூபாய் வரை இருக்கும். சுரப்பியின் சோதனைகளைக் காட்டிலும் அல்ட்ராசவுண்ட்டின் விலை அதிகமாகவே இருக்கும். அதன் செலவு 600 - 1200 ரூபாய் வரையில் இருக்கும். இருப்பினும் உண்மையான முடிவுகளை அறிய நல்ல சோதனைகளை மேற்கொண்டு, மகளிர் மருத்துவரை அணுகி, அவர் பரிந்துரைக்கும் மருந்துகளையும் மாத்திரைகளையும் எடுத்துக்கொள்வதே வயிற்றில் வளரும் கருவிற்கும், தாயின் ஆரோக்கியத்திற்கும் மிக முக்கியமான ஒன்று ஆகும்.

Dr. Ashita

Dr. Ashita

Obstetrics & Gynaecology
3 Years of Experience

Dr. Alpana Bharti

Dr. Alpana Bharti

Obstetrics & Gynaecology
6 Years of Experience

Dr. Arpan Kundu

Dr. Arpan Kundu

Obstetrics & Gynaecology
7 Years of Experience

Dr Sujata Sinha

Dr Sujata Sinha

Obstetrics & Gynaecology
30 Years of Experience

மேற்கோள்கள்

  1. Office on Women's Health [Internet] U.S. Department of Health and Human Services; Pregnancy tests.
  2. U. S Food and Drug Association. [Internet]. Pregnancy
  3. Better health channel. Department of Health and Human Services [internet]. State government of Victoria; Pregnancy testing
  4. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Pregnancy test
  5. Chard T. Pregnancy tests: a review. Hum Reprod. 1992 May;7(5):701-10. PMID: 1639991
  6. C. Gnoth, S. Johnson. Strips of Hope: Accuracy of Home Pregnancy Tests and New Developments. Geburtshilfe Frauenheilkd. 2014 Jul; 74(7): 661–669. PMID: 25100881
Read on app